இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வயதான ஒருவர் உச்சிவெயில் நேரத்தில் சாலையில்
நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் எடுத்ததால் சாலையோரம்
இருந்த கடையில் தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார். அங்கு கடைக்காரர் தண்ணீர்
இல்லை, காசு இருந்தால் ஜூஸ் தருகிறேன் என்று கூறினார். அதற்கு அவர் ஜூஸ் வாங்கும்
அளவுக்கு பணம் இல்லை, கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும் நான் போய் விடுகிறேன்
என்றார்.
இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
ஒரு சிறுவன் ஐயா, என் வீட்டிற்கு வாருங்கள் தண்ணீர் தருகிறேன் என்று சொல்லி அவரை
அழைத்து சென்றான். அவன் வீடு என்று சொன்னது சாலையோரத்தில் போடப்பட்டிருந்த ஒரு
பந்தல்தான். அதற்குள் ஒரு பெண் இருந்தாள்.
சிறுவன், அந்த பெண்ணிடம் அம்மா
இவருக்கு ரொம்ப தாகமாய் இருக்கிறது, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்றான். அந்த பெண்
நாமோ இங்கு பிச்சை எடுப்பவர்கள், நம்மிடம் தண்ணீர் வாங்கி குடிப்பாரா என்று
கேட்டாள். ஏன் அம்மா அப்படி கேட்கிறீர்கள்? என்று அந்த பெரியவர் கேட்டார்.
ஐயா, நாங்கள் இந்த சாலையோரம்
தங்கியிருப்பவர்கள். நன்றாக இருந்தவர்கள்தான், இவன் அப்பா இறந்துவிட்டதால்
கிராமத்தை விட்டு பிழைப்பதற்கு இங்கு வந்தோம். இவனோ சிறுவன், எனக்கோ உடல்நிலை
சரியில்லாத நிலைமை. அதனால், வறுமையின் காரணமாக இங்கு பிச்சை எடுத்து வாழ்ந்து
கொண்டிருக்கிறோம் என்றாள்.
பிறகு அந்த பெண் கொடுத்த குவளை தண்ணீரை
குடித்து தன் தாகத்தை தீர்த்துக் கொண்டார். இந்த உதவிக்கு நான் ஏதாவது செய்ய
வேண்டும் என்று தனது சட்டை பையில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அச்சிறுவனிடம்
கொடுத்தார்.
ஆனால், இந்த ஒரு ரூபாய் பிச்சை காசு
என்று நினைத்துவிடாதே. இந்த காசு மூலம் உன் வாழ்க்கையே மாறிவிட வாய்ப்புண்டு என்று
கூறி, அந்த காசை சிறுவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
அந்த பெண்ணும், சிறுவனும் இதுவரை நிறைய
பேர் சில்லறை காசுகளை பிச்சையாகத்தான் நினைத்து கொடுத்திருக்கிறார்கள், ஆனால் இவர்
மட்டும் காசை கொடுத்து உன் வாழ்க்கையை மாற்றிவிடும் என்று சொல்கிறாரே என்ற
யோசனையிலேயே அன்று நாள் முழுவதும் இருந்தனர்.
மறுநாள் அந்த சிறுவன் ஒரு முடிவு
செய்து அந்த பழக்கடைக்கு சென்று ஒரு ரூபாய்க்கு இரண்டு எலுமிச்சம் பழங்களை வாங்கி
வந்து, இவர்கள் வைத்திருந்த உப்பை கொஞ்சம் எடுத்து தண்ணீரில் கலக்கி அதற்குள்
இரண்டு எலுமிச்சம் பழங்களை பிழிந்து, ஒரு தாளில் 'தாகம் எடுப்பவர்கள்
குடிக்கலாம்" என எழுதி அந்த குடத்தில் ஒட்டி வைத்து ஒரு அட்டையும் மூடி வைத்து
அதன்மேல் அந்த நசுங்கிய அலுமினிய குவளையும் சேர்த்து வெளியில் வைத்தான்.
அந்த பகுதியில் கூலி வேலை செய்பவர்கள்
குடத்தை பார்த்தவுடன் தன் கையில் வைத்திருந்த சில்லறை காசுகளை போட்டுவிட்டு
குடித்து சென்றனர். மதியத்திற்கு மேல் அந்த சிறுவன் குடத்தை வந்து பார்த்த பொழுது
அதில் சில்லறை காசுகள் இருந்தன. மறுநாள் பழக்கடைக்கு சென்ற சிறுவனிடம்,
பழக்கடைக்காரர் நான் கொஞ்சம் சாமான் தாரேன், நீ எனக்கு அந்த பொருளுக்கான வாடகையை
கொடுத்துடணும் சரியா? என்றார். அதற்கு சிறுவனும் யோசித்து சரி என்றான்.
அவர் ஒரு பெஞ்சு, இரண்டு குடம், டம்ளர்
அது போக ஐந்து ரூபாய்க்கு எலுமிச்சம் பழங்களையும் கொடுத்தார். அன்றும் ஏழை மக்கள்
அவனுக்கு சில்லறைகளை நிறைய போட்டிருந்தனர். அவன் அதை எடுத்துக்கொண்டு
பழக்கடைக்காரருக்கு, வாடகை கொடுத்தது போக கையில் 50 ரூபாய்க்கு மேல் இருந்தது.
நாளடைவில் நல்ல வளர்ச்சியை அடைந்து
அவனே புதிய குடங்களும், மற்ற பொருட்களும் வாங்கிவிட்டான். ஒன்றே ஒன்று மட்டும்
உறுதி எடுத்துக்கொண்டான். ஏழைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதால், அவர்களிடம் அதிக தொகை
கேட்கவில்லை. அந்த இடத்தில் இப்போதும் ஏழைகளுக்காகவே இந்த சேவையை செய்து
வருகிறான்.
நீதி :
வாழ்க்கையில் உள்ள தடைக்கற்களையும்
படிக்கற்களாக எண்ணி முன்னேற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக