இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஏராளமான மூலிகைகளுடன் கலந்துவரும் தண்ணீரில் குளித்து மகிழவும், இயற்கை அழகை ரசிப்பதற்கு ஏற்ற இடமாகவும் உலக்கை அருவி திகழ்கிறது.
இயற்கை எழில் வாய்ந்த உலக்கை அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து 21கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து சுமார் 40கி.மீ. தொலைவிலும் உலக்கை அருவி அமைந்துள்ளது.
சிறப்புகள் :
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற அருவிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டே இருக்கும்.
அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் உள்ள இந்த அருவி, மலை அடிவாரத்தில் சுமார் 2000 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக பாய்கிறது. எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும்.
சற்று தொலைவில் இருந்து அருவித் தண்ணீர் வரும் இடம் பார்ப்பதற்கு ஒரு பெரிய உலக்கை போல் காட்சி தருகிறது.
காடுகள் வழியாகச் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும்.
அருவியை சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை மாறா காடுகளும், மலைகளும், வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன.
உலக்கை அருவி மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தோல் வியாதிகளையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்த அருவி திகழ்கிறது.
இதில் குளிக்கும் வயதானவர்கள் புத்துணர்ச்சி பெறவும், சக்தி பெறவும் உதவுகிறது.
எப்படி செல்வது?
நாகர்கோவிலில் இருந்தும், கன்னியாகுமரியில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.
எப்போது செல்வது?
எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.
ரயில் வண்டி வழியாக :
நாகர்கோவில் ரயில் நிலையம்.
விமானம் வழியாக :
தூத்துக்குடி விமான நிலையம்.
தங்கும் வசதி :
கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
காந்தி மண்டபம்.
பத்மநாபபுர அரண்மனை.
மாத்தூர் தொட்டிப்பாலம்.
திற்பரப்பு அருவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக