>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 24 ஆகஸ்ட், 2019

    உண்மையான வெற்றி...!

     Image result for உண்மையான வெற்றி...!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த செல்வந்தருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொறுப்புகள் அனைத்தையும் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு தான் ஓய்வு பெறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    அவருக்கு ஒரே மகன்தான். மகனை ஒழுக்கமுடன் வளர்த்து வந்தபோதும் அவன் தைரியம் இல்லாமலும் ஒரு சிறு பிரச்சனையை கூட எதிர்கொள்ள பக்குவமின்றி வளர்ந்து வந்தான். மகன் இப்படியிருக்கும்போது அவனிடம் எப்படி வணிகத்தை ஒப்படைக்கமுடியும்? என்று யோசித்தார். பிறகு அவர் தன் மகனை தனக்கு தெரிந்த ஒரு மல்யுத்த பயிற்சியாளரிடம் அழைத்துச் சென்றார்.

    அந்த பயிற்சியாளர் செல்வந்தரிடம், உங்கள் மகனை நான் எனது மல்யுத்த பள்ளியில் சேர்த்துக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் மகனை இரண்டு மாதங்கள் இங்கே விட்டுவிட்டு செல்லவேண்டும்.

    இந்த இரண்டு மாதமும் நீங்கள் அவனை திரும்பிகூட பார்க்கக்கூடாது. 60 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு அவனது முன்னேற்றம் குறித்து திருப்தி ஏற்படும். அதுமட்டுமல்ல பெருமிதமும் ஏற்படும் வண்ணம் அவன் மாறியிருப்பான் என்றார்.

    செல்வந்தருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இவர் தான். எனவே நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு மகனை அங்கே விட்டுவிட்டு சென்றார். அறுபது நாட்களுக்கு மகனைப் பற்றிய எந்த கவலையுமின்றி தனது வணிகத்தில் கவனம் செலுத்தினார்.

    சரியாக இரண்டு மாதங்களுக்கு பிறகு பயிற்சியாளர் ஒரு மல்யுத்த போட்டியை ஏற்பாடு செய்து, அதில் செல்வந்தரின் மகனையும், வேறொரு திறமையான மல்யுத்த வீரரையும் பங்கேற்க செய்தார். போட்டி துவங்கியபோது, தனது மகனுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் வீரரை பார்த்தவுடன், செல்வந்தருக்கு தூக்கி வாரிப்போட்டது.

    நல்ல கட்டுமஸ்தான உடலுடன் மிருக பலம் பொருந்தி காணப்படும் இவரை எங்கே தன் மகன் ஜெயிக்கப்போகிறான் என்று கருதி முகம் வாடிப்போனார். செல்வந்தர் எதிர்பார்த்தது போலவே, எதிராளி விட்ட முதல் குத்திலேயே இவரின் மகன் கீழே சுருண்டு விழுந்தான்.

    ஆனாலும் சில வினாடிகளில் சுதாகரித்துக்கொண்டு எழுந்து, தனக்கு தெரிந்த வித்தையை காண்பித்தான். அப்படியும் எதிராளியின் குத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டு விழுந்தான். இப்படியே பல முறை நடந்தது.

    இறுதியில் செல்வந்தரின் மகன் தோற்றுவிட, எதிராளி ஜெயித்துவிட்டான். பயிற்சியாளர் செல்வந்தரிடம் திரும்பி, உங்கள் மகன் எப்படி பார்த்தீர்களா? அதில் அவன் வீரத்தை கவனித்தீர்களா? என்று கேட்டார்.

    அதற்கு செல்வந்தர், இரண்டு மாதம் பயிற்சி எடுத்தும்கூட பிரயோஜனமில்லையே. அவனுக்கு ஆண்மை, வீரம் இதெல்லாம் இனி வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை என்று கூறிவிட்டார். அதற்கு பயிற்சியாளர், உங்கள் அறியாமையை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. வெற்றி, தோல்வி இதையெல்லாம் மேலோட்டமாக தான் நீங்க பார்க்குறீங்க.

    ஒவ்வொரு முறையும் உங்க பையன் கீழே விழும்போதும், திரும்பி தானாக எழுந்து நிற்கிற தன்னம்பிக்கை அவனுக்கு இருந்ததை கவனிச்சீங்களா? கீழே விழுந்ததைவிட மேலே அதிகம் எழுந்தான்.

    என்னைப் பொருத்தவரைக்கும் அது தான் வெற்றி. ஒரு உண்மையான வீரனிடம் இருக்கவேண்டியதும் அது தான்! கீழே விழுவது தோல்வியில்லை. விழுந்து கிடப்பது தான் தோல்வி. தோல்வியிலிருந்து பாடம் கற்காமல் போனால் அது தான் உண்மையான தோல்வி. இப்போது சொல்லுங்கள் உங்கள் மகனுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? என்றார்.

    செல்வந்தரும், நீங்கள் சொல்வது உண்மை தான். என் மகனுக்கு சுயமாக எழுந்து நிற்கவேண்டும் என்கிற தன்னம்பிக்கை இருக்கிறது இதுபோதும். இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்! மிக்க நன்றி!! என்று கூறிவிட்டு அவருக்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டு மகனை அழைத்துச் சென்றார்.

    நீதி:

    தோல்வியின் போதும், கீழே விழும்போதும் நமக்கு கிடைக்கும் பாடங்களையும், அனுபவங்களையும் வைத்துக்கொண்டு வெற்றிக்கான பயணத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதுதான் உண்மையான வெற்றி!

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக