இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பரிவிர்த என்றால் ' திரும்பிய' அல்லது ' முறுக்கிய' என்று பொருள். பார்ச்சுவ என்றால் ' பக்கவாட்டு' என்று பொருள். அதாவது உடலை பக்கவாட்டில் நன்றாக திருப்பி செய்யக்கூடிய ஆசனம் ஆதலால் இதற்கு பரிவிர்த பார்ச்சுவ கோணாசனம் என்று பெயர்.
செய்முறை:
- முதலில் நேராக நிற்கவும். ( அதாவது மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்கவும்)
- பின் இரண்டு கால்களையும் மூன்று அடி தூரத்திற்கு பக்கவாட்டில் அகட்டி வைக்கவும்.
- இப்பொழுது வலது பாதத்தை வெளிப்பக்கமாக திருப்பி, வலது முழங்காலை மடிக்கவும். வலது காலின் கீழ்ப்பகுதி, அதாவது மூட்டு வரை தரைக்கு செங்குத்தாகவும், வலது தொடைப்பகுதி, தரைக்கு இணையாக கிடைமட்டத்திலும் இருக்க வேண்டும்.
- பிறகு, மூச்சை வெளிவிட்டுக்கொண்டே உடலை வலது பக்கமாக திருப்பி இடது உள்ளங்கையை வலது பாதத்துக்கு பக்கத்தில் தரையில் பாதிக்க வேண்டும்.
- வலது கையானது காதை ஒட்டியவாறு இருக்கவேண்டும். இப்பொழுது தலையை மேல்பக்கமாக திருப்பி உள்ளங்கையை பார்க்கவும்.
- இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் வரை இருக்கவும். சுவாசமானது இயல்பாக இருக்கவும். பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இயல்புநிலைக்கு வரவும்.
- மேலே செய்தது போல உடலை இடதுபக்கமாக திருப்பி இந்த ஆசனத்தை மீண்டும் செய்யவும்.
- இந்த ஆசனமானது வயிற்றுப்பகுதிக்கு நன்கு அழுத்தம் கொடுப்பதால், ஜீரண சக்தி அதிகரிக்கிறது.
- மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
- முதுகுத்தண்டுவடப்பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
- உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது.
- தொடைப்பகுதிக்கு நல்ல நீட்ச்சியையும், உறுதியையும் அளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக