இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அதிகப் புரதச் சத்தை உள்ளடக்கிய குண்டூர் கார சிக்கன்
தேவையான பொருள்கள்:
- சிக்கன் அரைக் கிலோ
- கரம் மலாசா 1 ஸ்பூன்
- ஏலம்/ பட்டை/ கிராம்பு தேவையான அளவு
- இஞ்சி/பூண்டு பேஸ்ட் தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கடுகு தேவையான அளவு
- வெந்தயம் தேவையான அளவு
- துருவிய தேங்காய் கால் மூடி
- சீரகம் ஒன்றரை ஸ்பூன்
- தனியா அல்லது மல்லி விதை மூன்று ஸ்பூன்
- மிளகு 1 ஸ்பூன்
- புளிக்காத தயிர் 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை தேவையான அளவு
- காய்ந்த மிளகாய் 10
- பெரிய வெங்காயம் 100 கிராம்
- தக்காளி 150 கிராம்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
- இப்போது மிளகு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், முழு மல்லி, வெந்தயம், துருவிய தேங்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும்.
- பின்னர் மேல் வறுத்து எடுத்த பொருள்கள் அனைத்தும் நன்கு ஆறியதும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம் ஆகிய அனைத்தையும் பொடியாக நறுக்கி மண் இல்லாமல் கழுவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை அதில் போட்டு நன்கு வதக்கி, பின்னர் இஞ்சி, பூண்டு, கரம் மசாலா ஆகிய அனைத்தையும் சேர்த்து மேலும் நன்கு வதக்கவும்.
- நன்றாக வதங்கி வந்த மாத்திரத்தில் தக்காளி, உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.
- மேற்கண்ட பொருள்கள் அனைத்தும் நன்கு வதங்கிய மாத்திரத்தில் அரைத்த மசாலா, தயிர் ஆகிய அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
- பின்னர் அதில் சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
- ஓரளவு கொதி வந்த மாத்திரத்தில் மூடி போட்டு சுமார் இருபது நிமிடம் சிம்மில் வேகவிடவும்.
- அத்துடன் சிக்கனை அடிக்கடி பிரட்டி விடவும்.
- சில நேரம் வெந்த மாத்திரத்தில் இப்போது எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.
- இந்த சமயத்தில் உப்பை சரி பார்த்துக் கொண்டு தேவைப்பட்டால் சேர்க்கவும்.
- சிக்கன் நன்கு வெந்த பின்னர் மல்லி இலைகளை தூவவும்.
- இதோ இப்போது சூப்பர் சுவையுள்ள குண்டூர் சிக்கன் ரெடி. இதனை புலாவ், சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
- சிக்கனில் கொழுப்புகள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் உள்ளன. எனவே பாடி பில்டர் போன்று தசைகள் வேண்டுமென்பவர்கள், சிக்கனை அதிகம் சாப்பிடலாம். ஆனால் சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள் இதனை தவிர்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக