இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கருப்பான சிவலிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள், பனியால் செய்த சிவலிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள், கலர் மாறும் சிவலிங்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது. தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின் பெயர் அசலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும்.
இங்குள்ள சிவலிங்கத்தின் நிறம் ஒரு நாளைக்கு மூன்று முறை தானாகவே மாறிக்கொள்ளும் பேரதிசயம் தினமும் நடந்து கொண்டு இருக்கிறது.
அசலேஷ்வர் மஹாதேவ் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் வண்ணம் காலையில் சிவப்பாகவும், மதியம் குங்குமப்பூ கலரிலும், மாலையில் மாநிறத்திலும் காட்சியளிக்கிறது.
இங்கு சென்று பார்த்த சில ஆராய்ச்சியாளர்கள், சூரிய ஒளியின் பிரதிபலிப்பால் லிங்கத்தின் நிறம் மாறியிருக்கும் எனக் கருதுகின்றனர். ஆனால் இதுவரையிலும் அதற்கான சரியான காரணத்தைக் கூறும் ஆய்வு நிகழ்த்தப்படவில்லை.
காலையில் செக்கச் சிவந்த நிறத்தில் இருக்கும் இந்த லிங்கம் மதிய நேரங்களில் காவி நிறத்தில் காட்சியளிக்கிறது. அடுத்து இரவு நேரங்களில் கருப்பாகக் காட்சியளிக்கும். லிங்கம் திரும்பவும் காலையில் சிவப்பாக மாறிவிடுகிறது.
இரவு முழுக்க கருப்பு நிறத்தில் இருக்கும் சிவன் பகல் நேரங்களில் பக்தர்களை முழுமையாக ஆசிர்வதிக்கிறார் என்பதற்கான குறியீடாகவே இந்த நிற மாற்றம் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்குக் கீழே புதைந்து கிடக்கிறது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்துகிற ஆலயமாக விளங்குகிறது.
பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இது தான். திருமணம் ஆகாதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணை அமைந்துவிடும் என்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக