உலகின் முன்னணி
ஈகாமர்ஸ் வர்த்தகத் தளமான அமேசான் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்க பல வகையான
சேவைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதி தான் அமேசான் ப்ரைம். அமெரிக்காவில்
நெட்பிளிக்ஸ்-க்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமேசான் ப்ரைம் இந்தியாவில்
அறிமுகம் செய்யப்பட்டது.
அமேசான்
அறிமுகம் செய்த அடுத்தச் சில மாதங்களிலேயே நெட்பிளிக்ஸ் இந்தியாவிற்கு வந்த
நிலையில், அமேசான் தனது திட்டத்தை மாற்றிப் பிராந்திய மொழிகளில் கவனம் செலுத்தி
வர்த்தகம் செய்து வந்தது. நெட்பிளிக்ஸ் இன்னும் பிராந்திய மொழிகளில் பெரிய அளவில்
விரிவாக்கம் செய்யாமல் இருப்பது அமேசானுக்குச் சாதகமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது பிளிப்கார்ட் இத்துறை
சேவைக்குள் நுழைய உள்ளது. வால்மார்ட் வால்மார்ட் இந்தியாவில் முன்னணி ஈகாமர்ஸ்
நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கிய பின்பு பெரிய
திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவிக்காமலிருந்த நிலையில் தற்போது முதலும்
முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வால்மார்ட் தலைமையிலான பிளிப்கார்ட்
2 கோடி வாடிக்கையாளர்கள்
இந்திய
வர்த்தகச் சந்தையைப் பிடிக்க என்னவேண்டுமானும் செய்யத் தாயாராக இருக்கும்
வால்மார்ட் புதிதாக 2 கோடி வாடிக்கையாளர்களைப் பெறும் இலக்குடன் களத்தில்
இறங்கியுள்ளது.
இந்தியாவில்
அமெசான், நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாகப் பிராந்திய மொழி தகவல்களும்,
Live Streaming சேவைகளைப் பிளிப்கார்ட் செயலியில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதன் மூலம்
பிளிப்கார்ட் வாடிக்கையாளர் பிளிப்கார்ட் செயலியில் நீண்ட நேரம் செலவழிப்பது
மட்டும் அல்லாமல் அதிக வர்த்தகத்தையும் பெற முடியும் என வால்மார்ட் நிர்வாகம்
நம்புகிறது.
புதிய பாதை
பிளிப்கார்ட்
செயலியில் கொண்டு வர உள்ள இப்புதிய திட்டத்தின் வாயிலாக ஈகாமர்ஸ் துறையில் மட்டும்
சார்ந்து இருக்காமல் உள்ளூர் மற்றும் சமுக இணைப்புத் தளமாக மாற உள்ளது.
இத்திட்டத்தின்
முதல் படியாகப் பிளிப்கார்ட் ஹிந்தி மொழியில் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன்
பின் படிபடியாக மற்ற மொழிகளிலும் கொண்டு வர பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.
கூட்டணி
இத்திட்டத்திற்காகப்
பிளிப்கார்ட் இந்தியாவில் OTT சேவை அளிக்கும் பல முன்னணி மீடியா நிறுவனங்களுடன்
கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது. இதற்காகத் தனிக் கன்டென்ட் மார்க்கெட்டிங்
டீம்-ஐ பிளிப்கார்ட் உருவாக்க உள்ளது.
இதன் பிடி
Flipkart Videos என்ற தலைப்பின் கீழ் திரைப்படம், வெப் சீரியஸ் மற்றும் இதர
பொழுதுபோக்கு வீடியோவை பிளிப்கார்ட் பட்டியலிட உள்ளது.
கல்யாண் கிருஷ்ணமூர்த்தி
இப்புதிய
சேவையின் மூலம் மொத்த பிளிப்கார்ட் செயலியே மாறப்போகிறது. எங்களது இலக்கே நடுத்தர
மக்களையும், 30களில் இருக்கும் மக்களை அடைவது தான். இதற்காக இத்திடம் பெரிய அளவில்
உதவுவது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும் மேம்பட்ட சேவையை அளிக்க முடியும்
என நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக