Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 7 ஆகஸ்ட், 2019

மகாபாரத போருக்கு சகுனிதான் காரணம் என்று நாம் படித்திருப்போம் – ஆனால் உண்மையில் பீஷ்மர் தான் முழு காரணமாம்!

 Image result for மகாபாரத போருக்கு

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

குரு வம்சமே அழிந்து கிட்டத்தட்ட பூமியின் மக்கள்தொகையை பாதியாக குறைத்த மகாபாரத போருக்கு காரணமாய் இருந்தது சகுனிதான் என்று நாம்படித்திருப்போம்.
ஆனால் உண்மை அதுவல்ல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் போருக்கு காரணமாய் அமைந்தனர்.
அதில் மிக முக்கியமானவர் கங்கை மைந்தர் பீஷ்மர்.
உண்மையில் மகாபாரத போருக்கு முழு காரணமும் பீஷ்மர்தான். மகாபாரத போர் ஒரு சங்கிலித்தொடராய் பல சம்பவங்களின் நீட்சியாய் நடந்தது.
இந்த வினையை முதலில் விதைத்தது பிதாமகர் பீஷ்மர்தான். குரு வம்சத்தை காப்பேன் என சபதமெடுத்த பீஷ்மர் இறுதியில் அதன் அழிவுக்கு அவரே காரணமாய் அமைந்தார்.
பீஷ்மர்
பீஷ்மரின் உண்மையான பெயர் தேவரதன் என்பதாகும். அவர் சாந்தனு மன்னனுக்கும் புனித கங்கைக்கும் மகனாக பிறந்தவர்.
பீஷமர் போர்கலைகளையும், வித்தைகளையும் பரசுராமரிடம் இருந்து பயின்றார். கங்கையை கணை கொண்டு தடுக்கு அழுகும் அளவிற்கு திறமைசாலியான தேவவிரதன் தன் குழந்தை பருவம் முழுவதும் தன் தாயான கங்கையின் அரவணைப்பில்தான் வாழ்ந்து வந்தார்.
பருவ வயதை எட்டியதற்கு பின்தான் தன் தந்தையான சாந்தனு மன்னனிடம் வந்தார்.
பீஷ்மரின் சபதம்
பீஷ்மரின் வாழ்க்கையை மட்டுமின்றி மகாபாரத போருக்கே காரணமாய் இருந்தது பீஷ்மர் எடுத்த இரண்டு சபதம்தான். தன் தந்தைக்கு அவர் விரும்பிய மீனவ பெண்ணான சத்தியவதியை மணம் முடித்து வைக்க தான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பேன் என்று சபதம் பூண்டார்.
மேலும் குருவம்சத்தை காக்க அதன் அரியணையில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சபதம் எடுத்தார்.
தனக்காக மகன் செய்த தியாகத்தை கண்டு கண் கலங்கிய சாந்தனு மன்னன் தேவவிரதனுக்கு அவர் விரும்பும் நேரத்தில்தான் மரணம் வரும் என்ற வரத்தை கொடுத்தார். அதன் பின்னரே அவர் பீஷ்மர் என்று அழைக்கப்பட்டார்.
சபதத்தின் விளைவுகள்
சாந்தனு மன்னன் இறந்த பிறகு அவர் மகன் விசித்திர வீரியன் அரியணை ஏறினான். பீஷ்மர் அவனுடைய சார்பாக நாட்டை பராமரித்து வந்தார்.
ஆனால் விசித்திர வீரியன் திருமணமான சில நாட்களிலியே இறந்துவிட நாடு வாரிசு இல்லாமல் தவித்தது.
அப்போது ராஜமாதாவாக இருந்த சத்தியவதி பீஷ்மரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார்.
ஆனால் பீஷ்மர் தன் சபதத்தில் உறுதியாக இருந்துவிட்டார். விசித்திர வீரியனுக்காக அவர் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து வந்த பெண்களில் ஒருவரான அம்பைதான் பின்னாளில் சிகண்டியாக பிறந்து பீஷ்மரின் மரணத்திற்கு காரணமாய் அமைந்தார்.
இவ்வாறாக பீஷ்மர் ஏற்ற சபதமே பின்னாளில் அவரின் உயிரை பறித்துவிட்டது.
சகுனி
மகாபாரத போருக்கு முழுமுதற் காரணமென கூறப்படும் சகுனியை அவ்வாறு மாற்றியதே பீஷ்மர்தான் என்பது கசப்பான உண்மை.
அதற்கு காரணம் அவர் அஸ்தினாபுரத்தின் அரியணையின் மேல் வைத்திருந்த விசுவாசம்.
கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்க காந்தார நாட்டு மன்னன் சுபாலனின் மகள் காந்தாரியை பெண் கேட்டு சென்றார் பீஷ்மர். கண் தெரியாத மாப்பிளைக்கு பெண் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டாலும் பீஷ்மர் மேல் உள்ள பயத்தால் காந்தாரியை கட்டயாப்படுத்தி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தனர். தன் சகோதரி மேல் அளவற்ற பாசம் வைத்திருந்த சகுனியால் இதனை தடுக்க இயலாமல் மனதிற்குள் வெம்பினார்.
காந்தாரியின் முதல்
திருமணம் காந்தாரி மணம் முடித்து அஸ்தினாபுரம் சென்றதற்கு பிறகு அவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் முடிந்துவிட்டது.
என்பதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்தார் பீஷ்மர். இதனை அறிந்து கடுங்கோபமுற்ற பீஷ்மர் காந்தாரியை சொற்களால் துளைத்தார்.
காந்தாரியின் ஜாதகத்தின்படி அவரின் கணவன் விரைவில் இறந்துவிடுவான் என்பதால் ஒரு ஆட்டுடன் திருமணம் நடத்தி அதனை கொன்றனர். எனவே அந்த ஆடே காந்தாரியின் முதல் கணவனாகும்.
இதனை மறைத்து காந்தாரியை அஸ்தினாபுரத்தின் மருமகளாகா ஆக்கியதற்கு காந்தார நாட்டை நிர்மூலமாக்கினார் பீஷ்மர்.
சகுனியின் சிறைவாசம்
சகுனி அவரின் தந்தை மற்றும் சகோதரர்களை கொல்ல நினைத்த பீஷ்மரை ஒரு வம்சத்தையே அழிப்பது அரியணைக்கு நல்லதல்ல என்று ஜோதிடர்கள் கூறியதால் அவர்களை சிறையில் தள்ளி தினமும் ஒரு கவளம் சாப்பிடும் ஒரு குடுவை நீரும் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
அந்த உணவிற்காக அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு சாகட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால் தங்களுக்கு நேர்ந்த அவமானத்திற்காக பழிவாங்க நினைத்த சுபாலன் அந்த உணவை சகுனிக்கு மட்டும் கொடுத்து உயிர்வாழ செய்தார்.
ஏனெனில் அஸ்தினாபுரத்தை அழிக்க, குறிப்பாக பீஷ்மரை அழிக்க சகுனியின் புத்திசாலிதனத்தால் மட்டும்தான் முடியும் என்று நம்பினார்.
சகுனியின் தந்திரம்
தினமும் தன் சொந்தங்கள் தன் கண் முன்னரே செத்துமடிவதை பார்த்த சகுனி அதற்கு காரணமான பீஷ்மரை அழிக்க எண்ணினார். சகுனியனி தந்தை சுபாலன் இறக்கும்போது சகுனியை அழைத்து அவரின் வலதுகாலை உடைத்தார்.
” நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பீஷமர் நமக்கு செய்த கொடுமை உன் நினைவுக்கு வரவேண்டும்.
நான் இறந்த பின் என் எலும்புகளை எடுத்து ஒரு தாயக்கட்டை செய்துகொள். அது இருக்கும்வரை உன்னை யாரும் வெல்ல இயலாது ” என்று கூறிவிட்டு சுபாலன் இறந்தார். சிறையை விட்டு வெளிவந்த சகுனி கௌரவர்களின் ஆலோசகராக மாறி பீஷ்மரை அழிக்கும் நாளுக்காக காத்திருந்தார்.
இறுதியில் மகாபாரத போரை ஏற்படுத்தி தான் நினைத்ததையும் சாதித்தார்.
சூதாட்டம்
பீஷ்மர் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று சூதாட்ட மண்டபத்தில் திரௌபதியை காக்காமல் போனதுதான்.
எந்த தர்மமும் ஒரு பெண்ணுக்கு அதர்மம் நடக்கும்போது அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
ஆனால் பீஷ்மர் சூத்தின் போது தன் மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டு திரௌபதியை கௌரவர்களிடம் இருந்து பாதுகாக்காமல் விட்டுவிட்டார். இதுதான் பின்னாளில் குருவம்சத்தையே அழித்தது.
அஸ்தினாபுர அரியணையை காப்பேன் என அவர் எடுத்த சபதம்தான் அதன் அழிவிற்கு காரணமானது. பீஷ்மரின் முடிவு
பீஷ்மரின் முடிவு
தான் மேற்கொண்ட சபதத்தால் தன் வம்ச விருட்ஷங்கள் தன் கண் முன்னே சாய்வதை கந்தர் பீஷ்மர்.
இறுதியில் தன் பேரன்கள் கையாலேயே அம்புபடுக்கையில் வீழ்த்தப்பட்டார். போர் முடிந்து 54 நாட்களுக்கு பிறகு அவர் உயிர் உலகை விட்டு பிரிந்தது.
ஒருவன் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் தர்மத்தை கடைபிடிப்பவனாக இருந்தாலும் தான் கொண்ட தர்மத்திற்காக பிற உயிர்களை துன்புறுத்துபவன் நிலை என்னவாகும் என்பதற்கு பீஷ்மரே சிறந்த உதாரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக