இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஸ்ரீ ஆதிசங்கரர் வழிபட்ட தலமாகவும், மேலும் ஊமை, செவிடு, போன்ற குறைகள் மற்றும் பேய், பிசாசு, பில்லி, சூனியம் போக்கும் சக்தியுள்ள அம்மனாக மதுரகாளியம்மன் திருக்கோவில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ளது.
மூலவர் : மதுரகாளி.
தோற்றம் : அருளும்நிலை.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.
காவல்தெய்வம் : அய்யனார்.
தீர்த்தம் : திருக்குளம்.
தல விருட்சம் : மருதமரம்.
ஊர் : சிறுவாச்சூர்.
மாவட்டம் : பெரம்பலூர்.
தல வரலாறு :
சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மன அமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டால் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. சிறுவாச்சூரின் வழிபாடு தெய்வம் செல்லியம்மன் ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள்.
மதுரைக் காளியம்மனோ தான் அதற்கு தக்க வழி செய்வதாகக் கூறித்தங்குகிறாள். வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள். செல்லியம்மன் அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோவிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள்.
செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுதான் பிற்பாடு மதுர காளியம்மனுக்கு தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள், வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.
தல பெருமை :
அம்மன் சுமார் 4 அடி உயரமாக வடக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.
இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை. அருளும் நிலையிலேயே காட்சி.
அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம், ஒரு முறை தரிசனம் செய்தவர் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் செய்து மனநிறைவு பெற்றுச் செல்கின்றனர்.
பிராத்தனை :
கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக