Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

சுந்தர் பிச்சை

 Image result for சுந்தர் பிச்சை

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கூகுள் இல்லையெனில் ஓர் அணுவும் அசையாது என்பது சாத்தியமாகி கொண்டு வருகிறது. தற்போது ஸ்மார்ட்போன் மக்களிடம் எந்த அளவு பயன்பாட்டில் இருக்கிறதோ, அதைவிட இணையம் பன்மடங்கு பயன்படுத்தப்படுகிறது.

இன்டர்நெட்டில் மிகப்பெரிய தேடுபொறியாக-ஆக உள்ளது கூகுள். நாம் பார்த்திராத படங்கள், கேட்டிராத செய்திகள் மற்றும் நமக்கு தெரியாத அனைத்து விஷயங்களையும் கூகுள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஏதேனும் ஒன்றை பற்றிய முழு தகவல்களும் தேவை எனில் கூகுள்-ல் தேடுகிறோம். அதற்கான பதில்கள் சில நொடிகளிலேயே நமக்கு கிடைத்து விடுகின்றன.

கூகுள் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது சுந்தர் பிச்சை அவர்கள் என்பது வரவேற்பிற்குரிய ஒரு உண்மையாகும்.

இவர் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவிற்கு தனக்கான இடத்தை வகித்துள்ளார். கூகுள் என்ற மாபெரும் தேடலுக்கான ஒரு இணையத்தளத்தில் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை என்பது தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமே

தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய சுந்தர் பிச்சை தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராஜன் ஜுலை 12, 1972ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார்.

இவரது தாயார் குழந்தைகள் பிறக்கும் வரை ஒரு சுருக்கெழுத்தாளராக இருந்தார். சுந்தருக்கு ஒரு இளைய சகோதரரும் உண்டு.

சுந்தர் பிச்சை அவர்களின் தந்தை ரகுநாத பிச்சை, சென்னையில் ஒரு மின் பொறியாளராகப் பணியாற்றினார். எனவே, அவரது குடும்பம் அங்கே அஷோக் நகரில் வசித்து வந்தது. இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் கூட இல்லை.

ஆனால், சுந்தர் பிச்சையின் தந்தை, தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தைச் செலுத்தி வந்தார். சுந்தர் பிச்சையின் தந்தை, வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு, அன்று தன் வேலையில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மகன்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது சுந்தர் பிச்சைக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

சுந்தர் பிச்சையின் 10வது வயதில் அவரது தந்தை வீட்டில் ஒரு தொலைப்பேசி வாங்கிய போதுதான் அவர் தொழில்நுட்பத்தை முதலில் அனுபவித்தார். சுந்தர் பிச்சைக்கு எண்களை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொள்ளும் ஒரு அசாதாரணத் திறமை இருந்தது.

சுந்தர் பிச்சைக்கு படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. இவர் பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.

சுந்தர் பிச்சையின் படிப்பு :

சுந்தர் பிச்சையின் தந்தை, தன் மகன்களின் கல்வியின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். சுந்தர் பிச்சை பத்தாம் வகுப்பு வரை ஜவகர் வித்யாலயா பள்ளியில் படித்தார். தன் மேல்நிலைப் படிப்பை சென்னையில் உள்ள வனாவாணி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். ஐடி கரக்பூரில் மெட்டல்லார்ஜிக்கல் பொறியியல் படிப்பை படித்து முடித்தார்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை (எம்.எஸ்)  படித்து பட்டம் பெற்றார். வார்ட்டன் ஸ்கூல் ஆப் பென்சில்வேனியாவில் மேலாண்மைப் பள்ளியில் படித்து மேலாண்மைப் பட்டமும் பெற்றார். அமெரிக்கா சென்று படிப்பை தொடர்ந்த சுந்தர் பிச்சை, தனது பழைய பொருட்களையே உபயோகப்படுத்தினார்.

திருமணம் :

சுந்தர் பிச்சையின் திருமணம், காதல் திருமணமாகும். கல்லூரியில் துவங்கிய இவர்களது காதல் மிகவும் சுவாரஸ்யமானது. ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் போது அஞ்சலி, வகுப்பு தோழியாக அறிமுகமானார். பின்னர் இருவருமே நண்பர்களாக பழகத் துவங்கினர்.

கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது சுந்தர் பிச்சை முதலில் தன் காதலை அஞ்சலியிடம் வெளிப்படுத்தினார். அஞ்சலியும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். பொருளாதார ரீதியாக தன்னை மெருகேற்றிக் கொண்டு பெற்றோரிடம் சம்மதம் வாங்கி இந்திய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு கிரண், காவ்யா என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

கூகுளில் சுந்தர் பிச்சை :
சுந்தர் பிச்சை 2004ஆம் ஆண்டும் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் இங்கு வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கியப் பங்கு வகித்தார். இதே ஆண்டு தான் கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை துவங்கியது. அதற்கு முன் இவர் மேலாண்மை ஆலோசகராக மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

2008ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் Chrome and Apps பிரிவில் மூத்த துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கூகுள் டிரைவ் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு கூகுளின்ஜிமெயில் கூகுள் மேப்ஸ் போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார்.

2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் சுந்தர் பிச்சையை தம் நிறுவனத்தில் பணிபுரிய அழைத்தது. மேலும், பன்மடங்கு வருவாய் தருவதாகவும் கூறியது. கூகுள் நிறுவனம், சுந்தர் பிச்சையை இழக்க விரும்பாமல் அவரின் சம்பளத்தை உயர்த்தி கூகுளில் பணிபுரிய வைத்தது.

2013ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கிய ஆண்டி ரூபின் கூகுளிலிருந்து விலகியவுடன் கூகுளின் நிறுவனரான லாரி பேஜ், சுந்தர் பிச்சையிடம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பொறுப்பையும் ஒப்படைத்தார். 2014ஆம் ஆண்டு கூகுளின் தயாரிப்பு துறையில் தலைமை பொறுப்பில்  சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.

கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின்-யிடம் இணைய உலாவி பற்றி எடுத்துரைத்து இதை வடிவமைப்பதற்கு ஒப்புதல் வாங்கினார் சுந்தர் பிச்சை. இதன்பின், சுந்தர் பிச்சையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. இன்று பரவலாக பயன்படுத்தும் கூகுள் குரோம்சுந்தர் பிச்சை மூலமாக உருவானது. மேலும், சுந்தர் பிச்சையை பற்றி நன்கு அறிந்து கொண்ட கூகுள் நிறுவனம் அவரை தயாரிப்பு பிரிவின் துணை தலைவராக நியமித்தது.

பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு கூகுளின் தலைவர் லாரி பேஜ் ஓய்வு பெற்று, சுந்தர் பிச்சையை கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்தார்.

இன்று சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பெரிய பதவியை பெற்றிருப்பதோடு லாரி பேஜ் வாழ்க்கையில் நெருங்கிய நண்பராகவும் திகழ்கின்றார்.

சுந்தர் பிச்சை ஒரு நாள் மாணவர்களுக்கு புரியும் வகையில் தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை கூறினார். அவர் ஒரு கரப்பான்பூச்சியை மையமாகக் கொண்டு அந்த நிகழ்வை கூறத்தொடங்கினார்.

ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தேன். எனக்கு சற்று தள்ளி இருந்த மேஜையில் ஒரு நண்பர்கள் குழு அமர்ந்து அவர்களுக்குள் பேசியபடி உணவருந்திக் கொண்டிருந்தனர். அந்த சமயம் ஒரு சிறிய கரப்பான் பூச்சி பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்து கொண்டது. அந்த பெண் பயத்துடன் கத்திக் கொண்டே, பதற்றத்துடன் தன் மீது அமர்ந்திருந்த கரப்பான் பூச்சியை தட்டிவிட்டார். ஆனால், அந்த கரப்பான் பூச்சி கீழே விழாமல் அவர் பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது அமர்ந்து கொண்டது. அந்த பெண்ணும் அவரை விட வேகமாகக் கத்திக்கொண்டே அந்தப் பூச்சியை தட்டிவிட்டார். மேலும், அந்தப் பூச்சி பறந்து சென்று அங்கு பணிபுரியும் ஒருவர் மேல் அமர்ந்து கொண்டது. ஆனால் அவரோ அப்பெண்களைப் போல் பதற்றமடையாமல் நிதானமாக சரியான சமயம் பார்த்து அக்கரப்பான் பூச்சியை பிடித்து தூக்கி வெளியே எறிந்தார்.

இதனை பார்த்த நான் சிந்திக்க தொடங்கினேன். அந்த பெண்களின் செயல்களையும், அப்பணியாள் செய்த செயலையும் ஒப்பிட்டு பார்த்தேன். கரப்பான் பூச்சிதான் அந்த பெண்களின் செயல்களுக்கு காரணமா? என்று. ஆனால், அந்த பெண்களின் பயந்த சுபாவம் தான், அவர்களை பதற்றப்பட செய்துள்ளது. அதே நேரம் அந்த பணியாளின் தீர்க்கமான பதற்றமில்லாத சிந்தனையால் தான் அவரால் சரியாக அந்த பூச்சியை பிடிக்க முடிந்தது. அப்போது தான் எனக்கு புரியத் தொடங்கியது. நம்மை சுற்றி வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது. நம்மால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும்.

அதற்கு தேவை மனக்கட்டுப்பாடு தான். எந்தவொரு செயலுக்கும் உடனடியாக முடிவு எடுப்பதை விட அதைப்பற்றி நன்றாக சிந்தித்து முடிவு எடுப்பதுதான் நன்மையைத் தரும் என்றார். இதுபோன்ற பல சிந்தனை கருத்துக்களையும், அவர்கள் சாதிக்கும் வகையில் அவர்கள் ஊக்குவிக்கும் செயல்களையும் மாணவர்களிடையே எடுத்துரைத்து வருகிறார், சுந்தர் பிச்சை. இந்த அளவிற்கு உயர அவரது விடாமுயற்சியும் அவர் கடந்து வந்த சில கடினமான பாதைகளும் மிக முக்கியமான ஒன்று.

அமெரிக்கத் தொழில்நுட்ப துறையில் இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயமே!! தமிழரின் பெருமையை உலகுக்கு வெளிக்காட்டிய இவர் விடாமுயற்சியால் வெற்றி பெற்ற தமிழன் என்ற சிறப்புக்குரியவர்.

சுந்தர் பிச்சை தந்தையின் ஒரு வருட சம்பளத்தின் தொகைக்கும் அதிகமாகவே அக்காலத்தில் விமான பயண சீட்டின் விலையாக இருந்தது. ஆனால், இன்று சுந்தர் பிச்சை நினைத்தால் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் வாங்கும் அளவிற்கு பன்மடங்கு தன் பொருளாதார நிலையை உயர்வடையச் செய்துள்ளார்.

சுந்தர் பிச்சையின் காதல் வாழ்க்கை

ஓர் ஆணின் வெற்றிக்கு பின் பெண் இருக்கிறாள் என்ற கூற்றுக்கு ஏற்ப சுந்தர் பிச்சையின் வெற்றிக்கு பின் தோழியாய், காதலியாய், மனைவியாய் இருந்தவர், இருப்பவர், இருந்துக் கொண்டிருப்பவர் அஞ்சலி பிச்சை !!

யார் இந்த அஞ்சலி?

அஞ்சலி பிச்சை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா என்னும் இடத்தில் பிறந்தார். இவர் பள்ளிப்பருவம் முழுவதும் ராஜஸ்தானிலேயே படித்து முடித்தார். பின்னர் காரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் சேர்ந்தார்.

முதல் சந்திப்பு :

இருவரும் ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும்போது வகுப்புத்தோழியாக அறிமுகமானவர், அஞ்சலி. அதன்பின் இருவருமே நண்பர்களாக பழகத் துவங்கினர்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, அஞ்சலியைப் பார்க்க சுந்தர் பிச்சை அவர் தங்கியிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்வாராம். சுந்தர் அங்கே ஃபிரண்ட் ஆபிஸில் இருப்பவரிடம் அஞ்சலியை பார்க்க வந்திருப்பதாக கூறுவாராம்.

மொபைல் போன் இல்லாத காலக்கட்டம் என்பதால் ஒருவரை அழைக்க வேண்டும் என்றால் வாய்மொழியாக தான் அழைப்பர்.

அங்கே இருப்பவர், அஞ்சலி!! உன்னை பார்க்க இங்கே சுந்தர் வந்திருக்கிறார் என்று கத்துவார். இதை கேட்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்குமாம்.

காதல் :

ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் நட்பைத் தாண்டி ஓர் உணர்வு மேலோங்குவதை உணர்ந்தனர். கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது சுந்தர் முதலில் தன் காதலை வெளிப்படுத்தினார். அஞ்சலியும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும், சுந்தர் பிச்சை மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அஞ்சலி இந்தியாவில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருவரும் ஆறுமாதம் வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலும், பேசாமலும் இருந்தனர். எப்போதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என பேசுவார்களாம்.

இருவரும் தொலை தூரத்தில் இருந்தாலும், சுந்தர் அஞ்சலி மேல் வைத்த காதலும், அஞ்சலி சுந்தர் மேல் வைத்த காதலும் அதிகமானதே தவிர சற்றும் குறையவில்லை.

திருமணம் :

பொருளாதார ரீதியாக தன்னை மேம்படுத்திக் கொண்டபின் இருவரும் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து அஞ்சலியும் அமெரிக்கா சென்றுவிட்டார். தற்போது இவர்களுக்கு கிரண், காவ்யா என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

சுந்தருக்கு பல விஷயங்களில் அஞ்சலி உதவியாக இருந்துள்ளார். மைக்ரோசாஃப்ட், யாகூ, டிவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் சுந்தருக்கு வேலை கொடுக்க முன் வந்தது. அப்போது சுந்தருக்கு கூகுளில் தன் பணியை தொடரலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் உண்டானது.

அப்போது சுந்தரின் மனைவி கூகுளை விட வேண்டாம் என ஆலோசனை வழங்கினார். மனைவியின் ஆலோசனையை ஏற்ற சுந்தர் பிச்சை கூகுளில் தன் பணியை தொடர்ந்தார். இதன்முடிவாக இன்று நாம் சுந்தர் பிச்சையை கூகுளின் CEO ஆக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக