இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தருவனவாக இருக்கின்றன.
அவ்வாறு கிராமங்களில் சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் 'தீக்கோழி பிடி". இந்த விளையாட்டில் ஓடியாடுவதும் உண்டு. உட்கார்ந்து விளையாடுவதும் உண்டு.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் ஒரு போட்டியாளரை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பின் விளையாடும் மைதானத்தை சுற்றிலும் குழந்தைகள் அவர்கள் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம்.
'திடலிலே திரியுது தீக்கோழி... பிடிச்சுக்கோ, பிடிச்சுக்கோ ஓடிவந்து..." என்று எல்லாக் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து ஒருமுறை குரல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் குரல் கொடுத்ததும், முதல் போட்டியாளர் மைதானத்திற்குள் வர வேண்டும்.
மைதானத்திலிருக்கும் குழந்தைகளில் யாரையாவது இலக்காக குறிவைத்து துரத்தி சென்று தொட முயற்சிக்க வேண்டும். போட்டியாளரின் கையில் சிக்காமல் மற்றவர்கள் தப்பி செல்ல வேண்டும்.
பக்கத்தில் தொடுவது போல் வந்துவிட்டால், சட்டென வலது கையை வலது காலுக்குள் கொடுத்து, வலது கையால் மூக்கைப் பிடித்துக்கொள்ளுங்கள். வலது கால் தரையில் படாத வகையில் இடது கையால் பிடித்துக்கொண்டு நில்லுங்கள்.
ஓடுபவர் இப்படி நின்றுவிட்டால், அவரைத் தொடக்கூடாது. மீறி தொட்டாலும் அவர் 'அவுட்" இல்லை.
இப்படி நிற்பதை பார்க்கும்போது, தீக்கோழி போல இருப்பதால் இந்த விளையாட்டுக்கு அந்தப் பெயர் வந்தது.
முதல் போட்டியாளர் தீக்கோழி போல நிற்பவர் அருகில் நின்று, அவர் எப்போது காலை தரையில் வைப்பார், அவரைத் தொடலாம் என கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது விளையாடும் மற்றக் குழந்தைகள் போட்டியாளர் அருகே வந்து 'போக்கு" காட்டி அவரை திசை திருப்ப வேண்டும். அவர்களை தொடும் வேகத்தில் போட்டியாளர் விலகி ஓட, தீக்கோழி போல இருப்பவர் தப்பித்துக் கொள்வார்.
முதல் போட்டியாளர் யாரை தொடுகிறாரோ, அவரே அடுத்த போட்டியாளராக மாற வேண்டும்.
பயன்கள் :
கால்கள் வலுப்பெறும்.
இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக