இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 52 கி.மீ தொலைவிலும், திற்பரப்பிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஓர் அழகிய, உயரமான இடம்தான் மாத்தூர் தொட்டிப்பாலம்.
சிறப்புகள் :
இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர் பெற்ற சுற்றுலாத் தலமுமாகும். மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.
இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயு பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது.
வறட்சியிலிருந்து தப்பிக்கவும், விவசாயத்திற்கு பயன்படுத்தவும் கட்டப்பட்டது மாத்தூர் தொட்டிப் பாலம். இதைத் தொங்கும் கால்வாய் என்றும் தொட்டில் பாலம் என்றும் கூட அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலிருந்து 104 அடி உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன.
ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம். இந்த பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும்.
இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது.
சக்கர நாற்காலியொன்று செல்லக்கூடிய அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியினூடாக பாலத்தின் ஒரு முனையிலிருந்து மறு பகுதிக்குச் செல்லமுடியும்.
இரு மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னை, ரப்பர் மரங்கள், நீல வானம், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே காணப்படும் காட்சிகள் யாவையும் விவரிக்க முடியாத வகையில் அமைந்து அழகாக காட்சியளிக்கிறது.
பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு. அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் உள்ளது.
எப்படி செல்வது?
கன்னியாகுமரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
தூத்துக்குடி விமான நிலையம்.
ரயில் வழியாக :
கன்னியாகுமரி ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.
இதர சுற்றுலாத்தலங்கள் :
கன்னியாகுமரி கடற்கரை.
விவேகானந்தர் பாறை.
திருவள்ளுவர் சிலை.
திற்பரப்பு அருவி.
மகாத்மா காந்தி மண்டபம்.
சிதறால் ஜைன மலை குகை கோயில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக