இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்துள்ள மலை தான் மருந்துவாழ் மலை.இந்த மலை முழுவதுமே மூலிகைகளால் நிறைந்து காணப்படுவதால் மருந்துவாழ் மலை (அல்லது) மருத்துவாமலை என்று பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.
இந்த மலையில் விலை மதிப்பில்லாத மூலிகைகள் மிகுதியாக காணப்படுகின்றன.
மருந்துவாழ் மலையின் சிறப்பு :
மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பகுதிகளை காணலாம். அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருந்துவாழ் மலைக்கு ஒருமுறையேனும் சென்று வாருங்கள்.
ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தின் ஆணிவேராக விளங்கும் மருந்துவாழ் மலையில் மூலிகை ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.
இம்மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரமும், 625 ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டது.
இந்துமாக்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமமாகும் கன்னியாகுமரிக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக மேற்கே தலை வைத்து, கிழக்கே கால் நீட்டி, நீண்டு நிமிர்ந்து நிற்கிறது மருந்துவாழ்மலை.
மலையின் மூலிகை நீர்கள் மலையடிவாரத்தில் உள்ள சிறிய குளத்தில் கலக்கின்றது. இதில் நீராடுபவர்களுக்கு உடலில் உள்ள பல்வேறு பிணிகள் நீங்கி நலம் பெறுகின்றனர். இம்மலையின் மூலிகை காற்று உயிர்கொல்லி நோயினையும் குணப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது.
அகத்திய முனிவர், அத்திரி முனிவர், பரமார்த்தலிங்கேஸ்வரர், தேவேந்திரன் என பல முனிவர்கள் தங்கி தவம்புரிந்த பெருமையினையுடையது. இன்றும் பல சித்தர்கள் மலையின் குகைகளில் வசிப்பதை காணலாம்.
ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் என்னும் மடம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
எப்படி செல்வது?
நாகர்கோவில் நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் உள்ள ர் பேருந்துகள் அனைத்தும் இந்த பகுதி வழியாகச் செல்லும்.
பார்க்க வேண்டிய இடங்கள் :
மலை உச்சியில் பாலாற்று ஓடை
கன்னிமார் சுனை
தேவேந்திரன் சுனை
மலை உச்சியில் ஆஞ்சநேயர் சிலை
எப்போது செல்வது?
பொதுவாகவே வெயில் நேரங்களில் மலை ஏறுவது சிரமமான விஷயம் என்பதால் மாலை வேளைகளில் அல்லது காலைப்பொழுதுகளில் செல்வது சிறந்தது.
ரயில் வண்டி வழியாக :
கன்னியாகுமரி ரயில் நிலையம்
விமானம் வழியாக :
திருவனந்தபுரம் விமான நிலையம்
தூத்துக்குடி விமான நிலையம்
தங்கும் வசதி :
கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக