Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

அமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ - சர்வதேச பிரச்னையாக கருத பிரேசில் அரசு கோரிக்கை

அமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ - சர்வதேச பிரச்னையாக கருத பிரேசில் அரசு கோரிக்கை

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

 

உலகின் மழை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் காடு, பூமிக்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது என்றும் இது சர்வதேச பிரச்னையாக கருதி ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்து வரும் நிலையில், சர்வதேச பிரச்னையாக கருதி உலகநாடுகள் நடவடிக்கை எடுக்க பிரேசில் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9,500 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு தீக்கிரையாகி வருகின்றன. கடந்த ஆண்டு 40,000 முறை வனத்தீ ஏற்பட்ட நிலையில், தற்போது 8 மாத காலத்தில் மட்டுமே 74,000 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

முந்தைய காலங்களை விட கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 88 விழுக்காடு வரை அமேசான் காடுகள் அழிக்கப்பட்டதாக பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. உலகின் கார்பன் டை ஆக்சைடை கட்டுக்குள் வைத்திருப்பதில் அமேசான் காடுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் நிலையில், புவியின் நுரையீரல் எரிந்து வருகிறது என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

பிரேசிலின் சா பாலோ நகரில் இருந்து 2,000 கிலோ மீட்டர் தொலைவில் வனத் தீ பரவி வருகிறது. அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயின் காரணமாக, பிரேசிலின் சாவ் பாலோ நகரமே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமேசான் காட்டுத் தீயால் அரிய வகை உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காட்டுத் தீக்கு என்.ஜி.ஓ.க்கள்தான் காரணம் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ குற்றம்சாட்டியுள்ளார்.

உலகின் மழை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் காடு, பூமிக்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது என்றும் இது சர்வதேச பிரச்னையாக கருதி ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ குறித்து ஊடகங்கள் பெரியளவில் கவனம் செலுத்தாது ஏன் என ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக