இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டமான கரூரில் உள்ள வெண்ணெய்மலையில் மூர்த்தி, தீர்த்தம் மற்றும் தலம் ஆகிய மூன்றினாலும் சிறப்பு பெற்ற தலமாகவும், கருவூராரின் பாதம் பட்ட அற்புத இடமாகவும், ஸ்ரீமுருகப்பெருமான் குன்று தோறும் குடியிருந்து ஸ்ரீபாலசுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார்.
மூலவர் : பாலசுப்பிரமணியர்.
இறைவன் : காசிவிஸ்வநாதர்.
இறைவி : விசாலாட்சி.
தீர்த்தம் : காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.
ஊர் : வெண்ணெய்மலை, வெங்கமேடு அமராவதிவடகரை.
மாவட்டம் : கரூர்.
தல வரலாறு :
முன்னொரு யுகத்தில் பிரம்மதேவனுக்கு தனது படைப்பு தொழிலில் கர்வம் தோன்றியது. ஈசன் அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய காரணத்தால், பிரம்மதேவனால் ஒரு கட்டத்தில் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது.
தன்னுடைய பிழையை உணர்ந்த பிரம்மன், தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார். இதற்கு தீர்வாக வஞ்சிவனத்தில் தவம் இயற்ற இறைவன் கூறினார். இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோக பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார்.
தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள், பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்தது. அருகிலேயே தேனுதீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது காமதேனு. இதனால் தான் இன்றும் வெண்ணெய் மலை பாறை, கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது.
இவ்விடத்தில் நின்றாலே துன்பங்கள் தொலைந்து பந்தபாசத்தை ஒழிப்பதற்குரிய ஞானம் பிறக்கிறது. இம்மலையில் முருகப்பெருமான் பால சுப்பிரமணியராக எழுந்தருளினார்.
தல சிறப்பு :
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வெண்ணெய்மலை முருகன் கோயில் ஆகியவற்றில் மட்டுமே கருவூரார் சித்தருக்கு சன்னதிகள் உள்ளன.
யோகி பகவன் என்பவர் இம்மலையில் தியானத்தில் இருக்கும்போது, அவருக்கு பாலசுப்பிரமணியன் காட்சிதந்து, தமது அருள் வெண்ணெய்மலையில் உள்ளதாக அனைவரும் அறிய செய்யுமாறு கட்டளையிட்டார்.
முருகனின் அருட்கோலம் தரிசித்த பகவன், இது குறித்து கருவூர் அரசனிடம் கூறினார். மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து, முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார்.
சன்னதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் அமைத்தார். முருகன் சன்னதிக்கு வடபுறத்தில் முருகனின் யந்திரம் அமைத்தார்.
இவ்விடத்தில் நின்றாலே துன்பங்கள் தொலைந்து பந்தபாசத்தை ஒழிப்பதற்குரிய ஞானம் பிறக்கிறது. இம்மலையில் முருகப்பெருமான் பால சுப்பிரமணியராக எழுந்தருளினார்.
பிராத்தனை :
மலையின் அடிவாரத்தில் காமதேனுவால் அமைக்கப்பட்ட தேனுதீர்த்தத்தில் ஐந்து தினங்கள் நீராடி முருகனை வழிபட, பிள்ளையில்லா குறை தீர்வதுடன், தோஷங்களும் தீர்கிறது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக