இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பத்த என்றால் 'பிடித்து வைத்தல்'
அல்லது 'நிறுத்திய நிலை' என்று பொருள். கால்களுக்கு மிகச்சிறந்த ஆசனமாக இது
விளங்குகிறது. கால்களின் கோணத்தை இறுதி நிலை வரை மாற்றாமல் பிடித்து
வைத்திருப்பதால் இதற்கு பத்த கோணாசனம் என்று பெயர்.
செய்முறை:
முதலில் கால்கள் இரண்டையும்
முன்புறமாக நீட்டி நேராக நிமிர்ந்து உட்காரவும்.
பின்னர் கால்கள் இரண்டையும் மடித்து
பாதங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு வைக்க வேண்டும்.
பின்னர் இரண்டு கைகளால் கால் பாதங்களை
உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
பின் முதுகுப்பகுதியை நிமிர்த்தி,
மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்தவாறு முதுகை லேசாக பின்னோக்கி வளைக்கவும்.
அடுத்தபடியாக, மூச்சை வெளிவிட்டபடி
முதுகை முன்பக்கமாக வளைத்து நெற்றியால் தரையை தொட முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது, கால்
பாதங்கள் இரண்டும் பிரிந்து விடாமல் உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் புட்டப்பகுதி தரையில் இருந்து
மேலே எழும்பாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாசம் இயல்பாக இருக்க வேண்டும்.
இதே நிலையில் சுமார் 30 வினாடிகள்
இருந்துவிட்டு, பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
(முதலில் செய்யும் பொழுது நெற்றியால்
தரையை தொட இயலாது. அதனால் உங்களால் எவ்வளவு தூரம் முதுகை முன்னோக்கி வளைக்க இயலுமோ
அந்த அளவு செய்யவும். தொடர் பயிற்சியின் மூலம் நெற்றியால் எளிதாக தரையை தொட
இயலும்.)
பலன்கள்:
சிறுநீரக குறைபாடுகளுக்கு மிகச்சிறந்த
ஆசனம்.
இடுப்பு மற்றும் வயிற்றுப்
பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க சிறந்த ஆசனம்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்த்துவர
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பிரசவ கால
பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
குடல் பகுத்தியின் செயல்பாடுகளை
மேம்படுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக