இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த உலகம் முழுவதும் பல மர்மம் நிறைந்த இடங்கள் உள்ளன... அதில் ஒரு சில மர்மமான விஷயங்களுக்கு மட்டும் விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல மர்மம் நிறைந்த விஷயங்களுக்கு இன்றளவும் விடை தெரியவில்லை...
ஆராய்ச்சியாளர்களுமே கண்டுபிடிக்க முடியாத பல மர்ம இடங்கள் உள்ளன.
அவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தாலும் அந்த காரணம் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது.
அந்தவகையில் இன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மமான ஒரு இடத்தை பற்றிதான் இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.
மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதியில் இருந்து பல வகையான வண்ணங்களில் இருந்து வரும் வெளிச்சம்தான் ஆலியா கோஸ்ட் லைட்ஸ்
குறிப்பாக இந்த வகையான வெளிச்சங்கள் சேறு நிறைந்த இடங்களிலும், சதுப்பு நிலமாக உள்ள இடங்களிலிருந்தும் வெளிவருவதாக கூறப்படுகிறது.
இவ்வெளிச்சத்தை அங்கு வரும் மீனவர்கள் பார்த்துள்ளதாக ஆய்வுகள் கூறப்படுகின்றன. மேலும், இது எதனால் ஏற்படுகிறது? என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், இரவில் ஏற்படும் இவ்வெளிச்சத்தினால் பல மீனவர்கள் குழப்பம் அடைந்து வழி மாறி வேறு இடத்திற்குச் சென்றுவிடுகின்றனர்.
எனவே, இந்த வெளிச்சம் அப்பகுதியில் வாழும் மீனவர்களிடையே பெரும் மர்மம் மற்றும் அமானுஷ்யம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
பல வருடங்களாக வெளிவரும் இந்த வெளிச்சத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தால் சதுப்பு நிலங்களிலிருந்து வெளிவரும் மீத்தேன் வாயு என்று கோட்பாடு முறையில் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் மர்மம் நிறைந்த ஒன்றாகவே ஆலியா கோஸ்ட் லைட்ஸ் கருதப்படுகிறது.
எவ்வளவுதான் நாகரீகமும், விஞ்ஞானமும் வளர்ந்திருந்தாலும் இயற்கையை யாராலும் மிஞ்ச முடியாது என்பதை பல விஷயங்களில் இயற்கை நமக்கு உறுதிப்படுத்தி கொண்டேதான் இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக