இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உஷ்ட்ரம் என்றால் 'ஒட்டகம்' என்று
பொருள். இந்த ஆசனம் பார்ப்பதற்கு ஒட்டகத்தை போன்ற தோற்றம் அளிப்பதால் இதற்கு
'உஷ்ட்ராசனம்' அல்லது ஒட்டக ஆசனம் என்று பெயர்.
செய்முறை:
- முதலில் தரையில் முட்டி போட்டு நிற்கவும்.
- முழங்கால்கள், கணுக்கால்கள் தரையில் படுமாறு இருக்க வேண்டும். கால் பாதங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து மேல்நோக்கியவாறு இருக்க வேண்டும்.
- பின்னர், மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு முதுகை பின்னோக்கி வளைத்து இரு கைகளினால் குதிகால்களை பிடித்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர், மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- உங்களால் முதுகை எவ்வளவு வளைக்க இயலுமோ அந்த அளவு வளைக்கவும். தலையை பின்புறமாக தொங்க விடவும்.
- இவ்வாறு செய்யும் பொழுது தொடைப்பகுதியானது உள்பக்கமாகவோ, வெளிப்பக்கமாகவோ சாய்ந்து இருக்க கூடாது. நேராக தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும். இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் அல்லது 30 வினாடிகள் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
- பின்னர் மெதுவாக ஒவ்வொரு கையாக மேலே எடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
பலன்கள்:
- தைராய்டு சுரப்பிகள் நன்கு தூண்டப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது.
- கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.
- சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
- முதுகுத்தண்டிற்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது. இதனால் வளையும் தன்மை அதிகரிக்கிறது. முதுகுத்தண்டு வலிமையாகிறது.
- தோள் மூட்டுகளுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
- மேலும், கூன் விழுந்த முதுகை நேராக்கவும் இந்த ஆசனம் உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக