Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

பெருமாள் கோவில்களில் துளசி கொடுப்பதற்கான காரணம் என்ன...?

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.
Image result for பெருமாள் கோவில்களில் துளசி கொடுப்பதற்கான காரணம் என்ன...

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள். மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

பிருந்தா, பிருந்தாவனி,விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா. என்று பல்வேறு பெயர்களில்  அழைப்பார்கள். துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி. துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட். துளசியின் கணவன் பெயர் சங்க  சூடன்.
சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும்  கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

துளசியின் கதை:
கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற  வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது.

இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த மகாலட்மியின் அம்சமான துளசியை உலகில் உள்ள அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  வழிபடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக