இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குளிர்ச்சிக்கு குறைவில்லா இடமான தளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்டுள்ள அழகிய இடம்.சிறப்புகள் :
தளியைச் சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதால் குட்டி இங்கிலாந்து என பெயர் பெற்றது.
தட்பவெட்பநிலை ஆண்டு முழுவதும் மிகவும் குளிர்ச்சியாக உள்ளதால் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியினை லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்தனர்.
அமைதியான, அழகிய சோலையைப் போன்ற தளி கிராமம் 'லிட்டில் இங்கிலாந்து" என்ற பெயரைப் பெருமையுடன் பெற்றிருக்கும் சுற்றுலாத்தலமாகும். இந்த கிராமம் முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள குளிர்ச்சியான தட்பவெட்பநிலை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதால் மலர்கள், காய்கறிகள், கனிகள் பெருமளவில் இங்கு விளைகிறது.
மேலும் இவ்விடத்திற்கு ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்கள ரில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
எண்ணற்ற ஏரிகள், சிறு மலைக்குன்றுகள் மற்றும் மகிழ்ச்சியை உறுதியளிக்கும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றையுடைய தளி ஒவ்வொருவருக்கும் ஒருவித உணர்வைத் தரும் சுற்றுலாத்தலமாகும்.
ஒசூரில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள தளி கிராமத்திற்கு தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் வர முடியும்.
மலையேற்றம் மற்றும் மலை ஏறுதல் ஆகியவற்றிற்கு ஏற்ற நிலப்பகுதிகளை கொண்டுள்ள இடமாக தளி புகழ் பெற்றிருக்கிறது.
எப்படி செல்வது?
கிருஷ்ணகிரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சேலம் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் கிருஷ்ணகிரிக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கிருஷ்ணகிரியில் பல்வேறு வகையான கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில்.
கிருஷ்ணகிரி அணைக்கட்டு.
இராஜாஜி நினைவகம்.
ராயகோட்டா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக