Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

இதுதான் விதி!!

 Image result for இதுதான் விதி!!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தார். ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டுவிட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி இது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே இந்திராணி தன் கணவனை அழைத்து இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்று கூறினாள். இந்திரனும், இந்திராணியிடம் கவலைப்படாதே நான் உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன். ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே? என்று கூறினார்.

உடனே பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினார். அவரிடம் கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டும் என்றார். விஷயத்தைக் கேட்ட பிரம்மா, இந்திரா... படைப்பது மட்டுமே என் வேலை. உயிர்களை காப்பது மஹாவிஷ்ணுவின் தொழில் ஆகும்.

நாம் அவரிடம் சென்று உதவி கேட்போம் என்று பிரம்மாவும், இந்திரனும் மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தனர். மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான் தான். ஆனால் உன் கிளி இறக்கும் தறுவாயிலிருக்கிறது. அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக் காப்பாற்ற வேண்டும். வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று விஷ்ணுவும், அவர்களுடன் சென்றார்.

விபரங்களைக் கேட்ட சிவன், அழிக்கும் தொழில் என்னுடையது தான். ஆனால், உயிர்களையெடுக்கும் பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன். வாருங்கள் நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்று அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன், மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக் கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார். விஷயம் முழுவதையும் கேட்ட அவர், ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையில், என்ன கார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டு விடுவோம்.

அந்த ஓலை அறுந்து விழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும். வாருங்கள் அந்த அறைக்குச்சென்று கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து, அதை மாற்றி எழுதி விடுவோம் என்று அவர்களை எமதர்மன் அழைத்துச் செல்கிறார்.

இப்படியாக இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம்தர்மன் ஆகிய ஐந்து பேரும் அந்த அறைக்குச் சென்றனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது. உடனே அவர்கள் அவசரமாகச் சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலைதான். அவசரமாக அதை படித்துப் பார்க்கின்றனர். அதில், இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம‌தர்மன் ஆகிய ஐந்து பேரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ அப்போது இந்த கிளி இறந்துவிடும் என்று எழுதப்பட்டிருந்தது.

நீதி :

இதுதான் விதி!! விதியை மாற்றுவது என்பது யாராலும் முடியாது என்பதே உண்மை. விதி என்பது யாருக்கு, எங்கே, எப்படி முடியும்? என்பது எழுதியவருக்கே தெரியாது என்பது தான் உண்மை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக