Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

சென்செக்ஸ் சரிவுக்கு இத்தனை காரணங்களா?


சென்செக்ஸ் சரிவுக்கு இத்தனை காரணங்களா..?

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 

 சென்செக்ஸ் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 36,213 புள்ளிகளைத் தொட்டு இன்று காலை வர்த்தகம் ஆகத் தொடங்கி இருக்கிறது. இந்த சரிவுக்கு என்ன காரணம்..?

1. அரசு தரப்பில் ஊக்குவிப்பு இல்லை தற்போது இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலைப் பிரச்னைகளை சரி செய்ய அரசு தரப்பில் இருந்து ஏதாவது ஊக்குவிப்புகள் வரும் என பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் வரவில்லை. அதோடு நேற்று இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனும் "லாபம் வந்தால் தனியார் கம்பெனிகளுக்கு, நட்டம் வந்தால் அது அரசுக்கும் பொது மக்களுக்குமா..? இது ஒரு நல்ல பொருளாதாரத்துக்கு அழகு அல்ல" என காட்டமாக பேசி அரசிடம் பொருளாதார ஊக்குவிப்புகளை எதிர்பார்க்காதீர்கள் எனச் சொல்லி இருந்தார்.

2. உலக பிரச்னைகள் உலக அளவில் இந்திய சந்தைகளில் ஏற்பட்டு இருக்கும் தள்ளாட்டம், ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு உலக பொருளாதார மந்த நிலை பற்றிய கவலை பெரிய அளவில் இருக்கிறது. ஐரோப்பிய சந்தைகள் நேற்று காலை இறக்கத்தில் வர்த்தகமாகி வந்த போது, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்வின் அறிவிப்புகளுக்கு பின் கொஞ்சம் சந்தை செண்டிமெண்ட் மாற்றம் கண்டது.

3. பொருளாதார மந்த நிலை இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் செண்டிமெண்ட் அதள பாதாளத்தில் இருப்பதாக கேர் ரேட்டிங் நிறுவனம் சொல்லி இருக்கிறது. அதோடு இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளையும் இந்த பொருளாதார மந்த நிலை விட்டு வைக்கவில்லை. கடந்த ஜூன் 2019 காலாண்டில், கம்பெனிகளின் வருவாய் மற்றும் லாப சரிவுகளே இதற்கு சாட்சி என்கிறார்கள் அனலிஸ்டுகள். மிக முக்கியமாக இந்திய கம்பெனிகளுக்கு மொத்த நிகர விற்பனை கடந்த ஜூன் 2019 காலாண்டில் வெறும் 4.6 சதவிகிதம் தான் அதிகரித்து இருக்கிறதாம். ஆனால் ஜூன் 2018 காலாண்டில் 13.5 சதவிகிதம் ஏற்றம் கண்டதாம். அதே போல ஜூன் 2018-ல் நிகர லாப வளர்ச்சி 6.6 சதவிகிதமாகவும், ஜூன் 2018 காலாண்டில் நிகர லாப வளர்ச்சி 24.6 சதவிகிதமாகவும் இருந்ததாக கணக்கு சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்

 4. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் கூட்டத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல்லின் ஒவ்வொரு வார்த்தைகளும் சந்தையில் பலமாக எதிரொலிக்கும். ஃபெடரல் வங்கியின் முடிவுகள் ஒட்டு மொத்த உலக சந்தையையும் ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும்.

5. ரூபாய் Vs டாலர் வழக்கம் போல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கொஞ்சம் பெரிய அளவில் இறக்கம் கண்டு வருகிறது. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 71.95 ரூபாய் வரை இறக்கம் கண்டு இருக்கிறது. தற்போது 71.72 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக