இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவது மனதிற்கு பிடித்த சந்தோஷமான விஷயமாகும். பலரோடு ஒரு குழுவாகச் சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பை இவ்விளையாட்டு கொடுக்கிறது. விளையாடும்போது நமது கவனம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் சிறுவர், சிறுமிகள் சேர்ந்து விளையாடும் விளையாட்டுதான் 'கோ கோ குச்சிக்கோ!".
எத்தனை பேர் விளையாடுவது?
இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம்.
தேவையான பொருட்கள் யாவை?
நான்கு அடி நீளக் குச்சி
எப்படி விளையாடுவது?
முதலில் இந்த விளையாட்டின் முதல் போட்டியாளரை தேர்வு செய்ய வேண்டும். தொடக்க கோடு ஒன்றும், ஒரு குறிப்பிட்ட தூரம் தள்ளி முடிவு கோடு ஒன்றும் போட வேண்டும்.
இந்த விளையாட்டில் பங்கேற்கும் அனைவரின் கைகளிலும் மூன்று அல்லது நான்கடி நீளக் குச்சி இருக்க வேண்டும்.
முதல் போட்டியாளர் தொடக்க கோட்டில் இரண்டு கைகளையும், தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு நிற்க வேண்டும்.
அவரின் இரண்டு கை விரல்களுக்கும் இடையில் அந்த நீளமான குச்சியை வைக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் மற்றவர்கள் அனைவரும், அவருக்குப் பின்புறத்தில் கையில் குச்சியோடு தயாராக நிற்க வேண்டும்.
யாராவது ஒருவர் தன் கையிலுள்ள குச்சியால், முதல் போட்டியாளரின் கையிலுள்ள குச்சியை வேகமாகத் தட்டிவிட வேண்டும்.
பின்னால் நிற்கும் போட்டியாளர்கள் தங்கள் கையிலுள்ள குச்சியால், அந்தக் குச்சியைத் தூரமாகத் தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும்.
இப்போது முதல் போட்டியாளர் வேகமாக ஓடிவந்து தொடுவதற்குள், மற்றவர்கள் தன் கையிலுள்ள குச்சியின் நுனியை ஏதாவது ஒரு சிறு கல்லின் மீது வைக்க வேண்டும்.
குச்சியின் நுனி கல்லின் மீது இல்லாத வேளையில், முதல் போட்டியாளர் தொட்டுவிட்டால் அவர் 'அவுட்." அதற்கு மேல் அவர் அந்த விளையாட்டில் தொடர முடியாது.
மற்ற குழந்தைகள் முதல் போட்டியாளரின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு, அவர் கவனிக்காத நேரத்தில் வேகவேகமாகக் குச்சியைத் தள்ளிக்கொண்டு போக வேண்டும்.
முடிவு கோட்டை தாண்டி குச்சி சென்றுவிட்டால், முதல் போட்டியாளர் குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து நொண்டியடித்துக்கொண்டே போட்டி தொடங்கிய இடத்திற்கு வர வேண்டும்.
அடுத்து, திரும்பவும் வேறொரு போட்டியாளரை தேர்வு செய்த பிறகு, மறுபடியும் எல்லோரும் சேர்ந்து விளையாடலாம்.
பலன்கள் :
உடல் வலுப்பெறும்.
பொறுமை, விடாமுயற்சி கூடும்.
குழு ஒற்றுமை வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக