Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 செப்டம்பர், 2019

119 பைகள்; 44 உடல்கள்: மெக்சிகோவை அதிரவைத்த சம்பவம்!

119 பைகள்; 44 உடல்கள்: மெக்சிகோவை அதிரவைத்த சம்பவம்!

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கிணற்றுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் மனித உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து அடைந்தனர் மெக்சிகோ காவல்துறையினர்.

மெக்சிகோவில் 44 பேரை கொலை செய்து அவர்களின் உடல்பாகங்களை துண்டு துண்டாக்கி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றில் வீசியது கண்டறியப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாலிஸ்கோ மாகாணம் போதைப்பொருள் கும்பல்களின் கூடாரம். உலகம் முழுவதும் போதைப் பொருட்களை அனுப்பி வருகிறார்கள், மெக்சிகோ கடத்தல்காரர்கள். இந்த போதைப்பொருள் கும்பல்கள், தொழில் போட்டி காரணமாக அடிக்கடி ஈவு இரக்கமின்றி பலரைக் கொன்று குவித்து வருகின்றனர்.

ஜாலிஸ்கோ மாகாணத்தின் மிகப்பெரிய பகுதியான குவாடலஜரா நகரில் உள்ள பாழடைந்த கிணற்றைச் சுற்றி கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து கிணற்றைச் சோதனை செய்த காவல்துறையினர் மிகப்பெரிய அதிர்ச்சியில் மூழ்கினர். கிணற்றுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட 119 பிளாஸ்டிக் பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட 44 பேரின் உடல்களை கண்டுபிடித்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட 44 பேரை அடையாளம் காணும் பணியில் வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தக் கொடூர கொலைச் சம்பவம் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!