Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 செப்டம்பர், 2019

வெளிநாட்டில் வேலை: இளைஞர்களே உஷார்.! நேக்கா பேசி பல லட்சம் மோசடி செய்த எச்.ஆர். மேனேஜர் கைது

 

 

 

 

 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 

சென்னையில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி தமிழகம் உட்படப் பலமாநில இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்த எச்.ஆர். மேனேஜர் அருணாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


வெளிநாட்டில் வேலை: இளைஞர்களே உஷார்.! நேக்கா பேசி பல லட்சம் மோசடி செய்த எச்.ஆர்....
மலேசியா, சிங்கப்பூர் என வளம் மிகுந்த நாடுகளில் வேலை செய்ய பல இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடும்ப சூழல், பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் போன்ற காரணங்களால் தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றி வரும் போலி ஏஜெண்டுகள் நாட்டில் ஆங்காங்கே இருந்து வருகின்றனர்.

இளைஞர்களை மோசடி வலையில் விழவைக்கத் தந்திரமாகப் பேசி அவர்களைக் கவர இளம்பெண்களைத் தூண்டில் புழு போலப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். அப்படிச் சிக்கியவர்தான் இந்த அருணா. படித்து முடித்து வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் இ- ஜாப் ஸ் என்ற இணையதளத்தில் தங்களது ரெஸ்யூமை பதிவு செய்துள்ள இளைஞர்கள்தான் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளனர்.


இந்த இ- ஜாப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரின் பெயர் நிருபன் சக்ரவர்த்தி. இந்த அலுவலகத்தில் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரியாக இருப்பவர் அருணா. இணையதளத்திலிருந்து சேகரிக்கப்படும் ரெஸ்யூம்களை ஆய்வு செய்யும் இவர், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செல்போன் எங்களை தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார்.

விசா மற்றும் வேலைகளை தாங்களே பெற்றுத் தருகிறோம் எனக் கூறும் அருணாவின் கொஞ்சும் குரல் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களைப் பரவசமூட்டியுள்ளது. பின்பு விண்ணப்பத்திற்காக 50 ஆயிரம் தாருங்கள், வேலை கிடைத்து வெளிநாடு சென்ற பின்பு 35 ஆயிரம் உங்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படும் என நம்ப வைத்துள்ளார் அருணா.


வேலை கிடைத்தால் போதும் என 50 ஆயிரம் முன்பணத்தை என்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் செலுத்தியுள்ளனர். ஆனால் பணத்தை செலுத்தி மூன்று மாதங்கள் ஆகியும் வேலை பற்றிய எந்தத்தகவலும் கிடைக்காத நிலையில் அருணாவை அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வந்துள்ளனர் அந்த இளைஞர்கள். கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க என்று கூறி வந்த அருணாவின் பேச்சில் சந்தேகம் எழுந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இ- ஜாப்ஸ் நிறுவனத்தை அணுகிய இளைஞர்களுக்கு அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.

பிசியாக வேலை நடந்துகொண்டிருந்த அந்த கட்டிடத்தில் இ-ஜாப்ஸ் அலுவலகம் மட்டும் மூடி கிடந்துள்ளது. பணம் கொடுத்து ஏமாந்து விட்டோம் என உணர்ந்த இளைஞர்கள் நிறுவன உரிமையாளர் நிருபன் மீதும் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி அருணா மீதும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


விசாரணையில் இளைஞர்களுக்குக் கொடுத்துள்ள மலேசியாவின் வேலை அழைப்பு கடிதம் ஆகியவை போலியானது என்று வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து அருணா மற்றும் நிருபன் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்தது. அருணாவைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளியுள்ளனர். மேலும் தலைமறைவாகிய இ-ஜாப்ஸ் நிறுவன உரிமையாளர் நிரூபனை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக