Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 செப்டம்பர், 2019

வாகனங்களுக்கான மறு பதிவு கட்டணத்தை 25 மடங்கு உயர்த்த முடிவு..?

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


காற்று மாசு குறைப்பாட்டை போக்கும் விதமாக 15 ஆண்டு கால பழைமையான வாகனங்களுக்கு மறுபதிவு கட்டணத்தை 25 மடங்காக உயர்த்த மத்திய அரசு அலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



வாகனங்களுக்கான மறு பதிவு கட்டணத்தை 25 மடங்கு உயர்த்த முடிவு
மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் பல்வேறு துறைகளில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் போக்குவரத்து துறையில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற நோக்கில், இம்மாத தொடக்கத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதில், போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கு வசூலிக்கப்படும் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது.

ஹெல்மெட் அணியாமல் சென்றால் வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 100-ல் இருந்து ரூ. 1000-மாக உயர்த்தப்பட்டது. இதுபோல பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகையின் அளவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, காற்றுமாசுபாட்டை குறைப்பது பற்றி மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தொடர்ந்து தலையாய பிரச்னையாக திகழ்வது காற்று மாசு குறைபாடு.

இந்தியாவில் பல்வேறு பெருநகரங்களில் இந்த குறைபாடு நிலவி வருகிறது. காற்று மாசடைவதற்கு பிரதான காரணமாக இருப்பது வாகன பயன்பாடு தான். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக நாட்டில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கு புதிய மாசு உமிழ்வு விதிகள் வகுக்கப்பட்டன.

அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு பிஎஸ் 4 மாசு உமிழ்வு விதிகள் நடைமுறைக்கு வந்தன. தற்போது காற்று மாசு குறைபாட்டை மேலும் குறைப்பதற்கு அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன.

புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்றவாறு வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பல வாகனங்கள் புதிய வாகன விதிகளுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

எனினும், காற்றுமாசு குறைப்பாட்டை நீக்குவதற்கு எஞ்சின் தரக்கட்டுப்பாட்டை மாற்றுவது நிரந்தர தீர்வாக அமையாது. காரணம், 10 ஆண்டுக்கும் பழமையான வாகனங்களால் தான் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு நிலவி வருகிறது.

இதனால், 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை மறு பதிவு செய்வதற்கான கட்டணத்தை 25 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் திட்டப்படி, 25 மடங்கு மறு பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்படும் போது, பழைய வாகன ஆவணங்களை புதுப்பிக்க யாரும் முன்வர மாட்டார்கள். உரிமையாளர்கள் பலரும் தங்களுடைய வாகனங்களை கைவிடும் சூழல் உருவாகும்.

இதை கருத்தில் கொண்டு பழைய வாகனங்களால் உருவாகும் காற்று மாசுவை கட்டுப்படுத்தலாம் என மத்திய அரசு எண்ணுகிறது. திட்டமிட்டபடி இது சாத்தியமானால், பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வதையும் மத்திய அரசு பரிசீலனையில் வைத்துள்ளது.

பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கான கட்டணம் 25 மடங்கு உயர்த்தப்படும் நிலையில், அதற்கான எஃப்.சி சான்று பெறுவதற்கான கட்டணம் தற்போதைய நிலையில் இருந்து 125 மடங்கு அதிகமாக உயர்த்தப்படவுள்ளது.

இதனால், மறுபதிவுக்கான கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தா, 15 ஆண்டுகள் பழைய தனியார் அல்லது வர்த்தக ரீதியில் இயங்கி வரும் வாகனங்களை பயன்படுத்துவது மிகவும் விலையுயர்ந்த ஒன்றாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2020ம் ஆண்டு இத்திடம் இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை தற்போதிலிருந்தே துவங்க மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக அவ்வப்போது ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் பழைய வாகனங்களை அழித்தொழிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தப்படுவது குறித்த கருத்துகளும் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இருக்கும் வாகனங்களை ஸ்கிராப் செய்யும் மையங்களை தொடர்ந்து, புதிய ஸ்கிராப்பிங் மையங்களை நிறுவ மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்பது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக