இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம்
அட்டகாசமான ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன்
வெளிவந்துள்ளது, அதைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.
6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ்
டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.
ஸ்னாப்டிராகன் 439சிப்செட்
ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்
ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
2ஜிபி/3ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி
உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 8ஏ
ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
12எம்பி கேமரா
ரெட்மி 8ஏ சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா
இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி
பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ்இ3.5எம்எம் ஆடியோ
ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 29
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ
ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ
ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.
வரும் செப்டம்பர் 29-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன்
விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக