Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 23 செப்டம்பர், 2019

பில்லி சூனியம் சடங்கில் 7 வயது சிறுவனை ‘நரபலி’ கொடுத்த 14 வயது சிறுவன்!

பில்லி சூனியம் சடங்கில் 7 வயது சிறுவனை ‘நரபலி’ கொடுத்த 14 வயது சிறுவன்!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மேற்கு வங்காளத்தில் 7 வயது சிறுவனை  சூனியம் செய்வதற்காக பலி கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் கைது!
மேற்கு வங்காளத்தில் உள்ள நிரஞ்சன்பர் என்னும் கிராமத்தை சேர்ந்த ரத்தன் நாயக் என்பவரது 7 வயது மகன் ருத்ரா நாயக்.  இந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் விளையாட சென்றவன் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து அன்று இரவு ருத்ரா நாயக்கின் பெற்றோர்கள் கிராமம் முழுவதும் சிறுவனை தேடி அழைத்துள்ளனர். அப்போது ருத்ராஅவனது பக்கத்து வீட்டிற்குள் சென்றதாக ஒருவர்  ஒருவர் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது ருத்ரா நாயக் கை கால்கள் கட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த வீட்டில் வசிக்கு, 14 வயதான சிறுவனை விசாரித்த போது  தனது முன்னோர்களை போலவே தானும் சூனியக்காரன் ஆவதற்காக 7 வயது சிறுவனை பிரசாதம் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். பின்னர் அந்த சிறுவன் மற்றும்  அவனது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!