இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலகின்
மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற பிரிட்டன் பிரயாண நிறுவனம் திவாலானது!!
பிரட்டனைச்
சேர்ந்த 178 ஆண்டுகள் பழமையான பிரபல பயண ஆலோசனை மற்றும் ஏற்பாடு நிறுவனமான தாமஸ்
குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பிரிட்டனின் புகழ்பெற்ற
சுற்றுலா நிறுவனமாக தாமஸ் குக் இருந்து வந்தது. பிரிட்டனின் அடையாளமாக கருதப்படும்
இந்த நிறுவனம் கடந்த 1841 ஆம் வருடம் தாமஸ் குக் என்னும் பிரிட்டன் நாட்டைச்
சேர்ந்தவரால் அவர் பெயரில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சுமார் 21 ஆயிரம்
ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
அதன்
பிறகு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உள்ள உலக நாடுகள் எனத் தனது சேவையை
விரிவாக்கியது. தாமஸ் குக் நிறுவனம் தனது சொந்த விமான சேவைகளையும் நடத்தி வந்தது.
இந்நிலையில், இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்நிறுவனத்துக்கு 25 கோடி டாலர் (22.7 கோடி யூரோ)
நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து மேலும்
முதலீட்டைப் பெற அந்நிறுவனம் கடும் முயற்சி செய்து வந்தது. ஆனால் அந்த முயற்சி
வெற்றி பெறாததால் தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு
மூடப்பட்டுள்ளது.
இது
தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் ஃபேங்கவுசர்,
தங்களது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகத்
தெரிவித்துள்ளார். இது தாமஸ் குக் நிறுவனத்தின் சோக நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமஸ் குக் நிறுவனம் திவாலானதால், 21 ஆயிரம் ஊழியர்களின் வேலை வாய்ப்பு
கேள்விக்குள்ளாகியுள்ளது.
மேலும்
அந்நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்ற லட்சக்கணக்கானோர் தவித்து
வருகின்றனர். வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்களில் ஒன்றரை லட்சம் பேர்
பிரிட்டன் குடிமக்கள் ஆவர். அவர்களை, மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான
நடவடிக்கையில் பிரிட்டன் அரசு இறங்கியது.
பயணத்
திட்டம் ஏதும் வகுக்கப்படாத சார்ட்டர் ரக விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும்
அடுத்த இரு வாரங்களில், தாமஸ் குக் மூலம் வெளிநாடு சென்ற குடிமக்கள் மீட்டு
அழைத்து வரப்படுவர் என்றும் பிரிட்டன் போக்குவரத்து அமைச்சகமும், விமானப்
போக்குவரத்து ஆணையமும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக