Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 செப்டம்பர், 2019

வாழ்க்கையில் யார் ஜெயிக்கிறார்கள்.?

 Image result for வாழ்க்கையில் யார் ஜெயிக்கிறார்கள்.?

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




ஒரு அடர்ந்த காட்டை சுற்றி அழகான குட்டி தீவுகள் இருந்தன. அந்தக் காட்டிற்கு ஒரு தலைவரும் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். ஆனால், அவருக்கு வயதாகிவிட்டதால், அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார்.

அதற்காக போட்டிகளை வைத்து இரண்டு இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். இருவருமே வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது. இருவரையும் நேரடியாக மோதவிட்டால், ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவார்கள் என்று வேறோரு முடிவு செய்தார்.

மறுநாள் இரண்டு வீரர்களையும் வரவழைத்து, இப்போது ஜெயிக்கும் ஒருவன்தான் தலைவனாக முடி சூட்டப்படுவான். உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும், சமையல் பாத்திரங்களும், உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும்.

உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வௌ;வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும். தீர்ந்த பிறகு மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்தினால் அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டெடுப்பேன். அந்தத் தீவில் யார் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத் தேர்ந்தெடுப்பேன் என்றார்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.

மூன்று மாதம் முடிந்தது. ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.

அவன் எனக்கு கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும்கூட நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் என்றான்.

மற்றொருவன் இன்னும் வரவில்லை, நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கு சந்தேகம் வலுத்து விட்டது. தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். தீவிற்கு சென்றதும், மூங்கிலாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது. அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக அவன் மாறியிருந்தான். உள்ளே, வாருங்கள் என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே சென்று சோள அடையும், மீனும் கொண்டு வந்து கொடுத்தான்.

தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை. உனக்குக் கொடுக்கப்பட்ட சோளம் மூன்று மாதத்திற்குள் முடிந்திருக்குமே. நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம்? என்றார்.

பிறகு அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல. இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் என்றான்.

நீ உன் அறிவாலும், உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய். நீயே காட்டிற்கு தலைவன் என கூறி அவனை தலைவர் அழைத்துச் சென்றார்.

நீதி : பொருளாக இருந்தாலும், வாழ்க்கையானாலும், நேரமானாலும், கையில் கொடுக்கப்பட்டதை திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்கிறவர்களே ஜெயிக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக