>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 25 செப்டம்பர், 2019

    அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோவில்- காரைக்குடி

    Image result for அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோவில்- காரைக்குடி
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக விளங்கும் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில் காரைக்குடியில் அமைந்துள்ளது. இது ஆதிசங்கரர் வழிபட்ட தலமாகும்.

    மூலவர் - கொப்புடை நாயகி அம்மன்

    உற்சவர் - கொப்புடை நாயகி அம்மன்

    தல விருட்சம் - வில்வமரம்

    தீர்த்தம் - கல்லுகட்டி

    பழமை - 500 ஆண்டுகளுக்கு முன்

    ஊர் - காரைக்குடி

    மாவட்டம் - சிவகங்கை

    தல வரலாறு :

    ஒரு காலத்தில் அம்மன் இருந்த பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்த, செழித்த வனப்பகுதியாக இருந்தது. ஊராக அமைப்பதற்காக இந்த காட்டை அழித்து திருத்தி, மக்கள் குடியேற வசதியாக நகரை அமைத்தார்கள். காரை வனப்பகுதியில் ஏற்பட்ட ஊரில் மக்கள் குடியேறியதால் இப்பகுதி காரைக்குடி என்று பெயர் பெற்றது. செஞ்சை காட்டுப்பகுதியில் இக்கோவிலின் உபகோவிலான காட்டம்மன் கோவில் உள்ளது. இந்த காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன்.

    கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை. இவர் மிகவும் குழந்தைகளை விரும்புவார். ஆனால் காட்டம்மனுக்கோ ஏழு பிள்ளைகள் இருந்தனர். இந்த பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களை தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாள். ஆனால் காட்டம்மன் மலடியான தன் தங்கை இப்பிள்ளைகளை பார்க்க கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாள்.

    இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த காட்டம்மனின் பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது.

    தலபெருமை :

    கொப்பு என்றால் கிளை என்று பொருள். இவள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் ஜுவாலைக் கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவ திருமேனியாக காட்சி தருகிறாள் கொப்புடை நாயகி அம்மன். இதில் வலது கை அபயம் அளிக்கும் தோற்றத்துடனும், வலது மேல்கை சூலத்தை ஏந்தியபடியும் இடது மேல் கை பாசமேந்தியபடியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் விளங்குகிறது.

    அம்மன் ஸ்ரீசக்கரத்தின் மீது இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கிறாள். இங்கு அம்மன், துர்க்கை அம்சத்துடன் கிழக்கு பார்த்து வீற்றிருக்கிறாள். எனவே இவளை வணங்கினால் கல்வி, செல்வம், வீரம் என மனிதனுக்கு தேவையான மூன்றையுமே வாரி வழங்குவாள்.

    இக்கோவிலில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால், காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார்.

    பிராத்தனை :

    கொப்புடையம்மனை வணங்கினால் எல்லாவகை நோய்களையும் தீர்த்து வைக்கிறாள். தவிர விவசாயம் செழிக்கவும், தொழில் விருத்திக்காகவும், கல்யாண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியத்திற்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக