>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 25 செப்டம்பர், 2019

    இட முன்னிடைச்சொற்கள் (Prepositions of Place)


    Image result for Prepositions of Place



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com




    "முன்னிடைச்சொற்கள்" பாடத்தில் நாம் கடந்த பதிவில் நேர முன்னிடைச்சொற்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதைப் பார்த்தோம். இன்றையப் பாடத்தில் "இட முன்னிடைச்சொற்கள்" எவ்வாறு பயன்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

    இட முன்னிடைச்சொற்களை ஆங்கிலத்தில் "Prepositions of Place" அல்லது "Prepositions of Location" என்று அழைப்பர். இட முன்னிடைச்சொற்கள் என்பன 'யாரேனும் ஒருவர் அல்லது ஏதாவதொன்று எந்த இடத்தில் இருக்கின்றது', என்பதை குறிக்க பயன்படும் சொற்களாகும். ("Place Prepositions" means where someone or something is)

    "at" குறிப்பாக ஓர் இடத்தை (a specific place) அல்லது பொதுவான ஓர் இடத்தை குறிக்கப் பயன்படுகின்றது.

    at home - வீட்டில்
    at work - வேலையில்
    at the party - விருந்துபச்சாரத்தில்
    at the corner - மூலையில்
    at the top - உச்சியில்/முனையில்
    at the bus stop - பேருந்து நிறுத்தகத்தில்
    at the entrance - நுழைவாயிலில்
    at the crossroads - குறுக்குப்பாதைகளில்
    at the theater - அரங்கில்
    at the beach - கடற்கரையில்
    at the top of the page - (பொத்தக) பக்கத்தின் மேல் முனையில்
    at the end of the road - பாதையின் முடிவில்

    "in" ஒரு இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது என்றாலும், அது ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லையை அல்லது எல்லைக்குற்பட்ட பகுதியை வரையரை செய்தே குறிக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவும். (a place that within boundaries)

    எடுத்துக்காட்டு:

    in London - இலண்டனில்

    "இலண்டனில்" எனும்போது இலண்டன் என குறிப்பிடும் நகரின் எல்லைகளுக்கு உற்பட்ட பகுதியையே அது குறிக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளவும். எல்லைக்கு வெளியே அல்ல. எனவே "இலண்டன்" என்று அழைக்கும் போது அந்த இடத்திற்கு எல்லைகள் உண்டு.

    in a box - ஒரு பெட்டியில் (பெட்டியின் உள்ளே; வெளியே அல்ல.)
    in Hong Kong - ஹொங்கொங்கில்
    in New York - நிவ் யோ(ர்)க்கில்
    in my pocket - எனது (சட்டை) பையினுள்
    in my wallet - எனது (பணப்) பையில்
    in a building - ஒரு கட்டிடத்தில்
    in a car - ஒரு மகிழூந்தினுள்/னில்
    in the garden - தோட்டத்தில்
    in the swiming pool - நீச்சல் தடாகத்தில்
    in the world - உலகில்

    "on" எனும் இட முன்னிடைச்சொல் "மேல்", "மேலே" என்பதை குறிக்கப் பயன்படும். இருப்பினும் இதனை தமிழில் பயன்படுத்தும் பொழுது "இல்" போன்று பயன்படுமிடங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக: "சுவரில்", "மேசையில்", "கூரையில்" போன்ற பயன்பாடுகளைப் பார்க்கவும். இருப்பினும் இந்த "இல்", மேலே அல்லது மேல் என்பதுப்போன்றே பயன்படுவதை கவனிக்கவும்.

    on the wall - சுவரில்
    on the table - மேசையில்
    on the ceiling - கூரையில்
    on the cover - மூடியில்
    on the floor - நிலத்தில்
    on the carpet - தரைவிரிப்பானில்
    on the menu - விபரக்கோவையில்

    வாக்கியங்களில் முன்னிடைச்சொற்கள்

    மேலே கொடுக்கப்பட்டுள்ள "இட முன்னிடைச்சொற்கள்" முழு வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை பார்ப்போம். எடுத்துக்காட்டாக சில வாக்கியங்கள்:

    01. Sarmilan is at home.
    சர்மிலன் (இருக்கிறான்) வீட்டில்.

    02. Kavitha is waiting for you at the bus stop.
    கவிதா காத்துக்கொண்டிருக்கிறாள் உனக்காக பேருந்து நிறுத்தகத்தில்.

    03. Do you work in an office?
    நீ வேலை செய்கிறாயா ஒரு பணிமனையில்?

    04. Do you live in Hong Kong?
    நீ வசிக்கிறாயா ஹொங்கொங்கில்?

    05. The book is on the table.
    பொத்தகம் இருக்கின்றது மேசையின் மேல்.
    (பொத்தகம் மேசையின் மேல் இருகின்றது.)

    06. Put it down on the table.
    வை இதை கீழே மேசையின் மேல்.
    (இதை மேசையின் மேல் வை)

    07. She is aboard the boat.
    அவள் இருக்கின்றாள் படகினில் முன்னால்.
    (அவள் படகினில் முன்னால் இருக்கின்றாள்.)

    08. The picture is above the sofa.
    படம் சொகுசாசனத்திற்கு மேலே இருக்கின்றது.

    09. Last year we flew to New York
    கடந்த ஆண்டு நாம் பறந்தோம் (பயணித்தோம்) நிவ் யோர்க்கிற்கு

    10. I usually go to work by bus.
    நான் சாதாரணமாக வேலைக்கு போகிறேன் பேருந்தில்.

    11. The desk is against the wall.
    சாய்வுகதிரை சுவருக்கு எதிரே இருகின்றது.

    12. I sit between Mayuran and Praba
    நான் அமர்க்கிறேன் மயூரனுக்கும் பிரபாவிற்கும் இடையில்.

    13. The woman is among all workers.
    அந்த பெண், தொழிலாளர்கள் அனைவருக்கும் நடுவில் இருக்கின்றாள்.

    14. The boy is among his friends.
    சிறுவன் அவனுடைய நண்பர்களுக்கு இடையில் இருக்கின்றான்.

    15. The passengers are behind the driver.
    பயணிகள் ஒட்டுநரின் பின்னால் இருக்கின்றனர்.

    16. The desk is below the window
    சாய்வுமேசை சாளரத்திற்கு கீழே இருக்கிறது.

    17. The car is outside the garage.
    மகிழுந்து தரிப்பிடத்தின் வெளியே நிற்கின்றது.

    18. There is a long line of people outside the theater.
    நீண்ட வரிசையில் மக்கள் திரையரங்கின் வெளியே நிற்கின்றனர்.

    20. The post office is on the opposite side of the street.
    தாபால் பணிமனை தெருவின் எதிர்பக்கத்தில் இருக்கின்றது.

    நிலையான முன்னிடைச்சொற்கள்

    கீழே காணப்படும் பெயர்சொற்களின் முன்னால் பயன்படும் முன்னிடைச்சொற்கள் (at - in - on) எப்பொழுதும் நிலையானவைகள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    at home - வீட்டில்
    at work - வேலையில்
    at school - பாடசாலையில்
    at university - பல்கலைக்கழகத்தில்
    at college - கல்லூரியில்
    at the top - உச்சியில்/முனையில்
    at the bottom - அடியில்
    at the side - பக்கவாக்கில்
    at reception - வரவேற்பில் / வரவேற்புக் கூடத்தில்

    in a car - (ஒரு) மகிழூந்தில்
    in a taxi - வாடகையூர்தியில்
    in a helicopter - உலங்கு வானூர்தியில்
    in a boat - படகில்
    in a lift (elevator) - மின்னுயர்த்தியில்
    in the newspaper - செய்தித்தாளில்
    in the sky - வானத்தில்
    in a row - வரிசையில்

    on a bus - (ஒரு) பேருந்தில்
    on a train - தொடருந்தில்
    on a plane - வானூர்தியில்
    on a ship - கப்பலில்
    on a bicycle - ஈருருளியில்
    on a horse - ஒரு குதிரையில்
    on the radio - வானொலியில்
    on television - தொலைக்காட்சியில்
    on the left - இடப்பக்கத்தில்
    on the right - வலப்பக்கத்தில்
    on the way - வழியில்

    முன்னிடை கூட்டுச்சொற்கள்

    முன்னிடை கூட்டுச்சொற்கள் என்றால் என்ன? இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றாக இணைந்து பயன்படும் போது அவற்றை "முன்னிடைக் கூட்டுச்சொற்கள்" என்றழைக்கப்படும். இதனை முன்னிக்ச் சொற்றொடர்கள் என்றும் கூறலாம். கீழே சில முன்னிடை கூட்டுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    next to
    at the back of
    at the top of
    at the bottom of
    in fornt of
    in the corner of
    in the middle of
    on the left of
    on the right of
    on the corner of
    on top of
    on the side of
    on the other side of
    to the left of
    to the right of

    "முன்னிடை கூட்டுச்சொற்கள்" எவ்வாறு வாக்கியங்களில் பயன்படுகின்றன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுக்கள் ஊடாக பார்ப்போம்.

    01. I live next to my best friend.
    நான் வசிக்கிறேன் எனது அருமை நண்பனுக்கு (வீட்டுக்கு) பக்கத்தில்.

    02. We are going to sit at the back of the theater.
    நாங்கள் அமரப்போகின்றோம் திரையரங்கின் பின்னிருக்கைகளில்.

    03. The books were at the top of the shelves.
    இந்த பொத்தகங்கள் அடுக்கறைகளின் உச்சியில் இருந்தன.

    04. The driver is in front of passenger.
    ஓட்டுநர் பயணிகளின் முன்னால் இருக்கின்றார்.

    05. We live in the middle of the street.
    நாங்கள் வசிக்கின்றோம் வீதியின் மத்தியில்.

    06. The dog is on the right of the cat.
    நாய் பூனையின் வலப்பக்கத்தில் நிற்கின்றது.

    07. We live on the corner of 3rd avenue
    நாங்கள் வசிக்கிறோம் மூன்றாவது சாலையின் மூலையில்.

    08. The clown is on top of the box.
    விகடன் பெட்டியின் உச்சியில் இருக்கின்றான்.

    09. There is a man on the top of the roof.
    இருக்கிறான் ஒரு மனிதன் கூறையின் உச்சியில்.
    (கூறையின் உச்சியில் ஒரு மனிதன் இருக்கிறான்.)

    10. There is a large garden in the middle of the skyscraper.
    பெரிய பூங்கா ஒன்று வானளாவிகளின் மத்தியில் இருக்கிறது.

    (152 அடிகளுக்கு மேல் உயரமான கட்டிடங்களை "வானளாவி" (Skyscraper) என்றழைக்கப்படும்.)

    ஒத்தப் பொருள் முன்னிடைச்சொற்கள்

    ஆங்கிலத்தில் வெவ்வேறு முன்னிடைச்சொற்கள், ஆனால் ஒரே பொருளை தருபவைகளும் (Different words same meaning) உள்ளன. அவற்றை ஒத்தப்பொருள் முன்னிடைச்சொற்கள் எனப்படும்.

    இவற்றில் இரண்டு வகை உள்ளன.

    முதலாவது வகையில் ஒரே பொருள் தரும் முன்னிடைகளில் இரண்டில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம். அதாவது இரண்டில் எதனைப் பயன்படுத்தினாலும் பொருள் ஒன்றாகவே இருப்பவை; பொருள் மாறாதவை. ஆனால் இரண்டாம் வகையில் ஒரே பொருள் தருபவைகள் போல் இருந்தாலும், அவை பொருள் வேறுபாடு கொண்டவை. அவற்றை பயன்படுத்தும் போது சற்று கவனம் வேண்டும். ஏனெனில் பயன்படுத்தும் முன்னிடைச்சொல்லைப் பொருத்து வாக்கியத்தில் பொருள் மாறிவிடக்கூடியவை.

    முதலில் பொருள் மாறாத ஒத்தப் பொருள் முன்னிடைச்சொற்களைப் பார்ப்போம்.

    எடுத்துக்காட்டாக:

    near / by = அருகில்

    யாரேனும் ஒருவர் அல்லது ஏதேனுமொன்று எமது "அருகில்" எனும் பொழுது மேலுள்ள இரண்டு சொற்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

    next to / beside = அடுத்து

    யாரேனும் ஒருவர் அல்லது ஏதேனுமொன்று எமக்கு "அடுத்து" எனும் பொழுது மேலுள்ள இரண்டு சொற்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

    across from / opposite = எதிராக

    யாரேனும் ஒருவர் அல்லது ஏதேனும் ஒன்று எமக்கு "முன்னால் அல்லது எதிராக" இருந்தால் மேலுள்ள இரண்டு சொற்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

    ஒத்தப் பொருள் முன்னிடைகள்: பொருள் வேறுபடுபவைகள்

    இவை ஒரே பொருள் தரும் முன்னிடைகள் போன்று தோன்றினாலும் பயன்பாட்டில் வேறுவிதமான பொருளை (Some prepositions are similar, but different) தருபவை. எனவே இவற்றைப் பயன்படுத்தும் போது எந்த இடத்தில் எந்த முன்னிடைச்சொல்லை பயன்படுத்த வேண்டும் எனும் கூடுதல் கவனம் வேண்டும்.

    எடுத்துக்காட்டாக:

    below / under இரண்டு முன்னிடைகளும் "கீழே" எனும் பொருள் கொண்டவைகள் ஆனால்:

    below - கீழே
    "கீழே" என்பதன் பொருள், கீழ் உள்ள நிலையை குறிக்கிறது.

    The desk is below the window.

    under - கீழே
    இதன் பொருளும் "கீழே" என்று பொருள்பட்டாலும், கீழே மறைந்துள்ள ஒன்றை அல்லது நிலையை குறிக்கிறது.

    The pencil is under the table.

    above / over இரண்டும் "மேலே" எனும் பொருள் தருபவைகள் ஆனால்:

    above - மேலே
    "மேலே" என்பதன் பொருள் தலைக்குமேலே எனும் நிலையை குறிக்கிறது.

    The baloon was high above our heads.

    over - மேலே
    இதன் பொருளும் "மேலே" என்று குறித்தாலும், அது ஒரு நிலையின் மேல் என்பதைக் குறிக்கிறது. அதாவது ஒன்றின் முடிவில் அதற்கும் "மேலே" என்று குறிக்கிறது.

    The girl is wearing scaf over her head.


    சரி! இப்பாடத்தின் பயிற்சிகளை தொடருங்கள்.

    இப்பாடம் தொடர்பான சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக