செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அதிசய நடராஜர் ஆலயம்.....!

Image result for அதிசய நடராஜர் ஆலயம்.....!
 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு இறைவன் சிலை வடிவமாக காட்சியளிப்பார். ஆனால் நாகப்பட்டினத்தில் மனித வடிவில் காட்சியளிக்கிறார் இறைவன். இத்தல இறைவனை பூமிநாதர் என்றும், அம்பாளை அங்கவளநாயகி என்றும் அழைக்கிறார்கள்.

கோவிலில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிலை வடிவமாக செதுக்கப்பட்டு வைக்கப்படுகிறது. ஆனால் நாகப்பட்டினம் மாவட்ட கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள உற்சவருக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்புள்ளது. அப்படியென்ன அதிசயம் இருக்கு......

மனித தோற்றம் :
இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரைப் போலவே காட்சியளிக்கும். நரம்பு, மச்சம், ரேகை, நகம் போன்றவை தௌ;ளத்தெளிவாக காணப்படுவது சிறப்பாகும்.

 இந்த நடராஜரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.

 மேலும் வரகுண பாண்டியனுக்கு இத்தல இறைவனும், இறைவியும் பஞ்ச லோகத்தால் ஆன குழம்பைக் குடித்து, நடராஜர், சிவகாமி அம்பாள் தம்பதியராக காட்சி கொடுத்துள்ளனர்.

நலம் தரும் சனிபகவான் :

 மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்குள்ள சனிபகவான் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இன்னும் சில தகவல்கள்.....!

 இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோவில் தல விருட்சமாக உள்ளது.

 சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே அருள்பாலிக்கிறார்கள்.

இக்கோவில் ராஜராஜ சோழனின் பாட்டி கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்