Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

தேன்மொழியின் சாமர்த்தியம்

Image result for சாமர்த்தியம் 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சரண்யா. இவள் தான் நான்காம் வகுப்பு லீடர். ஆசிரியை வகுப்பிற்கு வர தாமதம் ஆனாலும், விடுமுறையில் இருந்தாலும் தன்னை ஒரு ஆசிரியையாகவே பாவித்துக் கொள்வாள். வகுப்பாசிரியை ஏதோ காரணமாக தலைமை ஆசிரியையிடம் பேசிக்கொண்டிருந்தார். அதனால் வகுப்பிற்குள் மாணவ - மாணவியர் பேசிக்கொண்டிருந்தனர். சரண்யா நேராக ஆசிரியையிடம் சென்று “டீச்சர் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

அப்படியென்றால் நீங்கள் வகுப்பிற்கு வாருங்கள் என்று அர்த்தமில்லை. நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருங்கள். நீங்கள் வருகிற வரைக்கும் உங்கள் பணியில் முக்கிய பகுதியை நான் பார்க்கவா என்று அர்த்தம். முக்கிய பணியென்றால் மாணவர்களைப் பேசாமல் அமைதியாக வைத்திருத்தல் அப்படியா, சரி நீ போய் பேசுகிறவங்க பெயரைக் கரும்பலகையில் எழுதிப் போடு. நான் வந்து அவர்களுக்குத் தண்டனை கொடுக்கிறேன் என்று அனுப்பினார் ஆசிரியை.

டெல்லியில் போய் அமைச்சர் பதவியேற்று வந்ததைப் போல் ஒரு அதிகாரத் தோரணையோடு வகுப்பில் நுழைந்து, யாரும் பேசாதீங்க, பேசினவங்க பேரை டீச்சர் பேர்ட்ல எழுதிப் போடச் சொல்லியிருக்காங்க என்று சொன்னாள் சரண்யா. கையில் ஒரு சாக்பீசை எடுத்துக் கொண்டு, துப்பறியும் நிபுணரைப் போல அமைதியாக நின்று கொண்டு கண்ணை மட்டும் உருட்டி உருட்டி பார்த்;துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். சில மாணவிகள் வாயில் ஒரு விரலை குறுக்காக வைத்துக் கொண்டார்கள். அதாவது நான் எக்காரணம் கொண்டும் யாருடனும் பேசமாட்டேன். அதனால் என் பெயரை எழுதிவிடாதே என்று அர்த்தம். பக்கத்தில் இருப்பவர்கள் முதுகிலோ, இடுப்பிலோ கிள்ளினால் கூட வளையவோ, நெளியவோ மாட்டார்கள்.

எல்லோரும் அமைதியாக இருப்பதைப் பார்த்தாலே தேன்மொழிக்கு குஷி வந்துவிடும். லீடர் சரண்யாவைப் பார்த்துக் கொண்டே முன்னால் இருப்பவளின் முதுகில் லேசாக கிள்ளினாள் தேன்மொழி. ஆனால், அவள் அசையவில்லை. தேன்மொழிக்கு மேலும் குஷியானது. அதற்கு அடுத்து இருப்பவளையும் கிள்ளினாள் தேன்மொழி. அவளும் அசையவில்லை. அசைந்தால் போர்டிலே பெயரை எழுதிப் போட்டு விடுவாள் லீடர் சரண்யா. அதற்காக தம்மடக்கிக் கொண்டிருந்தார்கள்.

தேன்மொழிக்கு ஒரு சோதனை வந்தது. தேன்மொழிக்கு பின்னால் இருந்தவள் முதுகில் லோக கிள்ள, அது எவடி என்னைய பின்னடி கிள்ளினது. என்று திரும்பிப் பார்த்தாள். பின் வரிசையில் எல்லோரும் வாயில் விரலை வைத்துக் கொண்டு கண்ணில் யாதொரு உணர்ச்சியையும் காட்டாமல் பெரிதாக முழித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய கண்களையும் பார்த்ததும் குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது, சிரித்துவிட்டாள். அவள் சிரிப்பதைப் பார்த்ததும் நாலைந்து பேர் சிரித்து விட்டார்கள்.

உடனே சரண்யா முதலில் தேன்மொழி பெயரையும், மற்றும் சிரித்தவர்கள் பெயரையும் போர்டில் எழுதிப் போட்டாள். அதன் பிறகு தேன்மொழி அமைதியாக இருப்பதைப் போல நடித்துக்கொண்டு குசும்பு பண்ணிக் கொண்டு இருந்தாள். எப்படியும் டீச்சரிடம் அடி வாங்குவது உறுதியாகிவிட்டது. இனி அiதியாக இருந்து என்ன செய்ய என்று சேட்டை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் தேன்மொழி பெயரைத் தெடர்ந்து பெருக்கல் அடையாளம் போட்டாள் சரண்யா.

பெருக்கல் அடையாளம் எத்தனை முறை உள்ளதோ அத்தனை முறை பேசினாள் என்று அர்த்தம். தேன்மொழி பெயருக்குப் பின்னால் வந்த பெருக்கல அடையாளம் போர்டில் கடைசி வரை சென்று அடுத்த வரிசையில் தொடர்ந்தது. அப்பொழுது தேனீர் இடைவேளை மணி அடிக்க அனைவரும் மடை உடைந்தாற் போல ஒரு சப்தத்தோடு வகுப்பை விட்டு வெளியேறினர். முதலில் வெளியில் சென்றவள் தேன்மொழி தான். சிட்டாய்ப் பறப்பாள். கீழ் வகுப்பு மாணவ - மாணவியருக்கு பிரச்சனை என்றால் இவள்தான் நாட்டாமை. ஏன் கட்டப் பஞ்சாயத்து என்று கூட சொல்லலாம்.

முதலில் புகார் சொல்லியவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு பெரும்பாலும் இருக்கும். தீர்ப்பு மட்டுமல்ல உடனடித் தண்டனையாக கிள்ளிவிடவும், தலையில் கொட்டவும், அடிக்கவும் செய்வாள். அவளது வகுப்பு மாணவர்களுக்கே அடி விழும். அதனால் மாணவர்கள் அவளுக்கு வைத்திருக்கிற பெயர் சொர்ணக்கா. ஆனால், அந்த அப்பாவி மாணவர்களுக்கு தேன்மொழி எதிரே செல்லும் தைரியம் தான் கிடையாது. தேனீர் இடைவேளையாக இருந்தாலும் சரி, மதிய உணவு இடைவேளையாக இருந்தாலும் சரி ஓடிக் கொண்டேதான் இருப்பாள். அவள் பெரும்பாலும் பெரிதாக சிரிக்கமாட்டாள் அதற்காக உம்மனாம் மூஞ்சியும் கிடையாது. தேன்மொழி அவசரமாக வகுப்பறைக்குள் ஓடினாள்.

ஆசிரியை வகுப்பறைக்குள் வந்து கரும்பலகையில் பெயர் எழுதிப் போட்டிருக்கிறதை பார்ப்பதற்கு முன்பே அழித்து விட வேண்டும் என்பது அவளது திட்டம். ஓடிய வேகத்தில் வகுப்பறை வாசலில் நின்று விட்டாள். வகுப்பறைக்குள் நடந்தது அவளைத் திகைக்க வைத்துவிட்டது. அவளது வகுப்பு அதாவது நான்காம் வகுப்பு ஆசிரியைக்கும், மூன்றாம் வகுப்பு ஆசிரியைக்கும் கரசாரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. இரண்டு ஆசிரியைகளும் சிறந்த நண்பர்களாகத்தான் இருந்தார்கள். சில நாட்களாகவே இருவருக்கும் புகைச்சல். இருவரும் ஒருவரையொருவர் கேவலமாய் பேசிக் கொண்டார்கள். சண்டைக்குக் காரணம் பெரிதாக ஒன்றும் இருக்காது.

இந்தச் சண்டைக்கு காரணம் வட்டார வள மைய கூட்டத்திற்கு போன இடத்தில் நான்காம் வகுப்பு ஆசிரியையைப் பற்றி வேறு பள்ளி ஆசிரியையிடம் தவறாகப் பேசியதாகச் சொல்லி மூன்றாம் வகுப்பு ஆசிரியையிடம் சண்டை. குடுமியைப் பிடிக்கவில்லை அவ்வளவுதான். தேன்மொழி இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தாள். வார்த்தைகளையும் கவனமாகக் கேட்டாள். இதுக்குப் போய் டீச்சர்மார் சண்டை போடுவார்களா என்று எண்ணுவது போல் அவளது பார்வை இருந்தது.

இடைவேளையில் சென்று மீண்டும் வகுப்பறைக்குள் செல்வதற்கு மணி அடித்தது. இடைவேளை நேரம் என்பதால் இரண்டு ஆசிரியைகளும் பேசி சண்டை போட்டது மாணவர்கள் சத்தத்தில் மற்ற வகுப்பு ஆசிரியைகளுக்குத் தெரியாது. ஆனால், இப்போது மணி அடித்து விட்டதால் மூன்றாம் வகுப்பு ஆசிரியை சொன்னார், இனிமேல் என் முகத்தில் முழிக்காதே. நான் பேசாததெல்லாம் பேசினதாக சொல்றியே நீ நல்லாவே இருக்க மாட்ட என்று கண்களில் திரண்ட நீரை முந்தானையில் தொடைத்து விட்டு மூன்றாம் வகுப்பை நோக்கி விரைந்தார்.

இதற்கு மேல் எப்படி இருவரும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். சண்டையை நினைத்து மண்டையைப் பிய்த்துக்கொண்ருப்பார்கள். மதிய உணவு இடைவேளை வந்தது. சில மாணவர்கள் சத்துணவு சாப்பிட, சாப்பாடுத் தட்டை எடுத்தக் கொண்டு சென்றார்கள். சிலர் டிபன் பாக்ஸில் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை உண்ண வட்டமாக அமர்ந்து கொண்டார்கள். சில மாணவ - மாணவியருக்கு சுடச் சுட சாப்பாடு கொண்டு வந்து ஊட்டிக் கொண்டிருந்தார்கள். எங்கிருந்து தான் வருமோ இந்தக் காக்காக் கூட்டம். சரியாக உணவு இடைவேளையின் போது வந்து சேர்ந்து விடுகிறது.

விடுமுறை நாட்களில் இந்தக் காக்கைகள் என்ன செய்யுமோ, எங்கு போகுமோ தெரியவில்லை. விடுமுறை நாட்கள் என்றால் மாணவ - மாணவியருக்கு எவ்வளவு கொண்டாட்டமோ அவ்வளவு திண்டாட்டம் இந்த காக்கைகளுக்கு. ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் சாப்பிடும் போது கொஞ்சம் அசந்தால் கூட போதும் தட்டில் உள்ள முட்டை நொடிப் பொழுதில் காணாமல் போய்விடும். அவ்வளவுக் கெட்டிக்காரத்தனம் இந்த காக்கைகளுக்கு. அதற்காக சில குழந்தைகள் இடது கையில் முட்டையை பிடித்துக் கொண்டு வலது கையால் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

அப்படியும் இந்தக் காக்கைகள் விடாது. பக்கத்தில் வந்து நிற்கும். சிறிது சிறிதாகத் தாவித் தாவி மிக அருகில் வந்து நின்று கொள்ளும். இடமும் வலமும் தலையைத் திருப்பி திருப்பி பார்க்கும். இடது கையில் இருக்கும் முட்டையை அலகால் கொத்திப் பிடுங்கும். ஆனால், குழந்தை கையில் எந்தச் சேதமும் இல்லாமல் கொத்திப் பிடுங்கும். இப்போது தான் காக்கைக்கும், குழந்தைக்கும் பெரும் போராட்டம் நடக்கும். வலது கையால் காக்காவைத் துறத்த முடியாமல் தவிக்கும். ஏனென்றால் வலது கையில் ஒரு பிடி சோறு இருக்கும். கையால் துரத்தினால் கையில் இருக்கும் சோறு சிதறும். அதனால் இந்த முட்டைப் போராட்டத்தில் காக்காக்களுக்கே பெரும்பாலும் வெற்றி... அதற்காக இந்தக் குழந்தைகள் அழுவதில்லை. ஒரு வகை ஏமாற்றத்தோடு தலையை அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டு போ... போ... என்று காக்கையைப் பார்த்து சலித்துக் கொள்வார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடனே ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை விளையாட்டுத்ததான். ஆங்காங்கே சினிமா பானியில் சண்டை நடக்கும். ஓடிப்பிடித்து சிலர் விளையாடுவார்கள். இரண்டு மாணவர்கள் நிஜமாகவே சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். வலுவுள்ளவன் வலுவற்றவனை அடித்துத் தள்ள கீழே விழுந்து அழுதான். சிறுவர் கூட்டம் கூடியது. தேன்மொழி அங்கு வந்தாள். இரண்டு பேரையும் சண்டை போடாதீர்கள் என்றாள். அடி வாங்கியவன் அழுது கொண்டே, டீச்சர்கிட்ட போய் சொல்றேனன் பாரு என்று கிளம்பினான்.

அவனை தடுத்த தேன்மொழி, அவனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அடித்த மாணவனை ஏன் அடித்தாய் என்று கேட்டாள். சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள், தேன்மொழியிடம் சண்டை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். நீ எதுக்கு சின்னப் பையன அடிக்கிற. இனிமேல் நீ அவனிடம் சண்டை போடக்கூடாது என்றாள். சின்னப் பையனப் பார்த்து, சரி இனி நீ அழாதே. அவன் இனிமே உன்னை அடிக்க மாட்டான். ரெண்டு பேரும் கை கொடுங்க என்றாள். இருவரும் கை கொடுத்தார்கள். சுற்றி நின்ற மற்ற குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க கை தட்டினார்கள். அடுத்து தேன்மொழி அங்கு இல்லை. அவள் தோழிகளோடு விளையாடப் போய்விட்டாள்.

இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் நான்காம் வகுப்பு ஆசிரியை தேன்மொழியைக் கூப்பிட்டு ஒரு டிபன் பாக்சை அவளிடம் கொடுத்து ஜந்தாம் வகுப்பு ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு வா என்றார். டிபன் பர்க்சைக் கையில் வாங்கிய தேன்மொழி என்ன டீச்சர் இது? என்றாள். அதற்கு நான்காம் வகுப்பு ஆசிரியை உனக்கு எதுக்கு இந்தக் கேள்வி. சொன்னதை மட்டும் செய் என்றார். டிபன் பாக்ஸ் கனமாகவும், சூடாகவும் இருந்தது. சாப்பாடு இல்லை ஏதோ சிறப்பான பண்டம் என்று யூகித்துக் கொண்டு சிட்டாய் பறந்தாள் தேன்மொழி.

ஜந்தாம் வகுப்பிற்குள் சென்றாள், ஆனால், அங்கு ஆசிரியை இல்லை. மூன்று கட்டிடங்கள் இருந்தது. மூன்று கட்டடிடங்களிலும் சென்று தேடினாள். மூன்றாம் வகுப்பில் நுழைந்தாள். டீச்சர் இந்தாங்க நான்காம் வகுப்பு டீச்சர் இத உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க என்று டிபன் பாக்சை நீட்டினாள். தயக்கத்தோடு டிபன் பாக்சை வாங்கிக் கொண்டு சரி நீ போ என்று தேன்மொழியை அனுப்பிவிட்டார்.

டிபன் பாக்சைத் திறந்து பார்த்தார். நெய் மணம் கமழ கமழ கேசரி இருந்தது. எனக்கு கேசரின்னா ரொம்ப பிடிக்கும்ன்னு புஷ்பா டீச்சருக்குத் தெரியும். ஆமா இன்றைக்கு என்ன நாள் என்று யோசித்த போது தான் ஞாபகத்திற்கு வந்தது. புஷ்பா டீசச்ருக்கு இன்று பிறந்த நாள் என்பது. ஆசை ஆசையா சேகரியை சுவைத்தார். கேசரியின் சுவை பிரமாதமாக இருக்க முழுவதையும் சாப்பிட்டு முடித்துவிட்டார். ச்சே… வருசா வருசம் முதல்ல நான் தான் டீச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுவேன். இந்த ஆண்டு சுத்தமா மறந்துட்டேனே என்று மனதிற்குள் வருந்தினாள். என்றாலும் மறக்காமல் கேசரியை கொடுத்து அனுப்பி புஷ்பா புஷ்பாதான்னு நிரூபிச்சிட்டா.

கடைசி பீரியட் நான்காம் வகுப்பிற்கு விளையாட்டுப் பீரியட். மாணவர்கள் மைதானதிற்கு விளையாட சென்று விட்டார்கள். நான்காம் வகுப்பு ஆசிரியை புஷ்பா நாற்காலியில் அமர்ந்து நோட்டு திருத்திக் கொண்டிருந்தார். கேசரியை சாப்பிட்ட பின் அதில் ஒரு முழப் பூவை வைத்து புஷ்பா டீச்சரிடம் கொடுக்க வந்தார். நான்காம் வகுப்பை நெருங்கிய போது தேன்மொழி பார்த்து விட்டாள். நான்காம் வகுப்பு ஜன்னல் பக்கம் வந்தாள். வகுப்பிற்குள் நுழைந்தவுடன் புஷ்பா பிறந்தநாள் வாழ்த்துகள். கேசரி சூப்பரா இருந்தது. உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மறந்ததுக்கு என்னை மன்னிச்சிடு புஷ்பா, என்று சொல்லிக் கொண்டே டிபன் பாக்சைக் கையில் கொடுத்தார்.

அதிர்ச்சியில் என்ன பேச வேண்டும் என்று ஒரு கணம் திகைத்த புஷ்பா டீச்சர், அடக் கழுத, ஜந்தாம் வகுப்பு டீச்சர்கிட்ட கொடுக்கச் சொன்னா மூன்றாம் வகுப்பு டீச்சர்கிட்டல்லா போய் கொடுத்திருக்கா இந்த தேன்மொழி லூசு, என்றும் இந்த லூசு வேனும்ன்னே கொடுத்தாளா? அல்லது தெரியாமக் கொடுத்தாள? சண்டைக்காரி திடீர்ன்னு முன்னால வந்து நின்னு பிறந்த நாள் வாழ்த்து சொல்றா. எப்படி நடந்திருந்தாலும் பரவயில்லை. மனதில் இருந்த பாரம் இறங்கியது என்று மனதில் நிம்மதியடைந்தார் புஷ்பா டீச்சர்.

டீச்சர் நாம சண்டை போட்டு ரெண்டு மாசம் ஆகுது. எவ்வளவு மனம் வேதனைப்பட்டது தெரியுமா. இன்றைக்குதான் எனக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் வந்தது. என்னுடைய பிறந்தநாள் அதுவுமா நாம் மீண்டும் தோழிகளாகியது மகிழ்ச்சி. டிபன் பாக்சைத் திறந்து பூவை எடுத்து தலையில் சூடிக் கொண்டார் புஷ்பா டீச்சர். ஜன்னல் அருகே நின்று பார்த்தக் கொண்டிருந்த தேன்மொழி முகம் மலர்ந்தது.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக