Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 செப்டம்பர், 2019

ரோஜாவின் தலைக்கனம்

Image result for ரோஜாவின் தலைக்கனம்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மழைக்காலத்தின் இறுதியில், காட்டுக்குள் இருந்த ஒரு ரோஜாச் செடியில் அழகான சிவப்பு ரோஜா ஒன்று பூத்தது. அதன் அழகு அருகிலிருந்த அனைத்து மரங்களையும், செடிகளையும் கவர்ந்தது. அதைப் பார்த்த வேப்பமரம் உன்னைப் போன்ற அழகும், இனிமையும் எனக்கு இல்லையே! என்று ஏக்கப் பெருமூச்சு விட்டது.

கவலைப்படாதே! எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை என்று வேப்பமரத்திற்கு ஆறுதல் சொன்னது அருகிலிருந்த இன்னொரு மரம். மற்ற மரங்களும், செடிகளும் ரோஜாவின் அழகைப் பார்த்து விட்ட பெருமூச்சுகள் காற்றில் கலந்தன. இதில் தலைக்கனம் ஏறிய ரோஜா, இந்தக் காட்டில் யாரும் என்னைப் போல அழகு இல்லை என்றது. அருகிலிருந்த சூரியகாந்தி, அப்படிச் சொல்லாதே... இந்தக் காட்டில் எல்லோருமே அழகு! நீயும் அதில் ஒன்று என்றது. ரோஜா அதைக் காதில் வாங்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தப்போது அதன் கண்ணில் அருகிலிருந்த கள்ளிச்செடி தென்பட்டது.

இந்தக் கள்ளிச்செடியைப் பார். உடம்பு முழுக்க முட்களோடு எவ்வளவு அவலட்சணமாக இருக்கிறது. இதையுமா அழகு என்கிறாய்? என சூரியகாந்தியிடம் ரோஜா கேட்டது. உன்னிடம் கூடத்தான் முட்கள் இருக்கிறது. எது அழகு என்பதை யாரும் வரையறுக்க முடியாது என்றது சூரியகாந்தி.

உனக்கு என்மேல் பொறாமை. அதனால்தான் நீ இப்படிக் கூறுகிறாய் என்றது ரோஜா. மேலும், கள்ளிச்செடியை எவ்வளவு ஏளனம் செய்ய முடியுமோ அவ்வளவு ஏளனம் செய்தது. ஆனால், கள்ளிச்செடி அதற்காக கவலைப்படவில்லை. அது ரோஜாவிடம் இறைவன் எந்த உயிரையுமே காரணமில்லாமல் படைக்கவில்லை என்று மட்டுமே கூறியது.

சிறிது காலத்தில் மழைக்காலம் முடிந்து கோடைகாலம் வந்தது. மழையின்றி காட்டில் இருந்த எல்லாச் செடிகளுமே தவித்தன. ரோஜாவும் வாடி வதங்கியது. ஒருநாள் அங்குவந்த சில சிட்டுக்குருவிகள் கள்ளிச்செடி அருகே சென்று அதைக் கொத்திக் கொண்டிருந்தன. அதைக்கண்ட ரோஜாச்செடி சூரியகாந்தியிடம் அதுபற்றி விசாரித்தது.

சூரியகாந்தி ரோஜாவிடம், கள்ளிச்செடியின் சதைப்பிடிப்பான கிளைகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அதைக் குடிக்கத்தான் குருவிகள் அதைக் கொத்துகின்றன. இந்த நேரத்தில் குருவிகளுக்கு கள்ளிச்செடிகள் மட்டுமே அழகாகத் தெரியும்! என்றது. இப்போதுதான் ரோஜாவுக்கு தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது. பிறகு கள்ளிச்செடியிடம் சென்று மன்னிப்பு கேட்டு வருந்தியது.

நீதி :

வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக