இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வேறு
எங்கும் காணக் கிடைக்காத காட்சியாக ஒரு சிறுமி வடிவத்தில் காட்சிக் கொடுக்கும்
ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி கோவில் சென்னையிலுள்ள நங்கநல்லூரில் உள்ளது.
மூலவர்
: ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி
பழமை: 500 வருடங்களுக்கு முன்
தலபெருமை :
மாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை
சுமார் ஆறு மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது விழச் செய்வது
வருடமும் அற்புதமாக நடைப்பெறும். இதன் காரணமாக சூரிய வழிபாடு என்ற நிகழ்ச்சியும்
மிகச் சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
வேறு
எந்த அம்பாள் தலத்திலும் காண்பதற்கரிய காட்சியாக
தல வரலாறு :
பல வருடங்களுக்கு முன்பாக காஞ்சி பெரியவர் தனது
பக்தர்களை பாத யாத்திரையாக அழைந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பழவந்தாங்கலில்
(தற்போது கோவில் அமைந்திருக்கும் பகுதி வழியாக) வந்து கொண்டிருக்கும்போது சற்று
ஓய்வு கொள்ள ஒரு அரசமரத்தடியில் தங்கினார். உடன் வந்த பக்தர்கள் சற்று தள்ளி வேறு
இடத்தில் அமர்ந்து கொண்டனர்.
அப்போது அவருக்கு தண்ணீர் பருக வேண்டும் என்ற
எண்ணம் தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைக்க, அது அவர் காதில் விழவில்லை. சிறிது
நேரத்தில் ஒரு சின்ன சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகாபெரியவர் முன்பாக வந்து
தண்ணீர் கேட்டீர்களே என்று கூறி கொடுத்தாளாம். அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை
திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு சிறுமியைக் காணவில்லை.
உடனே யார் அந்த சிறுமி? தண்ணீரை நீங்கள்தான்
சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா? என்று கேட்க, அவர்களோ இல்லையே, அந்த சிறுமி
யாரென்றே தெரியாது என்று வியப்புடன் கூறினார்களாம். மகாப் பெரியவர் சற்றே கண் மூடி
அமர்ந்திருந்தாராம். வந்தது சாட்சாத் அந்த அம்பிகையே என்பதை உணர்ந்து இந்த
இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள் என்று கூறினார்.
உடனே கிராமப் பெரியவர்கள் அந்த இடத்தைத் தோண்ட,
முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும், சண்டிகேஸ்வரி விக்ரகமும்
கிடைக்கப் பெற்று மிகவும் மகிழ்வுற்று அதை ஜகத்குருவிடம் சென்று தெரிவித்தனர். பரம
சந்தோஷம் அடைந்த பெரியவர் விக்ரகபிரதிஷ்ட்டை செய்து அம்பிகைக்கு ஸ்ரீ
வித்யாராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்தை வைத்து வழிபட உத்தரவிட்டார்.
பொது தகவல் :
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன்
முருகன், சண்டிகேஸ்வரி உள்ளனர். கோயில் முன்புறத்தில் ராஜேஸ்வரி அமர்ந்த கோலத்தில்
வீற்றிருக்க, அவருக்கு இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன் ஆகியோர்
உள்ளனர்.
பிராத்தனை :
பக்தர்கள் தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து
விளங்கவும், கல்விச் செல்வத்துடன் பொருட் செல்வமும் பெற்று வாழ பிரார்த்தனை
செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம்
சாற்றி சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக