>>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 17 செப்டம்பர், 2019

    பேராசைப்பட்டால் இதுதான் கதி!



     Image result for பேராசைப்பட்டால் இதுதான் கதி!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


      மருது என்பவன் மிகப்பெரிய வியாபாரி. நல்ல வழியிலும், கெட்ட வழியிலும் பணத்தைச் சம்பாதித்து கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருந்தான். எப்படி சம்பாதித்தாலும், இல்லாதவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும், கோயில் காரியத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை.

    அதேநேரம் தன் விருப்பம் போல எதற்கும் யோசிக்காமல் செலவு செய்வான். வணிக விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு காரில் சென்று வருவான். அப்போது செல்லும் வழியில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். அக்கோயிலில் தவறாமல் பிள்ளையாரை வழிபடுவான். பிரார்த்திக்கும்போது, பிள்ளையாரே! நான் உனக்கு மாதந்தோறும் நூறு தேங்காய் உடைக்கிறேன். ஆனால், எனக்கு நீ மாதந்தோறும் பல லட்சம் பொன் வருமானம் வரும்படி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்வான்.

    பிள்ளையாரும் இவனைக் கவனித்துக் கொண்டே இருந்தார். அவனுக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தார். அந்த கோயில் வாசலில் ஒரு பிச்சைக்காரன் இருப்பான். அவனுக்கும் மனைவி, குழந்தைகள் உண்டு. அவன் பிள்ளையாரிடம்! எப்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ, என் கை, கால்களை முடமாக்கி, பிச்சை எடுக்க வைத்து விட்டாய். இதைக்கொண்டு என் மனைவி, பிள்ளைகளுக்கு கொடுத்து, நானும் சாப்பிட போதவில்லையப்பா! என் பாவங்களை மன்னித்து எனக்கு நல்வழி காட்டு, என கண்ணீர் விட்டு பிரார்த்திப்பான்.

    ஏழையின் கண்ணீர் பிள்ளையாரின் நெஞ்சைக் கரைத்தது. ஒருநாள் வியாபாரி கோயிலுக்கு வந்தான். அப்போது அவன் காதில் மட்டும் விழும்படியாக ஒரு அசரிரீ குரல் ஒலித்தது. நான் தான் பிள்ளையார் பேசுகிறேன். அதோ, இருக்கிறானே, பிச்சைக்காரன். அவனுக்கு இன்று மாலைக்குள் ஓராயிரம் பொற்காசு கிடைக்கப்போகிறது என்று கூறினார்.

    வியாபாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்த பிச்சைக்காரனுக்கு கிடைக்கும் பொற்காசுகள் அனைத்தையும் பறிக்க திட்டமிட்டான். வேகமாக பிச்சைக்காரனிடம் சென்று, ஏனப்பா! உனக்கு எல்லோரும் சாதாரண நாணயங்களைப் போடுகிறார்கள். நான் ஒரு தங்கக்காசு தருகிறேன். ஆனால், இன்று மாலை வரை உனக்கு கிடைக்கும் வருமானத்தை எனக்கு தந்து விட வேண்டும் என்றான்.

    இதைக் கேட்டதும் பிச்சைக்காரனுக்கு மிகவும் சந்தோஷம். மாலை வரை பார்த்தாலும், ஒரு பிடி அரிசி வாங்கக்கூட தேறாத அளவிற்கு தான் சில்லறைகள் விழும். இவனோ தங்கமே தருகிறேன் என்கிறான். இதைக்கொண்டு ஒரு மாதம் மகிழ்ச்சியாக வாழலாம், என கற்பனையில் ஆழ்ந்தான். மாலையும் நெருங்கியது. யாரும் பிச்சைக்காரன் தட்டில் ஆயிரம் பொற்காசைப் போடவில்லை. அவனுக்கு கோபம் வந்து விட்டது.

    உடனே பிள்ளையார் சிலைக்கு அருகில் சென்று, பிள்ளையாரே! பொய்யா சொல்கிறாய். என்னை ஏமாற்றி விட்டாயே, எனக்கூறி அவர் முகத்தில் ஓங்கி அடித்தான். பிள்ளையார் தன் தும்பிக்கையால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தார். இது மற்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால், மற்றவர்கள் அவன் வலி தாங்காமல் அழுததைப் பார்த்து, வியாபாரி பக்தி முற்றி, தன் கஷ்டத்தை அழுது கொண்டே பிள்ளையாரிடம் சொல்வதாக நினைத்துக் கொண்டனர்.

    பிள்ளையார் அவனிடம், நீ உடனே ஆயிரம் பொற்காசை அந்த பிச்சைக்காரனுக்கு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னை இப்படியே கொன்றுவிடுவேன், என்றார். மனமில்லாவிட்டாலும், உயிரைக் காப்பதற்காக, அவன், அங்கிருந்த பக்தர்கள் மூலம் தன் மனைவியை பொற்காசுகளுடன் வரும்படி சொல்லி அனுப்பினான். அவன் மனைவியும் காசுடன் வந்தாள். அவளிடம் பிச்சைக்காரனுக்கு அதை போடும்படி கூறினான். அவள் போட்டதும் பிள்ளையார் பிடியை விட்டார்.

    நீதி :

    இறைவனிடம் காசு பணம் கேட்டு பிரார்த்திப்பதில் தவறில்லை. ஆனால், அது நம் நியாயமான சுய உழைப்பாக இருக்க வேண்டும். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி!

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக