Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் எல்க் மலை

Image result for அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் எல்க் மலை
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 முருகனுக்குப் பின்புறம் கருவறைச் சுவரை ஒட்டி அனந்த சயனக் கோலத்தில் இருப்பதைப் போன்று பெருமாளின் சுயம்பு திருமேனி காணப்படும், அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நீலகிரி மாவட்டம் எல்க் மலை பகுதியில் அமைந்துள்ளது.

இறைவன் : பாலதண்டாயுதபாணி, ஜலகண்டேசவரர்.

இறைவி : ஜலகண்டீஸ்வரி.

தல மரம் : செண்பக மரம்.

தீர்த்தம் : நீலநாரயணதீர்த்தம்.

புராண பெயர் : மான்குன்றம்.

கிராமம்ஃநகரம் : எல்க் மலை.

மாவட்டம் : நீலகிரி.

வரலாறு :

பழனி முருகன் கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர் ஒரு தம்பதியினர். வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் பெருமான் தர பழனிக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்த நினைத்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ பழனிக்கு செல்ல முடியவில்லை. அவர்களது கனவில் வந்த முருகன் இங்குள்ள குன்றில் தமக்கு கோவில் எழுப்புமாறு கூறினார். எனவே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு இங்குள்ள குன்றின் மீது முருகனுக்கு கோவில் எழுப்பி வழிபட்டனர். காலப்போக்கில் அது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக ஆனது. எல்க் வகை மான்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் எல்க் குன்று இருந்த இடம் இப்போது எல்க் கில் என்று அழைக்கப்படுகிறது. மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் கோவில் கொண்டு எழுந்தருளியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

தல பெருமை :

நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலில் தோன்றிய முருகன் கோவில். மலையும் மலை சார்ந்த இடத்தில் குறிஞ்சி கடவுள் முருகனை வழிபடுதல் என்பது இத்தலத்துக்கு கூடுதல் சிறப்பு. முருகன் உள்ள தலத்தில் பெருமாள் எழுந்தருளியிருப்பது விஷேசம். 7500 அடி உயரத்தில் இருக்கும் முருகன் கோவில் இது.

நாற்பது அடி உயரமுள்ள முருகன் சிலையை கோயிலின் இடதுபுறம் காணலாம். இந்தியாவிலேயே அதிக உயரமான முருகன் சிலை இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இதன் அமைப்பு மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையைப் போலவே உள்ளது சிறப்பு.

நாராயண தீர்த்தத்திலிருந்து எடுக்கப்படும் நீர்தான் முருகனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

படுகர் கோவில் கருவறையில் பாறையை ஒட்டினாற்போல் பெருமாள் பள்ளி கொண்டிருப்பது போன்ற தோற்றம் தெரிவது போன்ற சிறப்பம்சம்.

பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோவிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது.

இக்கோயிலில் சித்தி விநாயகர், பத்ரகாளியம்மன், சொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்ட புஜ துர்க்கை, ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஜலகண்டேஸ்வரி தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

பிராத்தனை :

முருகனை மனமுருக வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகின்றன.

மேலும் இத்தலம் அமைந்துள்ள குன்றுக்கு நடந்து செல்லும் போது முருகன் அருளாலும் அழகான இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுப்புற சூழ்நிலையாலும், தூய்மையான காற்றாலும் இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் மூச்சு திணறல், ரத்தகொதிப்பு, கை, கால் மூட்டு வலி போன்ற உடல் ரீதியான பிரச்னைகளும் குணமடைவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக