Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 செப்டம்பர், 2019

அறுபத்தி நான்கு கலைகள் என்றால் என்ன? அவை எது?

 Image result for அறுபத்தி நான்கு கலைகள்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அறுபத்தி நான்கு கலைகள் என்றால் என்ன? அவை எது?
கீழ்க்கண்ட இவையே அறுபத்தி நான்கு கலைகள் ஆகும்.
1. அக்கரவிலக்கணம் (எழுத்து இலக்கணம்)
2. இலிகிதம் (எழுத்தாற்றல்)
3. கணித வல்லமை
4. வேதங்கள் அனைத்தும் குறை இன்றி அறிதல்
5. புராணங்களை அறிதல்
6. வியாகரணம் (இலக்கண அடிப்படையில் பேசுதல் அல்லது கவித்துவமாக பேசுதல்)
7. நீதி சாஸ்திரம் (குற்றத்தை உணர்ந்து நேர்மையான சரியான தண்டனை தருதல்)
8. சோதிட சாஸ்திரம் (சோதிடக் கலையில் வல்லமை)
9. தர்ம சாஸ்திரம் (அனைத்து வகை தர்மங்களையும் அறிதல்)
10. யோக சாஸ்திரம் (யோக கலைகள்)
11. மந்திர சாஸ்திரம் (மந்திரக் கலை)
12. சகுன சாஸ்திரம் (சகுனங்களை கொண்டு நடக்கப்போவதை உணர்தல்)
13. சிற்ப சாஸ்திரம் (தத்ரூபமாக சிலைகளை வடித்தல்)
14. வைத்திய சாஸ்திரம் (மருத்துவ முறைகள் அனைத்தையும் அறிதல்)
15. உருவ சாஸ்திரம் (ஒருவர் உடலில் உள்ள மயிர் பல் போன்ற அவர்களுக்குடைய உடலுடன் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு சிறிய பொருளை வைத்து அவர்களின் உருவத்தையே கணித்து விடுவது அல்லது வரைந்து விடுவது)
16. இதிகாசம் மற்றும் இசை தாளங்கள் அறிதல்
17. காவியம் படைத்தல்
18. அலங்காரக் கலை
19. மதுரபாடனம் (இனிமையாக பேசி மயக்குதல்)
20. நாடகம் எழுதுதல்
21. அனைத்து வகை நாட்டியம் அறிதல்
22. சத்தப்பிரமம் (ஒலி நுட்ப அறிவு)
23. வீணை வாசித்தல்
24. வேணு வாசித்தல் (புல்லாங்குழல் வாசித்தல்)
25. மிருதங்கம் வாசித்தல்
26. சமையல் கலை அறிதல்
27. அத்திரப்பரீட்சை (வில் ஆற்றல் அல்லது தனுர் வித்தை)
28. கனகபரீட்சை (பொன்னை சோத்தித்து அறியும் அறிவு)
29. ரத பரீட்சை (தேர் பயிற்சி. இன்றைய காலகட்டத்தில் திறமையாக கார் ஓட்டுவதை கூட சொல்லலாம்)
30. கசபரீட்சை (யானை மீது ஏறி திறமையாக அதனை கையாளுதல்)
31. சுவபரீட்சை (குதிரை மீது ஏறி திறமையாக அதனை கையாளுதல்)
32. இரத்தினப் பரீட்சை (நவரத்தினங்கள் சம்மந்தமான அறிவு)
33. பூமிப் பரீட்சை (மண் பற்றியும் புவியியல் பற்றியுமான அறிவு)
34. சங்கிராம இலக்கணம் (போர் பயிற்சி)
35. மல்யுத்தம் (கை கலப்பு)
36. ஆகர்ஷணம் (அழகாய் தன்னை காண்பித்து பிறரை கவர்தல்)
37. உச்சாடணம் (மந்திரத்தால் ஒருவரை கட்டுப்படுத்துதல்)
38. வித்து வேஷணம் (ராஜ தந்திரம் அல்லது பகையாளியை உறவாடிக் கெடுக்கும் கலை)
39. மதன சாத்திரம் (மாற்றுப் பாலினத்தவர்களை மயக்கும் கலை)
40. மோகனம் (புணரும் கலை அல்லது காம சாஸ்திரம்)
41. வசீகரணம் (வசியக் கலை)
42. ரசவாதம் (பொன்னை தங்கமாக மாற்றுதல் அல்லது ஒரு பொருளின் தன்மையை வேறு ஒரு உயரிய பொருளின் தன்மையாக மாற்றுதல்)
43. காந்தருவவாதம் (இன்னிசை பாடுவது)
44. பைபீலவாதம் (மற்ற உயிரினங்களின் பாஷையை அறிதல்)
45. கெளுத்துக வாதம் (சூழ்நிலையை மகிழ்ச்சியாக மாற்றுதல்)
46. தாது வாதம் (நாடியை கொண்டு நோய் அறிதல் ஒருவர் இயல்பை உணர்தல்)
47. காருடம் (பொய்க்கு இடையே உண்மையை எளிதில் கண்டு அறியும் கலை)
48. நட்டம் (தீயவற்றை முன்பே கிரகித்து சொல்லுதல்)
49. முட்டி (மறைத்து வைத்து இருப்பதை கண்டு அறிதல்)
50. ஆகாயப் பிரவேசம் (வான் எல்லையை கடந்து பிற உலகம் செல்லுதல்)
51. ஆகாய கமணம் (வான் வழியே பிரயாணித்தல்)
52. பரகாயப் பிரவேசம் (கூடு விட்டு கூடு பாய்தல்)
53. அதிரிசயம் (தன்னைப் பற்றி நன்கு அறிதல்)
54. இந்திர ஜாலம் (மாய வித்தைகளை அறிதல்)
55. மகேந்திர ஜாலம் (உருவத்தை மாற்றுதல் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுதல்)
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பில் நடக்கும் வித்தை. நெருப்பை நம் இஷ்டப்படி ஆட்டி வைத்தல்)
57. ஜலத் ஸ்தம்பம் (நீரை நம் விருப்பப்படி கையாளுதல். சமுத்திரத்தையே நம் இஷ்டப்படி ஆட்டி வைத்தல்)
58. வாயு ஸ்தம்பம் (காற்றை நம் இஷ்டப்படி கட்டுப்படுத்துதல்)
59. திட்டி ஸ்தம்பம் (கண் கட்டி வித்தை - ஒருவர் கண்களை கட்டி நடக்காத ஒன்றை அவர் முன் நடப்பதாக புலன்களை கொண்டு நம்பவைத்தல்)
60. வாக்கு ஸ்தம்பம் (ஒருவரை பேச விடாமல் நாவை கட்டுதல்)
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தை கட்டுப்படுத்தி குண்டலினி சக்தியை எழுப்புதல்)
62. கன்ன ஸ்தம்பம் (புதையல் போன்ற செல்வங்களை அவை இருக்கும் இடங்களை உணர்ந்து சொல்லுதல்)
63. கட்க ஸ்தம்பம் (நம் மீது ஆயுதம் எறிய தயாராகும் ஒருவரை. நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவர் கைகளை கட்டுதல் அல்லது சிலை போல ஆக்குதல் )
64. அவத்தைப் பிரயோகம் (பில்லி சூனியம் ஏவல் என்றெல்லாம் கொச்சையாக அழைக்கப்படும் அக்கால பீதாம்பர் வித்தை. ஒருவர் திறன்கள் புலன்கள் உணர்வுகளை பதுமையில் அடக்கி பதுமை மூலமாக அவரை கட்டுக்குள் வைப்பது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக