சனி, 7 செப்டம்பர், 2019

புஜங்காசனம்

Image result for புஜங்காசனம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

வடமொழியில் 'புஜங்கா' என்றால் பாம்பு என்று பொருள். இந்த ஆசனம் பார்ப்பதற்கு பாம்பு படமெடுப்பதுபோல இருப்பதால் இதற்கு 'புஜங்காசனம்' என்று பெயர்.

செய்முறை:
  •  முதலில் குப்புறப்படுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பின்னர் கைகளை மடக்கி உடலோடு ஒட்டியபடி மார்புக்கு அருகில் இரு புறத்திலும் வைத்துக்கொள்ளவும்.
  •  பின்னர் மூச்சை நன்றாக உள் இழுத்தபடி தலை, கழுத்து, மார்பு, வயிறு போன்ற உறுப்புகளை தரையில் இருந்து மேலே உயர்த்தி உங்களால் இயன்றவரை உடலை பின்னோக்கி வளைக்கவும்.
  •  இப்பொழுது அடிவயிறானது தரையை அழுத்தியபடி இருக்க வேண்டும். அடிவயிற்றுப்பகுதியை தரையில் இருந்து மேலே தூக்க கூடாது.
  •  மேலும், கால்கள் நன்றாக நீட்டப்பட்டும், முழங்கால்கள், குதிகால்கள் மற்றும் கால் பெருவிரல்கள் அருகருகிலும் இருக்க வேண்டும்.
  •  இதே நிலையில் சுமார் ஐந்து இயல்பான சுவாசங்கள் செய்துவிட்டு, பின்னர்
  • மூச்சை வெளிவிட்டுக்கொண்டே வயிறு, மார்பு மற்றும் தலையை தரையை நோக்கி இறக்க வேண்டும்.
பலன்கள்:
  •  முதுகெலும்பு நன்றாக வளையும் தன்மையை பெறுகிறது.
  •  மார்புப் பகுதி நன்றாக விரிவடைவதால் ஆழ்ந்த சுவாசத்திற்கு வழிவகுக்கிறது.
  •  மார்பு, கைகள் மற்றும் தண்டுவடப்பகுதிகள் பலம் பெறுகின்றன.
  •  முதுகுவலி, மார்புச்சளி, மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
  • மேலும் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வர என்றும் இளமையோடு இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்