இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விழுப்புரத்திலிருந்து
ஏறத்தாழ 40கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து ஏறத்தாழ 155கி.மீ தொலைவிலும்,
கடலூரிலிருந்து ஏறத்தாழ 90கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய கோட்டைதான்
செஞ்சிக்கோட்டை.
சிறப்புகள் :
தென்னிந்தியாவில்
வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, சிறந்த சுற்றுலாத்தலமாக
விளங்குகிறது.
இந்தியாவில்
இருக்கும் மிகப்பழமையான கோட்டைகளுள் ஒன்றாக புகழப்படுவது செஞ்சிக்கோட்டைதான்.
செஞ்சிக்கோட்டையில்
உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி,
நெற்களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை,
தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டிடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
இந்த
அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக்குளம் ஒன்றும் உள்ளது. இக்கோட்டைக்கான
அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது
சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன.
வியப்பில்
ஆழ்த்தும் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட
கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை.
கோட்டையைப்
பார்த்துவிட்டு வெளியே வரும்போது நாம் இந்த நூற்றாண்டை அடைந்துவிட்டோம் என்ற
உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.
ராஜகிரி
மலை மீது பல அற்புதங்களை கொண்ட கலைநயத்துடன் விளங்கும் கட்டிடங்கள், கலைநயம் மிக்க
கோயில்கள், சுனை நீர், இழுவை பாலம், மணிக்கூண்டு, பீரங்கி என அற்புதமான இடங்களை
கோட்டையின் மீது ஏறிச் சென்று பார்த்து பரவசம் அடையலாம்.
நம்
முன்னோர்களின் கட்டிட கலைகளை சிறப்பிக்கும் விதமாக இக்கோட்டை அமைந்துள்ளதால்
சுற்றுலா வருபவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும்.
எப்படி செல்வது?
விழுப்புரத்திற்கு
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து மற்றும் ரயில்
வசதிகள் உள்ளன.
விழுப்புரத்
செஞ்சிக்கோட்டைக்கு பேருந்து மற்றும் வாடகை வாகனங்களின் மூலம் செல்லலாம்.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
விழுப்புரம்
மற்றும் செஞ்சியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக