இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றான
அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேரெழுந்தூர் அமைந்துள்ளது.
மூலவர் : தேவாதிராஜன், ஆமருவியப்பன் கோவில்
உற்சவர் : ஆமருவியப்பன்
அம்மன் : செங்கமலவல்லி
தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி, காவிரி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர் : திருவழுந்தூர்
தல வரலாறு :
ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான்
(தாயம்) விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தார். காய்
உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு சாதகமாக கூறினார்.
அதனால் சிவனுக்கு கோபம் வந்து பசுவாக மாறும்
படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாறியவுடன், துணைக்கு சரஸ்வதியும், லட்சுமியும் பசுவாக
மாறி பூமிக்கு வந்தார்கள். இவர்களை மேய்ப்பவராக பெருமாள் 'ஆ"மருவியப்பன் என்ற
திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சி செய்கிறார்.
தலப் பெருமை :
இத்தலத்தில் மட்டுமே திருமங்கையாழ்வார்
தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோவிலுக்கு
நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோவில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான்
ஆடிய மண்டபம் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார்.
தலப்பெயர் விளக்கம் :
உபரிசரவசு என்ற மன்னன் வானில் உலா வரும்
போது, தேரின் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான். இவன்
மேலே சென்றபோது அதன் நிழல் கண்ணனின் மீதும், அவர் மேய்த்துக்கொண்டிருந்த பசுக்களின்
மீதும் பட்டது. பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன்.
அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது.
அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் தேரெழுந்தூர் ஆனது.
கருட விமானம் :
ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு
விமானத்தையும், வைரமுடியையும் கொடுத்து, '108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது
உகந்ததோ, அதை கொடுத்து விடு" என்றான். அதன்படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில்
உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்துவிட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு விமானத்தை
கொடுத்தார் கருடன். இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது. அத்துடன் கருடன் பெருமாளின்
அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது.
பொது தகவல் :
மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால்
கண்ணனின் நிறம் கொண்ட கல்லானவர் மூலஸ்தானத்தில் பார்வதி பசு வடிவில் உள்ளார். மார்க்கண்டேய
முனிவர் பிறவா வரம் பெற, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே
வைத்துக்கொண்டார்.
பக்த பிரகலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார்.
மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
மூலவரின் மேல் உள்ள விமானம் கருட விமானம். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர்
ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.
திருவிழா :
வைகாசி திருவோணத்தில் பிரம்மோற்சவம், நவராத்திரி,
வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி ஆகியன முக்கிய திருவிழாக்கள்.
பிராத்தனை :
ஆணவத்தை அடக்கும் பெருமாளை, கால் நடை தொழில்
செய்பவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். மேலும் இங்கு திருமணத் தடை நீங்கவும் பக்தர்கள்
பிரார்திக்கின்றன.
நேர்த்திக்கடன் :
பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக