இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில்
ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல்
திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.
மூலவர்
: ஸ்ரீவைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்).
உற்சவர்
: ஸ்ரீகள்ளப்பிரான்.
அம்மன்
: வைகுந்த நாயகி, சோரநாத நாயகி.
தீர்த்தம்
: தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்.
பழமை
: 1000-2000 வருடங்களுக்கு முன்.
ஊர்
: ஸ்ரீவைகுண்டம்.
மாவட்டம்
: தூத்துக்குடி.
தல வரலாறு :
சோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத
சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத்தொழில் நின்று போனது. வருந்திய
பிரம்மா, மகாவிஷ்ணுவை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார்.
அவருக்குக் காட்சி தந்த சுவாமி, அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார்.
பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளி, 'வைகுண்டநாதர்" என்ற திருநாமம்
பெற்றார்.
பால்பாண்டி தென்னகத்தில் குறிப்பாக மதுரை,
திருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு
சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பல ஆண்டுகளுக்கு
முன், இக்கோவில் வழிபாடின்றி மறைந்து போனது. சுவாமி சிலையும் ஆற்றங்கரையில்
ஓரிடத்தில் புதைந்திருந்தது.
இவ்வேளையில் இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை
பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய
மன்னன், அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு கோவில் எழுப்பினான்.
அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான்.
இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில்
இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பாண்டியன் பால்
அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கும் 'பால்பாண்டி" என்ற
பெயர் ஏற்பட்டது.
தலபெருமை :
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ
சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது.
ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு
வழிபடப்படுகிறது.
நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம்
சூரியனுக்குரியது. மகாவிஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது
கயிலாயம்.
பிராத்தனை :
பக்தர்கள்
பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை
வணங்குகின்றனர், ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக
இங்கு வேண்டிக்கொள்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக