Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 செப்டம்பர், 2019

பெருமை தாங்கல !

 Related image

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற பள்ளி. வசதிபடைத்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் அதிகம் படிக்கும் மெட்ரிக் பள்ளி. இந்தப் பள்ளியில் படிக்க சீட் கிடைத்தாலே போதும், இதை விடப் பெரிய கௌரவம் வேற இல்லை, என்று சாமானியன் முதல் பெரும் பெரும் கோடிஸ்வரர்கள் வரை நினைப்பதுண்டு.

என் பிள்ளையும் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறான் என்று சொல்லிக் கொள்வதில் எத்தனைப் பெருமை. தனிமையில் கூட சொல்லிப் பார்த்துக் கொள்வார்கள். நண்பர்கள், உறவினர்களைப் பார்க்கும் போது தன்னுடைய பிள்ளை பிரின்ஸ் டெ;ரிக் பள்ளியில் படிக்கிறான் என்பதைச் சொல்லி பெருமை அடைவதற்காகவே, உங்கள் பிள்ளைகள் எந்த ஸ்கூலில் படிக்கிறார்கள் என்று கேட்பதுண்டு.

ஜீன் மாதம், குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக வீடுவீடாகச் செல்கிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். அவர்களைப் பார்த்தாலே ஏதோ பிள்ளை பிடிப்பவன் தெருவிலே அலைவதைப் போல் பார்க்கிறார்கள் பெற்றோர்கள். ஏதோ பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தருகிறோம் என்ற பெயரில் அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் அயோக்கிளர்களாகத்தான் தெரிகிறார்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் அதுமட்டுமல்ல எங்கள் குழந்தைகள் அரசு பள்ளியிலே படிக்கிற அளவுக்கு நாங்கள் தரங்கெட்டா வாழ்கிறோம். எங்கள் பிள்ளைகளும் மெட்ரிக் பள்ளியில் படித்தால் தானே எங்களுக்கும் கௌரவம், என்பதை பெற்றோரின் பார்வையிலும், பேச்சிலும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். மெட்ரிக் பள்ளிகளின் மூலதனமே இந்த கௌரவம் தானே.

மாசாணம், மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர். அருகில் நல்ல தமிழ் வழி பள்ளி இருந்தும் மெட்ரிக் பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும், அங்கு படித்தால் தான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதில் நம்பிக்கை வைத்திருப்பதை விட சமூகத்தில் நல்ல மரியாதை இருக்கும் என்பதே இவரின் தீர்க்கதரிசனம். அதனாலதான் அவருடைய இரண்டு பிள்ளைகளும் மெட்ரிக் பள்ளியில், அதுவும் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஒரு குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டும் போது கஷ்டம் இருந்தாலும் பெரிதாகப் பாதிக்கவில்லை. இரண்டாவது குழந்தையை இரண்டரை வயதில் ப்ரி கேஜியில் சேர்த்த பின்னர் தான் அச்சில் பிடிக்க ஆரம்பித்து. எத்தனை கஷ்டம் வந்தாலும் உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள், மாவட்டத்திலேயே பெஸ்ட் ஸ்கூல் இதுதான் என்று சொல்லும் போது பீஸ் கட்ட முடியாமல் தவிக்கிற தவிப்புக்கெல்லாம் தற்காலிக திரை விழும்.

மாசாணத்தின் மூத்த பையன் அரவிந்த் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். இளைய பையன் முகேஷ் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்கூல் துவங்கிவிட்டிருந்தது காலையில் முதல் பீரியட். வகுப்பாசிரியை வகுப்பிற்குள் நுழைந்தார். வந்ததும் முதல் வேலையாக அரவிந்த் ஸ்டேண்ட் அப் என்றார். அரவிந்த் எழுந்தான். முகம் வாட்டமாக இருந்தது. மற்ற மாணவர்களும் மாணவிகளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரவிந்த் நீ மனசில என்ன நினைச்சிக்கிட்டு இருக்க? மூன்று மாசமா ஸ்கூல் பீஸ் கட்டல. கேட்டா நாளைக்கு மிஸ்.. நாளைக்கு மிஸ்ன்னு சொல்ற. இன்னும் இரண்டு நாள்தான் கிரேஸ் டேய்ஸ் இருக்கு. அதற்குள்ளாக மூன்று மாத பீஸ் மொத்தமா கட்டிடு. இல்லனா உன்னை ஸ்கூல்ல இருந்து நிப்பாட்டிடுவாங்க. இதுக்கு மேல நீ எந்த ஸ்கூல்லயும் சேர முடியாது. ஏன்னா இது லாஸ்ட் டேம். இது வரைக்கும் நீ எந்த மாசமும் ஒழுங்கா பீஸ் கட்டினது இல்ல.

அரவிந்த் தலையை குனிந்தபடி குறுகிப்போய் நிற்கிறான். மற்ற மாணவர்கள் தன்னை ஏளனமாகப் பார்கிறார்களே என்று நினைக்கும் போது மனம் விம்மியது. நிமிர்ந்து பார்;க்க முடியாமல், ஏன் நிமிர்ந்து கூட நிற்க முடியாமல் பாலைவன ஒற்றைத் தாவரம் போல் வாடி நின்றான்.

நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ ஒன்றும் சொல்லாமல் பேசாம நின்னுக்கிட்டிருக்க. பீஸ் கட்ட முடியலனா நீயெல்லாம் எதற்கு, இங்கிலீஸ் மீடியம் ஸ்கூல்ல சேரனும். கவர்மென்ட் ஸ்கூல் எத்தனை இருக்கு. அங்க போய் சேர வேண்டியது தான. இங்க ஸ்கூல் என்ன தர்மத்துக்கா நடத்துறாங்க, என்றார் ஆசிரியை.

அன்று மாலை ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு போனதும் வழக்கம் போல் மௌனமாக இருந்தான். தம்பி முகேஷ் அருகில் வந்தான். அண்ணா ஸ்கூல்ல பீஸ் கேட்டு திட்டுனாங்களாண்ணா என்றான் முகேஷ். காய்ந்த சறுகாக இருந்தது முகேஷின் முகம். இல்லடா முகேஷ் ஏன் கேக்கிற.

எங்க கிளாஸ் மிஸ் என்னைத் திட்டினாங்கண்ணா. நீயெல்லாம் ஏண்டா இந்த ஸ்கூலுக்கு வர்ற. கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க வேண்டியதுதானன்னு கோபமா திட்டுனாங்கண்ணே.

ப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னையே பார்த்துக்கிட்டு இருந்தாங்களா எனக்கு அழுகையே வந்துடுது. அழுதுட்டேன்னு சொல்லி முடிப்பதற்குள் அரவிந்த் கண்ணில் இருந்து சரசரவென்று வந்;தக் கண்ணீரை ஸ்கூல் பேக்கிலிருந்து புக்கைத் தேடி எடுப்பது போல் பாவணை செய்து திரும்பி உட்கார்ந்து கண்ணீரைத் துடைத்தான். தெருப் பைப்பில் தண்ணீர் பிடிக்கச் சென்ற அரவிந்தின் அம்மா தண்ணீர் குடத்துடன் வந்தார். பிள்ளைகளைப் பார்த்ததும் அப்பவே வந்துட்டீங்களா? சரி சரி புக்கை எடுத்து படிங்க. ஹோம் ஒர்க் பண்ணங்க, அம்மா உங்களுக்குக் காபி போட்டு எடுத்திட்டு வாறேன் என்று சமையல் கட்டுக்குள் நுழைந்தார் ராஜம்மாள்.

இரண்டு கப் காபியோடு வந்த ராஜம்மாள் அரவிந்துக்கும், முகேஷீக்கும் கொடுத்துவிட்டு, டேய் காபிய குடிச்சிட்டு ஹோம் ஒர்க் பண்ணுங்க. வெளியில போய் மற்ற பிள்ளைகளோடு விளையாண்டிங்கன்னா இல்லாத கெட்ட பழக்கமெல்லாம் வந்திடும்.

தெருவில் விளையாடுகிற மற்ற பிள்ளைகளைப் பார்க்கும் போது தெரு நாய்களாகவே தெரிந்தது ராஜம்மாளுக்கு. அதனால் தன்னுடைய குழந்தைகளை தெருவில் மற்ற பிள்ளைகளோடு விளையாட அனுமதிப்பதேயில்லை.

அடுத்த நடை தண்ணீர் பிடிப்பதற்காக ராஜம்மாள் இரண்டு குடங்களை எடுத்துக் கொண்டு பைப்படிக்குச் சென்றாள். நான்கைந்து குடங்களுடன் இரண்டு பெண்கள் தண்ணீர் பிடித்தக் கொண்டிருந்தனர்.

கயிற்றை இரண்டாக மடித்துக் கட்டிக் கொண்டு அதற்குள் நான்கு சிறுவர்கள் நுழைந்து கொண்டு இங்கும் அங்குமாக வளைந்து வளைந்து ஓடிக் கொண்டே ரயில் வருது, ரயில் வருது ஊ..ஊ…. தடக்,தடக்.. தடக்,தடக்… என்று கத்திக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்;தனர்.

இரண்டு சிறுவர்கள் பைக் டயரை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவனது டயர் தண்ணீர் பைப் அருகில் வர லாவகமாகத் திருப்பி கார் போல் ஒலி எழுப்பிக் கொண்டே ஓடினான்.

ராஜம்மாள் அருகில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த மற்ற பெண்களிடம், பாருங்கக்கா, இந்த பிள்ளைகள் பண்ற அநியாயத்த, இப்படியா பிள்ளைகள் விளையாடும். மேல வந்து விழுகிற மாதிரி போறான். வீட்ல கண்டிக்கவே மாட்டாங்க போல. ஒரு டீசன்டே இல்லாமப் போச்சு. இந்தக் கவர்மெண்ட் ஸ்கூல்ல என்னதான் சொல்லிக் கொடுப்பாங்களோ, அடங்கமாட்டேங்குதுங்க.

ஆமா ராஜம்மா, உன் பிள்ளைகள வெளிய பாக்கவே முடியரதுல்ல. ஸ்கூலுக்கு போகும் போது மட்டும் தான் வெளிய வர்றாங்க. அப்படி எனன் தான் செய்றாங்க வீட்டுக்குள்ள?

எக்கா ரெண்டு பேரும் வந்தவுடனே படிக்க உட்கார்ந்து விடுவாங்க. ஹோம் ஒர்க் பண்ணுவாங்க. அதுக்கே அவங்களுக்கு நேரம் சரியா இருக்கும். அப்புறம் பிராஜெக்ட் அது இதுன்னு பிசியாவே இருப்பாங்க. தெருவுல்லாம் போய் விளையாடிப் பழக்கமில்ல.

அண்ணே உங்க மிஸ் உங்ககிட்ட பீஸ் பற்றி ஏதும் பேசலியாண்ணே?

கேட்டாங்கடா, பீஸ் கட்டலியான்னு கேட்டாங்க. நெக்ஸ்ட் வீக்ன்னு சொன்னேன். ஓகேன்னுட்டாங்க.

வேலைக்கு போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த அரவிந்தின் அப்பா மாசாணம். தனது மொபட்டை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். வந்ததும் வராததுமாக முகேஷ் பள்ளியில் நடந்ததையெல்லாம் அப்பாவிடம் அப்பாவியாக கூறினான். வேலையை முடித்துவிட்டு களைப்பாக வீட்டிற்கு வரும் மாசணத்திற்கு கிளுகிளுப்பு இல்லாவிட்டாலும் ஒரு கலகலப்பாவது இருக்க வேண்டாமா? ஒரு சின்ன கலகலப்பு பெரிய களைப்பபையே போக்கிவிடுமே. களைப்பை உடலில் தேக்கிக் கொண்டு, கவலையை மனதில் உறைய வைத்துக் கொண்டே சொன்னார், நெக்ஸ்ட் வீக் பீஸ் கட்டிடலாம்டா. நீங்க ஹோம் ஒர்க் பண்ணிட்டீங்களா என்றவர் ராஜம்மாவின் என்னங்க, வந்துட்டீங்களா என்ற குரலுக்கு திரும்பினார்.

ராஜம்மா ஒரு கப் காபி குடும்மா என்று மாசானம் கேட்கவும், அதோ பிளாஸ்க்கில் காப்பி போட்டு வச்சிருக்கேன் ஊத்திக் குடிங்க என்;றாள்.

காப்பியை குடித்துக் கொண்டே மாசானம் சொன்னார், ஏய் ராஜம் பிள்ளைங்களுக்கு பீஸ் கட்டனும், கையில காசு இல்ல என்ன செய்றதுன்னும் தெரியல என்றார்.

அரவிந்தும், முகேஷீம் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தாலும் பெற்றோர் பேசுவதையும் கேட்க தவறவில்லை.

பிள்ளைகள் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதையும் கவனிக்க மாட்டார்கள் என்று மாசணமும், ராஜம்மாளும் குடும்பப் பிரச்சனைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஏங்க முதல்ல குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுங்கங்க. ஏன் ஸ்கூல் பீஸ் கட்டாம இருக்கீங்க என்று உச்ச தொனியில் கேட்டாள் ராஜம்மாள்.

என்னடி நிலவரம் தெரியாம உளர்ற. வாங்குற சம்பளம் குடும்பச் செலவுக்கும் இதர செலவிற்கும் போதல. கம்பெனியில் என்னென்ன லோன் போட முடியுமோ அத்தனையும் போட்டு இதுவரைக்கும் பீஸ் கட்டியாச்சு. போதக் குறைக்கு உன்னுடைய நகையெல்லாம் அடகு வச்சும் பீஸ் கட்டியாச்சு. நானும் எவ்வளவோ முயற்சி பன்னிட்டேன். கேட்காதவன்ட்ட எல்லாம் கடன் கேட்டுப் பார்த்துட்டேன். நாளைக்கு பார்க்கலாம்ன்னு கூட சொல்லமாட்டேங்குறாங்க. இல்லன்னு முடிவாவே சொல்லி விடுறாங்க. ஸ்கூல்ல இருந்து டெய்லி எனக்கு போன் போட்டு பீஸ் கட்டுங்க இல்லன்னா டீசிய வாங்கிட்டுப் போய் வேற ஸ்கூல்ல சேருங்கங்கிறாங்க. இப்ப இடையில டீசிய வாங்கிட்டு தமிழ் மீடியம் கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்தா நம்மள காரித் துப்பமாட்டாங்க இந்த தெருகாரங்க. அதனால எப்படியாவது பிள்ளைகள இந்த இங்கிலீஸ் மீடியம் ஸ்கூல்லயே படிக்க வச்சிடனும். அதனால,

அதனால என்று இழுத்தாள் ராஜம்மாள், அதனால உன் தாலி செயின கழட்டி தா. அடகு வச்சி ஸ்கூல் பீஸ் கட்டுவோம். பிறகு எப்படியாவது திருப்பிக் கொள்ளலாம்.

ஏங்க இதுவரைக்கும் நம்ம பீஸ் கட்டுறதுக்காக அடகு வச்ச நகையை எதாவது திருப்பியிருக்கோமா. எல்லா நகையும் வட்டி வட்டிக்கு மேல வட்டின்னு முங்கி போய் விட்டது. இருக்கிறது இந்த தாலி செயின் மட்டும் தான். இதையும் அடகு வச்சிட்டா இந்தத் தெருவில நான் தலையக் காட்ட முடியுமா. சொந்த பந்தங்க வீட்டு விஷேசங்களுக்த்தான் போக முடியுமா? இது வரைக்கும் அடகு வச்ச நகையில ஒரு குண்டு மணி தங்கம் கூட திருப்ப முடியாத நீங்க, எப்படிங்க தாலிச் செயின அடகு வைக்க கேட்கலாம். இது ஒன்னாவது கிடந்துட்டுப் போகட்டுமே.

பின்ன பீஸ்கட்டாம எப்படிடீ படிக்க வைக்கிறது பிள்ளைகள.

எப்படியாவது பீஸ் கட்டிப் படிக்க வையுங்க. அதுக்காக கவர்மென்ட் ஸ்கூல்லயா பிள்ளைகள கொண்டு போய் சேர்க்க முடியும்.

அப்பா நாங்க கவர்டிமன்ட் ஸ்கூல்லயே போய் படிக்கிறோம்பா.

டேய் அரவிந்த் நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க. உங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம். உங்கள படிக்க வைக்க வேண்டியது அதுவும் பிரின்ஸ் இங்கிலிஸ் மீடியம் ஸ்கூல்ல படிக்க வைக்க வேண்டியது எங்க கடமை. அங்க படித்தால் தான் உங்க எதிர்காலம் நல்லா இருக்கும். கௌரவமா இருக்கும். சமுதாயத்தில் நல்ல மரியாதையும் இருக்கும்.

அப்பா ஸ்கூல்ல ரொம்ப கேவலமாய் பேசுறாங்கப்பா மிஸ். இரண்டு நாள்ல பீஸ் கட்டலனா ஸ்கூல்ல இருந்து நிப்பாட்டிடுவாங்களாம். கிளாஸ்ல மற்ற பசங்களும் எங்கிட்ட சரியாப் பேசமாட்டேங்கிறாங்கப்பா. எனக்கு ஸ்கூலுக்கே போகப் பிடிக்கலைப்பா. என்னால அங்க படிக்கவும் முடியலைப்பா அவமானமா இருக்குப்பா. அப்பாவுக்குப் பயந்து தயங்கித் தயங்கி அலை அலையாக வந்து வந்து திரும்பிய அழுகையை அடக்க முயன்று தோற்றான் அரவிந்த். டேய் நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க. போங்க என்றதும் முகேஷீம், அரவிந்தும் தார்சாவிலிருந்து ரூமுக்குப் போய்விட்டார்கள் தூங்க. ஏங்க இப்ப என்னங்க செய்றது.

என்ன செய்றதுன்னு நீதான் சொல்லனும். சம்பளத்தில பாதி லோனுக்கே போய்டுது. எல்லா லோனும் ஸ்கூல பீஸ் கட்டுறதுக்குப் போட்டதுதான்.

சரிங்க இந்த டேம்க்கு தாலிய அடகு வைத்து பீஸ் கட்டிடலாம். அடுத்த டேம் பீஸ் கட்டுறது எப்படி.

அதுவரைக்கும் நாம இப்படியே வா இருந்திடப் போறோம். அடுத்த டேம் பீஸ் கட்ட ஏதாவது வழி பிறக்காமலாப் போகும். அத அப்போ பார்த்துக்கலாம்.

அப்போ பார்த்துகலாம் அப்போ பார்த்துகலாம்ன்னு எல்லா நகையும் அடகு கடைக்குப் போனது தான் மிச்சம். கடைசியா இப்போ தாலியில வந்து நிக்குது. எனக்கு என்னமோ நாம தப்பு பண்ணிட்டோமோன்னு நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு கூட முடிக்கல்ல அதுக்குள்ள… அரவிந்தும், முகேஷம் படுத்துத் தான் கிடந்தார்கள். தூக்கம் வரவில்லை. முழித்துக் கொண்டே அப்பாவும், அம்மாவும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே கிடந்தார்கள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. முகம் இருக்கமாக இருந்தது. பொறியில் சிக்கிய எலியாக மனம் துடித்தது. அரவிந்துக்கு.

ஒரு பிள்ளைன்னா பீஸ் ஈசியா கட்டிடலாம். இரண்டு பிள்ளைகளுக்கும் பீஸ் கட்டனும்ங்கிறதாலத்தான் இப்போ கஷ்டமா இருக்கு என்று மாசானம் சொல்லி முடிப்பதற்குள்.

ஏங்க அதுக்காக ஒரு பிள்ளைய இங்கிலீஸ் மீடியத்திலும், ஒரு பிள்ளையை கவர்மென்ட் ஸ்கூல்லயுமா சேர்க்க முடியும்.

இப்போது அரவிந்தும், முகேஷம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆமாடி, கவர்மென்ட் ஸ்கூல்ல பிள்ளைகள சேர்க்கலாம்ன்னு நினைச்சி கூட பார்க்க முடியல. தீடீர்ன்னு இப்போ போய் டி.சி. யை வாங்கிட்டுப் போய் கவர்மென்ட் ஸ்கூல்ல சேத்தா சுத்தி இருக்கிற ஜனங்க என்ன சொல்வாங்க, கேவலமாப் பேசி சிரிப்பாங்களே. இதுவரைக் கட்டிக்காப்பாத்தி வந்த நம்ம அந்தஸ்தும், மரியாதையும் காற்றுல பறக்குமே. அத நெனச்சாத்தாண்டி எனக்கு மன நிம்மதியே போய்டுது.

ஏங்க நமக்கு தேவை நம்ம குழந்தைங்க படிப்பு. நமக்கு நிம்மதி. நீ என்ன சொல்ற எனக்கு புரியலையே.

சொல்றதுக்கு கஷ்டமாத்தான் இருக்குங்க. ஆனா வேற வழியில்ல. பிள்ளைகங்க டி.சி.ய பிரின்ஸ் மெட்ரிக் பள்ளியில இருந்து வாங்கிட்டு வந்து கவர்மென்ட் ஸ்கூல்ல சேர்த்து விடுவோம்.

ஏய் வாய மூடுடி. வெளியில தலைய காட்டமுடியாது. இப்ப நீ தூங்க போ. மணி பன்னிரெண்டத் தாண்டிடுது. காலைல யோசிக்கலாம்.

இருவரும் தூங்க போனார்கள், தூக்கம் போன பிறகு.

அரவிந்தும், முகேசும் அம்மா சொன்ன யோசனையை கேட்டு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். இருவர் முகத்திலும் சிறு பிரகாசம் தெரிந்தது. முக இருக்கம் சற்று தளர்ந்ததால் தூங்கிவிட்டார்கள்.

இப்போது மாசாணமும் அவரது மனனவியும் குழப்பத்தில் தூக்கம் இன்றி தவித்தார்கள். காலையில் எழுந்ததும் மாசானம் தெரு முனையில் இருந்த டீ கடைக்கு போய் டீ குடித்தார். டீ குடித்துக் கொண்டே அருகில் இருந்தவர் கையில் இருந்த நாளிதழில் உள்ள தலைப்புச் செய்திகளைப் பார்த்தார். அதில் இருந்த ஒரு செய்தியும் தலைப்பும் இவரின் கவனத்தை சற்று ஈர்க்க உள்ளே வாசித்தார். தெளிவு பிறந்தவராய் ஜந்து ரூபாய் கொடுத்து ஒரு நாளிதழ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்தார். நடையில் ஒரு மிகுக்கு தெரிந்தது. நாளிதழை மனைவியிடம் கொடுத்து செய்தியைக் காட்டினார் மாசாணம்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நிருபர்கள் அடுக்கடுக்hக பல கேள்விகள் கேட்கின்றனர் சார் நீங்க ஏன் சார் உங்க குழந்தையை கவர்மென்ட் ஸ்கூல்ல சேக்கிறீங்க. உங்க வசதிக்கும், வருமானத்திற்கும் இன்டர் நேசனல் ஸ்கூல்ல சேர்க்கலாம். இன்டர்வியூ வைக்கமாலேயே ஸ்கூல்ல சேர்த்துக்குவாங்க. உங்க குழந்தையால அந்த ஸ்கூல்லுக்கு பெருமை மட்டுமல்ல நல்ல விளம்பரமும் கூட. அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னார். உங்க எல்லாரின் கேள்விகளும் எனது பதில், நம்முடைய தாய்மொழி தமிழ். அதனால தமிழில் தான் சிந்திக்க முடியும்.

அதற்காக ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவில்லை. நமக்குத் தாய்மொழி தமிழ் நம்முடைய கண்கள் மாதிரி. ஆங்கிலம் நமக்குக் கண்ணாடி மாதிரி. தேவையான போது கண்ணாடியை மாட்டிக் கொள்ள வேண்டும். தேவையில்லாத போது கழற்றி வைத்து விட வேண்டும்.

பள்ளிக்கூடத்தால மாணவன் பெருமையடைவதை விட, ஒரு மாணவனால் அவன் படிக்கும் பள்ளி பெருமையடைய வேண்டும். அது தான் சிறப்பு. அது தான் மதிப்பு. ஏனென்றால் நான் தமிழ் வழி பள்ளிக்கூடத்தில் படித்தவன்.

மாவட்ட ஆட்சித் தலைவரின் பேட்டியைப் படித்ததும், மனதில் தெளிவு பிறந்தது மாசாணத்திற்கும் அவரது மனைவிக்கும். அரவிந்தும், முகேஷீம் பள்ளிக்கூடத்திற்கு கிளம்பி நின்றார்கள். டே அரவிந்த் அப்பா என்ன சொல்றேன்னா...

அப்பா நீங்க ஒன்னும் செல்ல வேண்டாம், இங்கிலீஸ் மீடியம் ஸ்கூல்ல இருந்து டி.சி.யை வாங்கிட்டு நம்ம ஸ்கூல்ல நம்ம அரசு தமிழ் வழி பள்ளிக்கூடத்தில சேர்த்து விடுங்க. தமிழ் வழி கல்வி என்பது நமது வாழ்க்கை. ஆங்கில வழி கல்வி என்பது பிழைப்பு.

பிழைப்பு என்பதில் இரண்டாவது இரு எழுத்தை நீக்கிவிட்டுப் பாருங்க. அதைத்தான் நாம இதுவரை செய்துக்கிட்டு இருந்தோம். அதைப்போல வாழ்க்கை என்கிற தமிழ் வழியில் உள்ள கடைசி இரண்டு எழுத்தை நீக்கிவிட்டுப் பாருங்க. வாழ், இனிமே தான் நாம வாழப்போறோம்.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக