Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

புள்ளிமான் தெரியும்... வண்ணமயமாக காட்சியளிக்கும்.. புள்ளி ஏரி..!




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



 இந்த பூமியில் பல அதிசயங்களும், மர்மங்களும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அவற்றில் சில நமக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கின்றன.

 ஏரி என்பது நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். ஏரிகளை பொதுவாக நாம் கிராமப் பகுதிகளில் அதிக இடங்களில் காணலாம். நம்முடைய தண்ணீர் பயன்பாட்டிற்கு அதிகமாக ஏரி பயன்படுகிறது.

 ஏரியின் அமைப்புகள் பொதுவாக பல வடிவத்தில் இருக்கும். அந்த பகுதி முழுவதும் நீரால் சூழப்பட்டு இருக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், ஒரு அதிசயம் என்னவென்றால் இந்த ஏரி புள்ளி போன்ற வடிவத்தில் காட்சியளிக்குமாம்... இதை உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் உண்மைதான். புள்ளி வடிவில் ஏரி இருக்குமா? இது சாத்தியமா? வாருங்கள் அதைப் பற்றிப் பார்க்கலாம்.

எங்கு அமைந்துள்ளது இந்த புள்ளி ஏரி?

 புள்ளி ஏரி கனடா நாட்டில் கொலம்பியாவில் அமைந்துள்ளது. இதனை 'ஸ்பாட்டட் லேக்" என்றும் அழைப்பார்கள். மருத்துவக் குணம் கொண்ட ஏரியாகவும் புள்ளி ஏரி திகழ்கிறது.

 அங்குள்ள மக்கள் இந்த ஏரியை புனிதமாக கருதி மதிக்கின்றனர். இந்த ஏரியின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் பல்வேறு புள்ளிகள் கொண்ட ஏரியாக காட்சியளிப்பதுதான்.

இதுபோல வண்ணமயமான புள்ளிகளைக் கொண்டுள்ள ஏரி உலகில் வேறு எங்குமே கிடையாது. சில விலங்குகளின் உடலில் புள்ளிகள் இருப்பது போல இந்த ஏரியும் புள்ளி மயமாக நம் கண்களுக்கு காட்சியளிக்கும்.

 உலகிலேயே அதிக தாது வளம் கொண்ட ஏரியாகவும் பல்வேறு தாதுக்கள் வெவ்வேறு  மருத்துவ குணம் வாய்ந்தவைகளாகவும் உள்ளன.

 பல புள்ளிகளைக் கொண்டுள்ள இந்த ஏரியின் ஒவ்வொரு புள்ளியும் பள்ளங்களைக் கொண்டுள்ளது. இந்த பள்ளம் ஒவ்வொன்றிலும் பலவகை தாதுக்கள் நிரம்பியுள்ளன.

இந்த ஏரி புள்ளி வடிவமாக இருப்பதற்கான காராணம் :

 இந்த ஏரியில் உள்ள நீர் கடலோடு அல்லது மற்ற நதிகளோடு கலப்பதில்லை. ஏரியில் உள்ள நீர் ஆவியாகி விடுகின்றன. மலைக்காலத்தில் தேங்கும் நீர் கோடைக்காலத்தில் ஆவியாகின்றன. அவ்வாறு நீரின் பெரும் பகுதிகள் ஆவியாகும்போது, எஞ்சியிருக்கும் பகுதிகளில் ஏராளமான தாதுக்கள் ஆங்காங்கே சிறிது நீருடன் சேர்ந்து பள்ளங்களாக தேங்குகின்றன. அவைதான் இந்த ஏரியின் புள்ளிகளாக காட்சியளிக்கின்றன.

புள்ளி ஏரியைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கலாம் மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஏரியில் இறங்கி குளிக்கக்கூடாது. இந்தப் பகுதி தற்போது மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக