இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய காலங்களில் குழந்தைகளுக்கு
விளையாட்டு மீதான ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்றுச்சொல்லலாம். ஆனால் அவர்கள்
விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குவதில்லை என்பதுத்தான் உண்மை.
தொழில்துறை நம்மை மொபைல்போன்களில்
வசப்படுத்தி விட்டதால், தெருக்களில் சிறுவர், சிறுமியர் விளையாடும் காலம் போய்
வெறிச்சோடி காணப்படுகிறது.
அப்படி நாம் மறந்த பாரம்பரிய
விளையாட்டுகளுள் ஒன்றான, குழந்தைகள் விரும்பி விளையாடும் தீமூட்டி விளையாட்டை
பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
பல பேர் ஒன்றாக சேர்ந்து இந்த
விளையாட்டை விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் இந்த விளையாட்டை
விளையாடுவதற்கு முன்பு அம்மாவாக ஒரு சிறுமியை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
பின்பு விளையாடும் குழந்தைகள்
அனைவரும் ஒரு இடத்தில் வட்டமாக உட்கார்ந்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு உட்கார்ந்த பின்பு அம்மாவாக
இருக்கும் சிறுமி தன் இடக்கையை விரித்து வைத்துக் கொண்டு வலது கையால் தோசை சுட
வேண்டும்.
அப்போது குழந்தைகள் அனைவரும்
ஒன்றுசேர்ந்து 'தோசை வெந்ததா?" என்றுக் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு
அம்மாவாக இருக்கும் சிறுமி இன்னும் இல்லை என்று பதில் கூற வேண்டும்.
மீண்டும் குழந்தைகள் இதே மாதிரி 'தோசை
வெந்ததா?" என்றுக் கேள்வி கேட்க, அம்மாவாக இருக்கும் சிறுமி 'வெந்தாச்சு"
என்று பதில் சொல்லியவாறு, குழந்தைகளிடம் தோசை எண்ணி அடுக்குவது போல் காண்பித்து
சற்று தூரம் போய் நின்றுக் கொள்ள வேண்டும்.
மறுபடியும் வந்து பார்க்கும்போது தோசை
காணாமல் போய்விடும், அந்தச் சிறுமி குழந்தைகளிடம் கேட்பாள்.
தோசை எங்க?
காக்கா கொண்டு போச்சு...
காக்கா எங்க?
மரத்துல..
மரம் எங்க?
வெட்டி முறிச்சாச்சு..
வெட்டி முறிச்ச விறகு எங்க?
எரிச்சாச்சு..
எரிச்ச சாம்பல் எங்க?
பாத்திரம் பூசியாச்சு..
பாத்திரம் எங்க?
ஆடு விழுங்கியாச்சு..
ஆடு எங்க?
வெட்டித் தின்னாச்சு..
என்று குழந்தைகள் அனைவரும் பதில்
கூறுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக