இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு
பெறுவதற்கான கட்டணம் விரைவில் உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் புதிய
மின்இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடைசியாக கடந்த 2004ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது.
அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்த
நிலையில், மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு மின்சார
ஒழுங்குமுறை ஆணைய மாநில ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இந்த
கூட்டத்தில் கட்டணம் உயர்வு குறித்து முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக
கூறப்படுகிறது. இதன்படி, வீட்டு உபயோக சிங்கிள் பேஸ் ஒரு கிலோவாட் பயன்படுத்தும்
வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 200 முதல் 1000 வரை பாதுகாப்பு கட்டணம் உயரலாம்
என்றும் இதே மூன்று பேஸ் இணைப்பு பெறுவோருக்கு கட்டண உயர்வு என்பது ஒரு
கிலோவாட்க்கு ரூபாய் 600 முதல் 1800 வரை உயர வாய்ப்பு என்றும் தெரிகிறது.
இதேபோல் புதிய மின்
இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர
வாய்ப்பு உள்ளது. தற்போது வணிகரீதியான பயன்பாட்டிற்கு ஒரு கிலோவாட் புதிய மின்
இணைப்பிற்கு 500 ரூபாய் இருக்கும் கட்டணம் 2000 ரூபாயாக உயரக்கூடும். உயர்ந்த மின்
இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோவாட் தற்போது 800
ரூபாய் என்று உள்ள நிலையில், 3100 ரூபாயாக உயர உள்ளதாம்.
தற்போது மின்சார பிரச்னை
ஏற்பட்டால் மின் ஊழியர்கள் வந்து ஆய்வு செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
ஆனால் இனிவரும் காலங்களில் ஆய்வு செய்வதற்கு வீட்டு உபயோக இணைப்புக்கு 580 முதல்
1920 வரை கட்டணம் வசூலிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளது. இதேபோல் 3 பேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு 3,810 ரூபாய் வரை கட்டணம்
வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம்.
பொதுமக்களிடம் கருத்து
கேட்டபிறகு கட்டண உயர்வு அமலுக்கு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக