இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகளுக்கு
விளையாட்டு என்பது அவர்களின் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் விதமாகவும், உடல்
நலத்திற்கு ஆரோக்கியம் தரும் விதமாகவும் அமைந்திருக்கிறது. சில குழந்தைகள்
மந்தத்தன்மையாக இருந்தாலும் விளையாட்டு என்று சொன்னால் உற்சாகம் அடைந்து
விடுவார்கள்.
நாம் இன்று ஒரு புதிய விளையாட்டான
குழந்தைகளுக்கு குதூகலமாக இருக்கும் தந்தி போவுது... தபால் போவுது... விளையாட்டைப்
பற்றி பார்க்கலாம்.
எத்தனை
பேர் விளையாடலாம்?
பல
பேர்.
எப்படி விளையாடுவது?
முதலில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு
தலைவர் ஒருவரைத் தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.
பிறகு மீதமுள்ள நபர்கள் அனைவரும் வட்டமாக
உட்கார்ந்து கொள்ள வேண்டும். அதன்பின் தலைவராக இருக்கும் நபருக்கு தெரியாமல்
வட்டமாக அமர்ந்து இருக்கும் நபர்கள் மணியாங்கல்லை கைமாற வேண்டும்.
கல் கைமாறும்போது குழந்தைகளுக்கு இடையே நிகழும்
உரையாடல் பாடல்,
தந்தி
போவுது...
தபால்
போவுது...
என்று
திரும்ப திரும்ப அமர்ந்து இருக்கும் குழந்தைகள் அனைவரும் சொல்ல வேண்டும்.
அவ்வாறு சொல்லும்போது ஒருவர் கையில் கல்
தங்கிவிட்டால், அவர் அடுத்த நபரிடம் கல் கொடுத்து விட்டது போல் நடித்துக் காட்ட
வேண்டும்.
இப்படி விளையாடும்போது மணியாங்கல் யாரிடம்
உள்ளது என்பதை கல் வைத்திருப்பவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
பிறகு
மூன்றாவது ஆட்டம் விளையாடுவதற்கு முன்பு தலைவர் எந்த நபரிடம் கல் உள்ளது என்பதைச்
சரியாகச் சொல்ல வேண்டும்.
தலைவர் கல் வைத்திருக்கும் நபரைச் சொல்லாவிட்டால்
அவரை குனிய வைத்து விளையாடும் நபர்கள் அனைவரும் முதுகில் ஆளுக்கொரு தட்டு தட்ட
வேண்டும்.
ஒருவேளை கல் வைத்திருக்கும் நபரை தலைவர்
கண்டுபிடித்துவிட்டால் கல் யாரிடம் இருக்கிறதோ அந்த நபரை குனிய வைத்து முதுகில்
அனைவரும் தட்ட வேண்டும்.
இவ்வாறு
ஆட்டம் முடிந்த பின்பு மீண்டும் புதியதாக ஒரு நபரைத் தேர்வு செய்து அடுத்த
ஆட்டத்தை தொடங்க வேண்டும்.
பலன்கள் :
புத்திக்கூர்மை
ஏற்படும்.
சிந்திக்கும் திறனை மேம்படுத்தும்.
இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக