இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விழாக்காலங்கள்
மற்றும் வீட்டில் கொண்டாடும் பண்டிகைகள், நிகழ்ச்சிகளில் அனைவரும் ஒன்றுகூடி
விளையாடும் விளையாட்டுகள் ஏராளம் இருக்கின்றன. இவ்வாறு அனைவரும் சேர்ந்து
விளையாடும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது, புத்துணர்ச்சி கிடைக்கிறது, உடல்
ஆரோக்கியம் மேம்படுகிறது.
இவ்வாறு
அனைவரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் இசை நாற்காலி. இந்த
விளையாட்டை பற்றி இங்கு காண்போம்.
எத்தனை
பேர் விளையாடலாம்?
எத்தனை
பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில்
எத்தனைபேர் விளையாடுகிறோமோ அத்தனை நாற்காலிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்
மைதானத்தில் நாற்காலிகளை வெளிப்புறமாக பார்த்தவாறு போடவேண்டும். நபர்களின்
எண்ணிக்கையை விட ஒரு நாற்காலி குறைவாக இருக்க வேண்டும்.
பின்
நாற்காலிகளை சுற்றி சிறிது தூரம் தள்ளி வட்டம் ஒன்றை வரைய வேண்டும். போட்டியில்
கலந்து கொள்பவர்கள் வட்டத்திற்கு வெளியே நின்று கொள்ள வேண்டும்.
போட்டிக்கு
தயாரானவுடன் இசை(பாட்டு) ஒலிக்கப்படும். பாட்டு சத்தம் கேட்டதும் போட்டியாளர்கள்
வட்டத்தை சுற்றி ஓட வேண்டும். இவ்வாறு பாட்டு சத்தம் நிறுத்தப்படும் வரை
ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
பாட்டு
சத்தம் நின்றவுடன் அனைவரும் நாற்காலியை நோக்கி ஓடி அமர வேண்டும். இதில்
நாற்காலியில் அமராத நபர் அவுட் ஆவார். அவுட்டான நபர் வெளியே சென்றுவிட வேண்டும்.
இவ்வாறாக
விளையாட்டு தொடரும். இறுதியாக ஒருவர் மட்டுமே இந்த விளையாட்டில் வெற்றிபெற
முடியும்.
பலன்கள் :
உடலுழைப்பு
கிடைக்கும்.
ஓடுவது,
உட்காருவது, கவனிப்பது போன்றவை இந்த விளையாட்டில் அதிகம்.
உடல்
பருமனுடைய குழந்தைகள் இளைக்க வாய்ப்பு உண்டு.
கால்
தசைகளுக்கு வலு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக