Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 செப்டம்பர், 2019

ஒளிரும் பனிக்குகைகள் !!

 Image result for அலாஸ்காவில் உள்ள பனிப்பிரதேசத்தில் அமைந்துள்ளது.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் பல அதிசயங்கள் நிறைந்த உலகில் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மர்மங்களும், ஆச்சரியங்களும் உள்ளன.
 பல அதிசயங்கள் நமக்கு தெரியாத வகையிலும், நம்மை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கும் அமைந்துள்ளது.
 நாம் புகைப்படங்களிலும், திரைப்படங்களிலும் காணும் அனைத்து அதிசயங்களும் உண்மையில் உள்ளதா? என்ற வியப்பை ஏற்படுத்தும்.
 உலகில் நம்ப முடியாத பல அதிசயம் நிறைந்த இடங்களில் ஒன்றை பற்றிதான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
 பொதுவாக பனிப்பாறைகள் என்றாலே பார்ப்பதற்கு அழகாக இருக்கும்...
குளிராக இருந்தாலும் நாம் பனிக்கட்டிகளை எடுத்து விளையாடுவோம்... அந்த பனிப்பாறையே ஒரு குகையாக காட்சியளித்தால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா?
 மேலும் இந்த பனிப்பாறைகள் அழகாக காட்சியளிப்பது மட்டுமல்லாமல் ஒளிரும் பனிக்குகையாக இருந்தால் இன்னும் நம்மை கவருமல்லவா?.....
 ஒளிரும் பனிக்குகைக்குள் ஒரு அருவி இருந்தால் எப்படி இருக்கும்... கேட்கவே அதிசயமாகவும், ஆர்வமாகவும் இருக்கிறதல்லவா?
 இத்தனை சிறப்பம்சம் கொண்ட பனிக்குகை அலாஸ்காவில் உள்ள பனிப்பிரதேசத்தில் அமைந்துள்ளது.

  ஏறத்தாழ ஏழு மீட்டர் உயரம் கொண்ட இந்த குகைதான் மேற்கண்ட சிறப்பம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.
இந்த அழகிய குகைகள் சூரிய ஒளியில் உள்ள நிறங்களில் இளநீல நிறத்தைத் தவிர மற்ற அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக் கொள்வதால்தான் இளநீல நிறத்தில் மட்டும் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
 இந்த பனிக்குகைகள் வளைவாகவும், அழகாகவும் காணப்படுவதால் அனைவரையும் தன்பக்கம் ஈர்த்து கொள்கிறது...
 பளிங்கு போல் காட்சியளிக்கும் இந்த குகை உலகில் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ளது.
மேலும் புகைப்படக் கலைஞர்களும் இங்கு வந்து ஒளிரும் பனிக்குகையையும், அதில் உள்ள அருவியையும் பார்த்து வியப்பில் ஆழ்ந்து செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக